வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

சங்கொலி இதழின் தொடக்க ஆண்டுகளில் அண்ணா நினைவு, ராணி அண்ணா நேர்காணல், வைகோ பதில்கள் பகுதி, தேர்தல் சிறப்பு மலர், மற்றும் பொதுச்செயலாளர் வைகோ எழுதிய திராவிட இயக்கத்தின் 80 ஆண்டுகள் போன்ற முக்கிய தொடர்கள் வெளியிடப்பட்டன. மேலும், புரட்சிப்புயல் உள்ளிட்ட கழக இதழ்களின் வளர்ச்சிக்கும் சங்கொலி முக்கிய பங்காற்றியது. பின்னர் திராவிட இயக்க இதழ்கள் குறித்த கருத்தரங்குகளிலும் சங்கொலி பாராட்டப்பட்டதுடன், ஐந்தாம் ஆண்டு முதல் கருத்துப் படங்களும் (கார்ட்டூன்கள்) தொடர்ந்து இடம்பெறத் தொடங்கின.

சங்கொலி இதழின் இரண்டாம் இதழில் (09.02.1996) அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, மாணிக்க சண்முகம் எழுதிய, 'அண்ணாவின் கடைசி நாட்கள்' என்ற சிறப்புக் கட்டுரை வெளியானது. அறிஞர் அண்ணா அவர்கள், முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல், அண்ணாவின் மறைவு, அண்ணா மறைவுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் அண்ணாவின் அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்ச்சிகள் இவைகளின் தொகுப்பாக அண்ணாவின் பெருமைமிகு நினைவுகளை அக்கட்டுரை படம்பிடித்துக் காட்டியது. இதன் அடுத்த இதழில் இருந்து (16.02.1996) வைகோ பதில்கள் என்ற பகுதி வெளிவந்தது. தோழர்களின் அய்ய வினாக்களுக்கு, பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் அறிவார்ந்த விடைகள் வாசகர்களால் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டன. அதன் அடுத்த திங்களில் அப்போது நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மதுரையில் கழகம் தேர்தல் சிறப்பு மாநாட்டினை நடத்தியது. அந்த மாநாட்டில், சங்கொலி வெளியிட்ட தேர்தல் மாநாட்டு, சிறப்பு மலர், 10 ரூபாய் விலையில், 80 பக்கங்களுடன் (30.03.1996) வெளியிடப்பட்டது. தேர்தல் தொடர்பான பல்வேறு அரிய தகவல்களின் தொகுப்பாக இந்த மலர், மலர்ந்து மணம் பரப்பியது! சங்கொலியின் முதல் மலர் இதுதான்! இதற்கடுத்து, இரண்டு திங்களில், அறிஞர் அண்ணாவின் அன்புத் துணைவியார், அண்ணியார் ராணி அண்ணா அவர்கள் (06.05.1996) இயற்கை எய்திய துயரம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, 17.05.1996 சங்கொலி இதழ், அண்ணியார் ராணி அண்ணா அவர்கள் நம்நாடு பேசுகிறது வார இதழில் (1989) அளித்த நேர்காணலை பெருமையுடன் வெளியிட்டது. அண்ணா அவர்கள் அண்ணியாரை பெண்பார்க்க வந்தது தொடங்கி, அவர்களின் திருமணம் வரையிலான அனைத்து நிகழ்வுகளையும், அந்த பேட்டியில், அண்ணியார் அவர்கள் மனம் திறந்து பேசியதை படித்த வாசகர்கள் மனம் நெகிழ்ந்து மகிழ்ச்சியில் திளைத்தார்கள். முதல் ஆண்டின் நிறைவு காலத்தில், நவம்பர் 29 நாளிட்ட இதழில் இருந்து, "திராவிட இயக்கத்தின் 80 ஆண்டுகள்" என்ற கட்டுரைத் தொடரை பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் எழுதத் தொடங்கினார். திராவிட இயக்கத்தின் 80 ஆண்டு கால வரலாற்றினை, சுயமரியாதை இயக்க நீதிக்கட்சி வரலாற்றில் இருந்து தொடங்கி, கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை, பட்டியலிட்டுக் காட்டும் பொதுச்செயலாளரின் கட்டுரைத் தொடர், திராவிட இயக்க வரலாற்று ஆவணமாக வாரந்தோறும் வெளிவந்தது. க.திருநாவுக்கரசு அவர்களின் 'அண்ணாவின் திமுக' கட்டுரைத் தொடர் சங்கொலியில் வெளிவந்த நிலையில், பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தன் கட்டுரைத் தொடரை பெருந்தன்மையுடன் நிறைவு செய்து கொண்டார். முதலாண்டு சங்கொலி இதழ்களில், 'ஏவுகணை', 'புரட்சிப்புயல்' என்ற தலைப்புகளில், வெளிவந்து கொண்டிருந்த கழக இதழ்கள் குறித்த விளம்பரங்கள் இடம்பெற்று இருந்தன. 'புரட்சிப்புயல்' என்ற இதழ் மாத இதழாக சா.சல்மான்பாரிசு என்பவரை ஆசிரியராகவும் கோ.குப்புக்கண்ணன் என்பவரை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு வெளிவந்தன. தாம்பரம் நகர செயலாளர் வீ.பழனி, செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் நன்மாறன், நகர்மன்ற உறுப்பினர் கே.ஆர்.தாமோதரன், குபேரா ஜெய்சங்கர், ஆர்.சிவராமகிருஷ்ணன், சா.ஜவஹர் ஆகியோரை ஆசிரியர் குழுவாக கொண்ட 'புரட்சிப்புயல்' ஏடு ஓராண்டு வெளிவந்து, முதலாம் ஆண்டு நிறைவு விழாவையும், தலைவர் வைகோ அவர்களை அழைத்து தாம்பரத்தில் நடத்தியது. இது தொடர்பாக சிறப்பு மலர் ஒன்றையும் 'புரட்சிப்புயல்' ஏடு வெளியிட்டது. 1998 ஆம் ஆண்டு, பிப்ரவரி 6, 7 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்க ஏடுகள் தொடர்பான கருத்தரங்கத்தில் உரையாற்றிய சிந்தனையாளன் இதழ் ஆசிரியரும் மா.பெ.பொ.க. பொதுச்செயலாளருமான அறிஞர் வே.ஆனைமுத்து அவர்கள், அக்கருத்தரங்க நிகழ்வில் சங்கொலி, புரட்சிப்புயல் ஆகிய ஏடுகளை காட்டி, தன் உரையினை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது ஆகும்! 'சங்கொலி' 5 ஆம் ஆண்டு இதழில் இருந்து இதழ் தோறும் எண்ணற்ற கருத்துப் படங்கள் (கார்ட்டூன்) இடம்பெற்றன.

ஆ. வந்தியத்தேவன்
ஆ. வந்தியத்தேவன்கொள்கை விளக்கச் செயலாளர்

கொள்கை விளக்கச் செயலாளர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்