கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான நூல் வெளியீட்டு விழா வருகிற 04.08.2026 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ள 02.08.2026 அன்று இரவு 10 மணிக்கு, சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து தொடர்வண்டியில் புறப்பட்டு, 04.08.2026 காலை புது டெல்லி அடையும் வகையிலும் நிகழ்ச்சி முடிந்து, 05.08.2026 இரவு 9 மணிக்கு டெல்லியில் இருந்து தொடர்வண்டியில் புறப்பட்டு, 07.08.2026 காலை சென்னை திரும்பும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இரயில் பயணக் கட்டண விவரம் வருமாறு:-சாதாரண படுக்கை வசதியுடன் சென்று வர ரூ.1900/- மூன்றாவது வகுப்பு ஏ.சி. வசதியுடன் சென்று வர ரூ.4500/- நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் தங்கள் ஆதார் அட்டை நகலுடன் (ஜெராக்ஸ்) கட்டணத் தொகையை அமைப்புச் செயலாளர் சு.குருநாதன் (97897 22111); வடசென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் நிசார் (98842 55563) ஆகியோருக்கு அனுப்பி வைத்து, ஜூலை 10 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளவும். இதன் விவரங்களை தலைமைக் கழகச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் (94430 49151) அவர்களுக்கும் தெரிவிக்கவும். கழகத் தோழர்கள் தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தலைமைக் கழகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

தலைமைக் கழக அறிவிப்பு: திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகள் தேர்வு
திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக நிர்வாகிகளாக அவைத்தலைவர் சு.சம்பத், செயலாளர் இ.என்.கந்தசாமி, பொருளாளர் பி.திருமூர்த்தி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க »

