எனது திருச்சி தொகுதியில், Young Indians மற்றும் தளிர் இணைந்து திருச்சி, எம்.எம்.நகர், Sowdambikaa world school அரங்கில் நடத்திய, பல்வேறு பள்ளிகளின் பயிலும் மாணவர்கள் பங்கேற்ற Young Indians Parliament 2026 - Trichy Chapter நிகழ்ச்சியை இன்று (28.06.2026) காலை 9:30 மணியளவில் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினேன்.
ஜனநாயகம், தலைமைத்துவம் மற்றும் பொதுச் சேவை குறித்த புரிதலை இளம் தலைமுறைக்கு ஏற்படுத்தும் இந்த சிறந்த முயற்சிக்காக Young Indians அமைப்பிற்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
இன்று நீங்கள் ஒரு போட்டியில் பங்கேற்பவர்கள் மட்டுமல்ல; நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பை ஏற்று, சட்டங்கள் எவ்வாறு உருவாகின்றன, விவாதங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன, ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள் என்று மாணவ மாணவியரிடம் எடுத்துரைத்தேன்.
கடந்த 24 மாதங்களாக உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவத்தில், நாடாளுமன்றம் என்பது அரசியல் செய்வதற்கான இடம் மட்டுமல்ல; மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் உயரிய மேடை என்பதைக் கற்றுள்ளேன் என்பதை பகிர்ந்துகொண்டேன்.
அப்போது, அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தை சுருக்கமாகப் பகிர்ந்துகொண்டேன்.
அதன் பிறகு இந்த இரண்டு ஆண்டுகளில் நான் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக ஆற்றிய பணிகளை தொகுத்து விளக்கமாக மாணவர்கள் முன் எடுத்துக்கூறி உரையாற்றினேன்.
இறுதியாக, தலைமைத்துவம் என்பது அதிகாரத்தைப் பற்றியது அல்ல; பொறுப்பையும் பொதுச் சேவையையும் பற்றியது என்று கூறி, Young Indians Parliament 2026 நிகழ்வில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை வழங்கினேன்.
இன்றைய இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாளைய பொறுப்புமிக்க தலைவர்களாக உயர வேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்தினேன்.
என் உரைக்கு பிறகு, மாணவர்கள் பலதரப்பட்ட கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு நான் விளக்கமாக பதிலளித்து அவர்களை உற்சாகப்படுத்தினேன்.
அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) மறுமலர்ச்சி திமுக 28.06.2026




