இன்று (17-07-2026)புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற 4வது மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் இணைத் தலைவராக பங்கேற்று, ஒன்றிய அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய தேவையான பல முக்கிய கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தேன்.
கூட்டத்தில் நான் வலியுறுத்திய முக்கிய அம்சங்கள்:
- விசலூர் – வேந்தன்பட்டி துணை மின் நிலையப் பணிகளை காலக்கெடுவுடன் தொடங்கி விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
2)கீரனூரில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் – 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரத்தை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கடிதம் வழங்கினேன் உடனடி நடவடிக்கையாக அரசமரம் வெட்டப்படாமல் பாதுகாக்கப்பட்டது. மேலும் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை, விளையாட்டு மைதானம், கோயில் குளம் சீரமைப்பு, நில ஆவணங்கள் ஆய்வு மற்றும் பள்ளி அருகிலுள்ள மதுபானக் கடைகள் குறித்து உடனடி நடவடிக்கை.
3)கீரனூர் ரயில் நிலையத்தில் கழிப்பறை, இருக்கைகள், மேற்கூரை, வடிகால், CCTV, High Mast Light உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
4)புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை 2026 டிசம்பருக்குள் தரமாக நிறைவேற்ற வேண்டும்.மேலும் Pay & Use கழிப்பறை வெளியே அமர்ந்து டோக்கன் கொடுக்கும் வயதான பெண்மணி மழை மற்றும் வெயிலில் இருப்பதை ஆய்வின் போது பார்த்தேன். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டேன். தற்பொழுது மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் அந்தப் பெண்மணிக்கு மேற்கூரை அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தேன்.
5)கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை விரைந்து உருவாக்க வேண்டும்.
6)MPLADS நிதியில் அமைக்கப்படும் RO குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிரந்தர கான்கிரீட் கட்டுமானத்துடன் தரமாக அமைக்கப்பட வேண்டும்.
7)திருச்சி – காரைக்குடி நான்கு வழிச்சாலை, கருவேப்பிலான் மேம்பாலம் மற்றும் திருவப்பூர் ரயில்வே மேம்பாலத் திட்டங்களை விரைவுபடுத்த ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.
மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் அடிப்படை வசதிகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நீண்டகால வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் காலதாமதமின்றி, உயர்தரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எனது தொடர்ச்சியான வலியுறுத்தலாகும்.
அன்புடன், துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர், திருச்சி மறுமலர்ச்சி திமுக.





