வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடு

ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடு

தலைவர் வைகோ அவர்களின் உரைகள், கட்டுரைகள், கடிதங்கள் நூல்களாக வெளிவந்த வரலாற்றுடன், 30 ஆம் ஆண்டு நிறைவு விழாவை 17.07.2026 அன்று சென்னை எழும்பூர் சீராஜ் மகாலில் சங்கொலி கொண்டாடுகிறது.

'சங்கொலி' இதழில் வெளிவந்த தலைவர் வைகோ அவர்களின் உரைகள், கட்டுரைகள், கடிதங்கள் முதலானவைகள், நூற்றுக்கணக்கான சிறு நூல்களாக கழகத் தோழர்களால் வெளியிடப்பட்டன. தங்கள் மணவிழாக்களில், தாம் பூலகத்திற்கு மாற்றாக அவைகளை உறவினர்களிடம் வழங்கும் 'அமைதிப் புரட்சியை' கழகத் தோழர்கள் ஆரவார மின்றி நிகழ்த்தி சாதனை படைத்தார்கள்.

சங்கொலியின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய க.திருநாவுக்கரசு, சங்கொலி இதழில் 18 வாரங்களாக எழுதிய திருக்குறள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் 'திருக்குறளும் திராவிடர் இயக்கமும்' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. தலைவர் வைகோ அவர்களின் அணிந்துரை, 'சிந்தனையாளன்' இதழ் ஆசிரியர் அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களின் சிறப்புரை ஆகியன இந்நூலுக்கு மகுடம் சூட்டியது! 1997 பிப்ரவரியில் இந்நூல் வெளிவந்தது!

பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் எழுச்சி மிகு உரைகளைப் போலவே, அவரின் 17 கடிதங்களையும் சங்கொலி இதழில் வெளியானதை கடலூர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க 2003 ஜுலைத் திங்களில் வைகோவின் கடிதங்கள்-1 என்ற 104 பக்கங்கள் கொண்ட நூலாக 20 ரூபாய் விலையில் வெளியிட்டது.

நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா, திராவிட இயக்க மூத்த தலைவர் இரா.செழியன், நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, எழுத்தாளர்கள் ராஜ்நாராயணன், வல்லிக்கண்ணன், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார் முதலான அறிஞர் பெருமக்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

பிரெஞ்சு நாட்டின் புகழ்பெற்ற தளபதி ஆல்ஃபிரட் ஃடிரேபஸ் மீது பழி சுமத்தப்பட்டு குற்றம் அற்ற வனாக அவன் மீண்ட வரலாறு, ஈழத்துயாரம் குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதங்கள், கழக கண்மணிகளுக்கு இயக்கம் குறித்து எழுதிய கடிதங்கள் என சங்கொலி இதழில் வெளிவந்த தலைவர் வைகோவின் 14 கடிதங்கள், வைகோ கடிதங்கள்-2 என்ற பெயரில், ஆந்திர மாநில நெல்லூர் கழகத் தோழர்கள் 2007 ஆம் ஆண்டு ஜுன் திங்களில் வெளியிட்டார்கள். விழுப்புரம் நகரில் 30.06.2007 அன்று நடைபெற்ற கழக மண்டல மாநாட்டில் இந்நூல் வெளியிடப்பட்டது.

பொடா சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் 222 ஆம் எண் கொட்டடியில் தண்டனை பெற்ற 19 மாத காலகட்டத்தில், சங்கொலி இதழில், தன் கண்மணிகளுக்கு தலைவர் வைகோ எழுதி 61 கடிதங்கள்தான், 'சிறையில் விரிந்த மடல்கள்' என்ற தமிழ் நூலும், From the Portals of a Prison என்ற ஆங்கில நூலும் ஆகும்.

கவிஞர் தமிழ்மறவன், ஆ.வந்தியத்தேவன், கவிஞர் மா.மணிவேந்தன் ஆகியோரின் சங்கொலி படைப்புக்களை, அரசியலில் அதிசய பிம்பமாக விளங்கும் பெரியாரின் போர்வாள் அண்ணா, நம்மால் விடியும் என்ற தலைப்புக்களில் தலைமைக் கழகமே நூலாக்கி வெளியிட்டது. தலைவர் வைகோ நூலாசிரியர்களைப் பாராட்டி, வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார். சங்கொலி 30 ஆம் ஆண்டு நிறைவு விழா 17.07.2026 அன்று மாலை 4 மணிக்கு சென்னை எழும்பூர் சீராஜ் மகாலில் நடைபெறுகிறது.