இன்று (14.07.2026) காலை 10.30 மணி அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்தினேன்.
எனது தலைமையில் நடைபெற்ற நான்காவது DISHA கூட்டத்தில், திருச்சி மக்களின் நீண்டகால கோரிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் நான் வலியுறுத்திய முக்கிய கோரிக்கைகள்:
• திருச்சி மாநகராட்சி UGD பணிகளை காலக்கெடுவிற்குள் நிறைவு செய்ய வேண்டும்.
• ஸ்ரீரங்கம் – மேலூர் கொள்ளிடம் கரைவழிச் சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும்.
• கண்ணுடையான்பட்டியில் புதிய கால்நடை மருத்துவ நிலையத்திற்கு விரைவில் நிர்வாக அனுமதி வழங்க வேண்டும்.
• மன்னார்புரம் – பஞ்சப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
• ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு காவிரி மற்றும் கொள்ளிடம் படித்துறைகளை சீரமைத்து தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
• திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு கூடுதல் நுழைவுப் பாதை மற்றும் அணுகுச்சாலைகளை விரைந்து அமைத்து, ஆயிரக்கணக்கான பயணிகள் பாதுகாப்பாகவும் எளிதாகவும் நிலையத்தை பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
• மாரிஸ், அரிஸ்டோ, டவுன் ஸ்டேஷன் உள்ளிட்ட ரயில்வே மேம்பாலப் பணிகளை காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும்.
• திருச்சியில் முன்மொழியப்பட்ட மூன்று உயர்மட்ட மேம்பாலத் திட்டங்களை மீண்டும் உயிர்ப்பித்து செயல்படுத்த வேண்டும்.
• மாவட்ட கனிம அறக்கட்டளை (DMF) நிதி ஒதுக்கீட்டில் மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரைகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
திருச்சி மக்களின் நலனையும், மாவட்டத்தின் வளர்ச்சியையும் முன்னிறுத்தி தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். மக்கள் நலன் சார்ந்த இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.
அன்புடன், துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் - திருச்சி





