சனி, 18 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.1993 ஏப்ரல் 14–15: நடந்தது என்ன? 33 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் முழு விளக்கம்!ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுபுதுக்கோட்டை திஷா (DISHA) குழுக்கூட்டம்: மக்கள் நலத் திட்டங்களை விரைந்து முடிக்க துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்!ஞானபீட விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்து!100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!கழக சட்டதிட்ட விதிகளில் திருத்தம்04.08.2026 டெல்லியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் வெளியீட்டு விழா! - கழகத் தோழர்களின் கவனத்திற்குஆளுநர் உரையை வரவேற்கிறேன் துரை வைகோ எம்.பி.,வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.1993 ஏப்ரல் 14–15: நடந்தது என்ன? 33 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் முழு விளக்கம்!ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுபுதுக்கோட்டை திஷா (DISHA) குழுக்கூட்டம்: மக்கள் நலத் திட்டங்களை விரைந்து முடிக்க துரை வைகோ எம்.பி., வலியுறுத்தல்!ஞானபீட விருது பெறும் கவிப்பேரரசு வைரமுத்து!100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!கழக சட்டதிட்ட விதிகளில் திருத்தம்04.08.2026 டெல்லியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் வெளியீட்டு விழா! - கழகத் தோழர்களின் கவனத்திற்குஆளுநர் உரையை வரவேற்கிறேன் துரை வைகோ எம்.பி.,

திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: துரை வைகோ எம்.பி., முயற்சியால் திருச்சி – ஹைதராபாத் இரயில் சேவை நிரந்தரமானது!

திருச்சி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: துரை வைகோ எம்.பி., முயற்சியால் திருச்சி – ஹைதராபாத் இரயில் சேவை நிரந்தரமானது!

துரை வைகோ எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று, திருச்சி–சார்லபள்ளி (ஹைதராபாத்) சிறப்பு வாராந்திர இரயில், நிரந்தர வாராந்திர விரைவு இரயிலாக மாற்றப்பட்டது. இந்த சேவை ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பயனளிக்கும் என அவர் வரவேற்பு தெரிவித்தார்.

எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி!

எனது கோரிக்கையை ஏற்று, இன்று (08.07.2026) முதல், திருச்சி – சார்லபள்ளி (ஹைதராபாத்) தற்காலிக சிறப்பு வாராந்திர இரயில், நிரந்தர வாராந்திர விரைவு இரயிலாக இயக்கப்படுகிறது.

02.03.2026 அன்று ஒன்றிய இரயில்வே அமைச்சருக்கும், 07.03.2026 அன்று திருச்சி கோட்ட இரயில்வே மேலாளருக்கும் கடிதம் எழுதி, நேரிலும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினேன்.

பயணிகளின் தொடர்ச்சியான வரவேற்பும், அதிகளவிலான பயன்பாடும் காரணமாக, இந்த இரயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியிருந்தேன்.

எனது கோரிக்கையை ஏற்று, 07615/07616 சிறப்பு இரயில், 17077/17078 என்ற எண்களில் நிரந்தர வாராந்திர விரைவு இரயிலாக இயக்கப்படுகிறது.

திருச்சி – ஹைதராபாத் இடையேயான நேரடி இரயில் இணைப்பை மேலும் வலுப்படுத்தும் இந்த நடவடிக்கை, ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பெரும் பயனளிக்கும்.

இன்று மாலை ஸ்ரீரங்கம் இரயில் நிலையத்தில், சார்லபள்ளி (ஹைதராபாத்) – திருச்சி நிரந்தர வாராந்திர விரைவு இரயிலுக்கு வரவேற்பு அளித்தேன்.

தொடர்ந்து, இன்று இரவு 9.30 மணிக்கு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு இரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் திருச்சி – சார்லபள்ளி (ஹைதராபாத்) நிரந்தர வாராந்திர விரைவு இரயிலை கொடியசைத்து வழியனுப்புகிறேன்.

அன்புடன் துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) மறுமலர்ச்சி திமுக 08.07.2026