செவ்வாய், 14 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

ஊபா (UAPA) சட்டமும்; உமர் காலித் வழக்கும்

ஊபா (UAPA) சட்டமும்; உமர் காலித் வழக்கும்

ஜே.என்.யூ. மாணவர் தலைவர் கண்ணையா குமார் கைது, மாணவர்கள் மீதான அடக்குமுறை, போலி தேசத்துரோக குற்றச்சாட்டுகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

ஜே.என்.யு மாணவர் தலைவர் கண்ணையாகுமார் கைது கண்டனக் கூட்டத்தில் உரையாற்றிய மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார், "மнуவாதிகளிடமிருந்து விடுதலை" "வறுமையிலிருந்து விடுதலை" "புதிய பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து விடுதலை" "பார்ப்பனியத்திடமிருந்து விடுதலை", "ஆர்.எஸ்.எஸ் இடமிருந்து விடுதலை" என்கிற முழக்கங்களை தனது உரையின் இறுதியில் எழுப்புகிறார்.

கண்ணையா 11-ஆம் தேதி ஆற்றிய உரையை வீடியோ பதிவு செய்து கொள்ளும் இந்துத்துவ கும்பல் அதில் போர்ஜரி வேலை செய்து 9 ஆம் தேதி கூட்டத்தில் ஏ.பி.வி.பி ரவுடிகள் எழுப்பிய கூச்சல்களில் இருந்து "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" "காஷ்மீர் விடுதலை" போன்ற குரல்களை வெட்டி ஒட்டுகிறது. இவ்வாறு போர்ஜரி செய்யப்பட்ட வீடியோவை ஜீ தொலைக்காட்சி, டைம்ஸ் நவ் மற்றும் நியூஸ் எக்ஸ் போன்ற சேனல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, "மத்திய அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?" என்று கேள்வி எழுப்பி "தேச துரோக" குற்றச்சாட்டுகளுக்கு மேலும் போலியான அடித்தளம் ஒன்றை அமைத்துக் கொடுக்கின்றன. அதே நாளில்தான் (பிப் 11) பாரதிய ஜனதா எம்பி கிரி தேச துரோக குற்றச்சாட்டை பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து கொள்ளும் காவல்துறை, அதை அப்படியே பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு அனுப்புகிறது. ஆர்.எஸ்.எஸ். அடிவருடிகளால் நிரம்பிய பல்கலைக் கழக நிர்வாகம் உடனடியாக இருபது மாணவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு காவல்துறைக்கு அனுப்புகின்றது. தங்களுக்கு பல்கலைக் கழக நிர்வாகத்திடமிருந்து கிடைத்த பட்டியலில் இருந்து கண்ணையா குமார், உமர் காலித், அனிபான் பட்டாச்சார்ய, ராமநாகா, அசுதோஷ் குமார் மற்றும் ஆனந்த் பிரகாஷ் நாராயணன் ஆகிய ஆறு மாணவர்களை மட்டும் பொறுக்கியெடுத்து அவர்கள் மேல் தேச துரோக வழக்கைப் புனைகிறது தில்லி காவல் துறை.

12-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையும் காவல்துறையினர், மாணவர் விடுதிகளுக்குள் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர். பெண்கள் விடுதிகளுக்குள் ஆண் காவல்துறையினர் புகுந்து வெறியாட்டம் போட்டுள்ளனர். அதே நாள் கண்ணையா கைது செய்யப்படுகிறார், மற்ற உமர் காலித் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் தலைமறைவாகின்றார்கள்.

இதற்கிடையே மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆறு மாணவர்களோடு மேலும் இரண்டு மாணவர்களான ஸ்வேதா ராஜ் மற்றும் ஐஷ்வர்யா அதிகாரி ஆகியோரையும் சேர்த்து மொத்தம் எட்டு மாணவர்களை இடை நீக்கம் செய்து உத்தரவிடுகிறது பல்கலைக் கழக நிர்வாகம். இந்த மாணவர்களின் மேலான "குற்றத்தை" விசாரிக்க மூன்று சங் பரிவார் சாய்வுள்ள பேராசிரியர்களைக் கொண்டக் குழு ஒன்றையும் அமைக்கிறது பல்கலைக் கழக நிர்வாகம். இந்தக் குழு இம் மாணவர்களை 15-ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் ஒன்றையும் அனுப்புகிறது.

இதற்கிடையே கண்ணையா குமார் கைது செய்யப்பட்டது மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. அன்று மாலையே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் குழுமி நிற்கிறார்கள். அங்கே மயான அமைதி நிலவுகிறது. தங்களது சுதந்திரத்தின் சிறகுகள் வெட்டப்படும் என்பதை அம்மாணவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. தங்கள் விடுதிகளுக்குள்ளும் காவல்துறை நுழையும் என்பதையோ, சுதந்திரமாய் இரவு நெடுக விவாதித்துக் கழிக்கும் அந்த வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதையோ அவர்களின் மிக மோசமான துர்சொப்பனத்தில் கூட கண்டிருக்க மாட்டார்கள். இருப்பினும் அந்த மயான அமைதியைக் கிழித்துக் கொண்டு "இன்குலாப் ஜிந்தாபாத்" "லால் சலாம் லால் சலாம்" என்கிற முழக்கங்கள் அந்த இரவில் ஒரு புதிய அர்த்தத்துடன் ஓங்கி ஒலிக்கத் தொடங்குகின்றன.

இதற்கிடையே காவல்துறை நடவடிக்கை மற்றும் மாணவர் சங்கத் தலைவர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை எப்படிக் கையாள்வது என்பதை ஆசிரியர்கள் சங்கத்தினர்கள் கூடி விவாதிக்கின்றனர். ஒரு நீண்ட போரை சங்கப் பரிவாரத்தினர் துவக்கி வைத்துள்ளனர் என்பதை ஆசிரியர்களும் மாணவர்களும் உணர்கின்றனர். இந்தப் போரில் ஆசிரியர் சங்கத்தைப் பின் தொடர்வதா மாணவர்களே முன்னின்று எதிரிகளைச் சந்திப்பதா என்கிற விவாதங்கள் துவங்குகின்றன. உடனடியாக ஆசிரியர் சங்கத்தினர் முன்னிற்க சுமார் 4000 மாணவர்கள் கலந்து கொண்ட கண்டன ஊர்வலம் ஒன்று வளாகத்திற்குள்ளேயே நடக்கிறது. மிக அதிக அளவில் மாணவர்கள் கூடிய போதிலும் உடனடியாக எதிர்ப்பு நடவடிக்கைகள் எதையும் துவக்காமல் ஆசிரியர் சங்கத்தினர் அந்த ஊர்வலத்தை முடித்துக் கொள்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர் சங்க கூட்டம் ஒன்று நடக்கிறது. ஆசிரியர் சங்கத்தைப் பின் தொடர்வது என்றில்லாமல், மாணவர்களே முன்னின்று எதிர்ப்பியக்கத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று இடது சாரி மாணவர்கள் முன்வைத்த கருத்து எல்லா சங்கத்தினராலும் ஏற்கப்படுகின்றது.

2016 பிப்ரவரி 13-ஆம் நாளில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்றை மாணவர்கள் ஏற்பாடு செய்கின்றனர். டி.ராஜா, யோகேந்திர யாதவ், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தினுள் புகுந்து தகறாரில் ஈடுபடுகின்றது ஏ.பி.வி.பி. கண்டனக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஆனந்த் சர்மா ஏ.பி.வி.பி ரவுடிகளால் தாக்கப்படுகிறார். கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஆசிரியர்களும் மாணவர்களும் மட்டுமின்றி பத்திரிகையாளர்களையும் தாக்குகின்றன ஏ.பி.வி.பி வானரங்கள். அதுவரை அடக்கி வாசித்து வந்த தொலைக்காட்சி ஊடகத்தின் ஒரு பிரிவினர், இந்த தாக்குதல் சம்பவங்களுக்குப் பின் இந்துத்துவ பாசிஸ்டுகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை இதற்கு மேலும் கேள்வி கேட்காவிட்டால் தம்மையும் அழித்தொழித்து விடுவார்கள் என்கிற அச்சத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

பிப்ரவரி 15-ஆம் தேதி மாணவர்கள் தரப்பில் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம் ஒன்றும் 16-ஆம் தேதி ஆசிரியர்கள் தரப்பில் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றும் வெற்றிகரமாக நடைபெறுகின்றது. இதற்கிடையே மாணவர்களிடையே ஏ.பி.வி.பி முற்றிலும் அம்பலப்பட்டுப் போகிறது. தாமும் ஜே.என்.யு பல்கலைக் கழகத்திற்கு ஆதரவுதானென்றும், ஜே.என்.யுவை மூட வேண்டும் என்கிற கோரிக்கையில் தமக்கும் உடன்பாடில்லை என்றும் துண்டறிக்கை வெளியிட்டு சொல்ல வேண்டிய நிலைக்கு ஏ.பி.வி.பி தள்ளப்படுகிறது.

இதற்கிடையே அதே நாளில் (பிப் 15) கண்ணையா குமாரின் போலீசு காவல் முடிந்து விட்டதால் அவரை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வருகின்றது தில்லி காவல்துறை. கண்ணையா வரும் நேரம், வழி போன்றவற்றை 'எப்படியோ' அறிந்து கொள்ளும் இந்துத்துவ குண்டர்கள், முன்கூட்டியே நூற்றுக்கணக்கான ரவுடிகளை வக்கீல் உடையோடு நீதிமன்றத்தைச் சுற்றிவளைத்து நிறுத்துகிறது. கண்ணையா நீதிமன்றத்தில் நுழையவும் வெறித்தனமாக அவரையும் வழக்கைக் காண வந்த மற்ற மாணவர்களையும் தாக்குகின்றது இந்துத்துவ ரவுடிப் பட்டாளம். "பாரத் மாதா கீ ஜேய்" "வந்தே மாதரம்" என்று வெறித்தனமாக கூச்சலிட்டுக் கொண்டே முன்னேறிய ரவுடிகள் மாணவிகளையும் விட்டு வைக்கவில்லை. கையில் செல்பேசியோடு இள வயதில் எவர் தென்பட்டாலும் அடித்துத் துவைக்கப்பட்டனர். விக்ரம் சௌகான் என்ற வானரம் இந்த தாக்குதல்களை முன்னின்று ஒருங்கிணைத்து உள்ளான்.

கண்ணையாவும் பிற மாணவர்களும் நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கப்பட்டதும் அதற்கு காவல்துறையே மௌனமாய் நின்று அனுமதி வழங்கியதையும் கேள்விப்பட்டதும் நாடெங்கும் உள்ள மாணவ சமூதாயம் கொந்தளிக்கிறது. ஏ.பி.வி.பி மேலும் மேலும் தனிமைப்படுத்தப்படுகிறது.

இந்தச் சூழலில் ஜே.என்.யு வளாகத்தினுள் வாலைச் சுருட்டிக் கொண்டு பதுங்கிக் கொள்ளும் சங்கப்பரிவாரம், வளாகத்திற்கு வெளியே வெறிக்கூத்தாடுகின்றது. கண்ணையா மற்றும் உமரின் புகைப்படங்களோடு தில்லியின் பல பகுதிகளில் போஸ்டர் அடிக்கும் சங்கப்பரிவாரம், இவர்கள் தேச துரோகிகள் என்றும் இவர்களைக் கண்டதும் தாக்குமாறும் பொதுமக்களிடம் விஷமப் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தது. ஊடகங்களின் ஒரு பிரிவு மாணவர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்க எல்லா வகையான கீழ்த்தரமான எல்லைகளுக்கும் சென்றது.

தொடர்ச்சியான ஒரு இயக்கம் போல் ஜே.என்.யு விவகாரத்தைக் கையிலெடுத்த பார்ப்பன ஊடகங்கள், ஜே.என்.யு வை மூடு என்ற முழக்கத்தை உருவாக்கி, அதனை ஒரு இயக்கமாகவே சமூக வலைத்தளங்களில் கொண்டு சென்றது. போலியான தேசிய வெறியைத் தூண்டிவிட்டு இந்திய தேசியத்திற்கு எதிராக கொந்தளிப்பான நிலை ஒன்று நிலவுவதாக மக்களை நம்ப வைக்க அவை முயன்று வந்த நிலையில்தான் 2016 பிப்ரவரி 17-ஆம் தேதி மீண்டும் கண்ணையாவை கீழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றது தில்லி காவல்துறை.

திங்களன்று நடந்த அதே காட்சிகள் மீண்டும் அரங்கேறுகின்றன. சுமார் 200 ரவுடிகளை வக்கீல் உடையோடு களமிறக்கிய இந்துத்துவ குண்டர்கள் கற்களாலும் கட்டைகளாலும் கண்ணையாவைத் தாக்குகின்றனர். கண்ணையாவை மட்டுமின்றி இம்முறை பத்திரிகையாளர்களும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். காவலுக்கு வந்த போலீசார் தங்களது சுண்டு விரலைக் கூட இந்துத்துவ கும்பலை நோக்கி நீட்டாத நிலையில் கண்ணையாவை அவரது வக்கீல்களும் தோழர்களுமே பாதுகாப்பாக கும்பலில் இருந்து மீட்டு நீதிமன்றத்திற்குள் ஒரு அறைக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர். கண்ணையா வெளியேறினால் கொல்வோம் என்கிற கூச்சலோடு வெளியே இந்து ரவுடிக் கும்பல் காத்துக் கொண்டிருந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் விசயத்தை உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்கிறார்.

கண்ணையா கொலைகாரர்களிடமிருந்து தப்பி நீதிமன்றத்தின் ஒரு அறைக்குள் சிறைப்பட்டு இருந்த அந்த சூழலில் ஊடகங்களில் பேட்டி அளிக்கும் தில்லி போலீசு கமிஷனர் பாஸ்ஸி, கண்ணையா தாக்கப்படவில்லை என்றும் எல்லாம் வெறும் தள்ளு முள்ளு விவகாரம் தான் என்றும் சொல்கிறார். உச்சநீதிமன்றம் உடனடியாக கபில் சிபல், துஷ்யந்த் தாவே, தவான் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர் குழு ஒன்றை அமைத்து மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தின் நிலவரத்தை அறிய அனுப்புகின்றது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் குழு கடுமையான போலீசு பாதுகாப்போடு சென்ற போதும், அவர்களை எதிர்த்து கோஷங்களையும் கற்களையும் எறிகின்றனர் ஆர்.எஸ்.எஸ் காலிகள். கண்ணையாவின் உயிருக்கு ஆர்.எஸ்.எஸ் குண்டர்களால் ஆபத்து இருப்பதை உச்சநீதிமன்றத்திற்கு அறிவிக்கும் மூத்த வழக்கறிஞர்கள் குழு, அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு தில்லி போலீசு கமிஷனரும் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்று அறிக்கை சமர்பிக்கின்றனர். இவ்வளவிற்கும் பிறகுதான் போலீசார் பாதுகாப்பாக கண்ணையாவை மீட்டு சிறைக்கு அனுப்புகின்றனர்.

காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட மொத்த அரசு அமைப்பும், மாணவர்களின் ரத்தம் குடிக்கும் வெறியோடு இந்துத்துவ கும்பலின் சார்பில் நிற்பதை உணர்ந்த மாணவர்கள் உடனடியாகத் திரள்கின்றனர். ஏ.பி.வி.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகளை கண்டித்தும், கண்ணையாவை விடுதலை செய்யக் கோரியும் பிப்ரவரி 18-ஆம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் ஒரு கண்டன கூட்டம் ஒன்றை நடத்துகின்றனர் மாணவர்கள்.

அறிவுத்துறைவினர் கண்டனம்:
சுமார் இருபதாயிரம் மாணவர்கள் கூடிய அந்தக் கூட்டத்தில் அறிவுத்துறையினர் பலரும் கலந்து கொள்கின்றனர். அதே நாளில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஊடகத்துறையினரும் கண்டன ஊர்வலம் ஒன்றை நடத்துகின்றனர். இதற்கிடையே ஜே.என்.யுவின் போராட்டம் இந்தியா முழுவதும் இந்தியாவைக் கடந்தும் உள்ள பல்கலை கழகங்களுக்கும் பரவுகின்றது. பல்வேறு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பல்கலைக் கழக மாணவர் அமைப்புகள் ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகின்றனர். பி.சாய்நாத் உள்ளிட்ட இந்தியளவிலான அறிவுத்துறையினர் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ் பெற்ற நோம் சோம்ஸ்கி மற்றும் நோபல் பரிசு வென்ற அறிஞர்களும் மாணவர்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து கடிதங்கள் எழுதுகின்றனர்.

அதிகாரம் தங்கள் கையில் உள்ளது என்கிற மமதையில் மாணவர்களையும் தங்களுக்கு எதிரான குரல்களையும் நசுக்கி விடலாம் என்ற திமிரில் மிதந்த இந்துத்துவ கும்பல், ஆப்பசைத்த குரங்காக ஜே.என்.யுவில் மாட்டிக் கொண்ட நிலையில் தங்களது நேரடி நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டு சட்டவாதத்திற்குப் பின்னே ஒளிந்து கொள்கிறது. நீதிமன்றத்தின் பார்வையில் சொத்தையான வாதங்களின் அடிப்படையில், போலியான வீடியோ ஆதாரங்களின் மேல் புனையப்பட்ட வழக்கை வைத்துக் கொண்டு "என்ன இருந்தாலும் இது தேச துரோகமில்லையா?" "எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தின் முடிவுக்கு விட்டு விடலாமே" என்று சுதி இறங்கிய குரலில் பேசத் துவங்கியுள்ளன இந்துத்துவ வானரப் படையினர்.

சட்ட நுணுக்கங்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் நிற்காத வழக்கு தானென்றாலும் இது நீதிமன்றத்தில் புகலிடம் தேடிக் கொள்ளும் சந்தர்ப்பம் இல்லை. பல்கலைக் கழகங்களின் மீதும் சுதந்திரமான அறிவுத்துறையின் மீதும் பாசிச குரங்குகளின் பிடி கடந்த இரண்டாண்டுகளாகவே மேலும் மேலும் இறுகி வருகின்றது. பூனா திரைப்படக் கல்லூரி விவகாரமோ, ஜாதவ் பூர் பல்கலைக் கழக விவகாரமோ, சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளோ, ரோகித் வேமுலா கொல்லப்பட்டதோ - அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன.

12-02-2015 அன்று (இந்தியாவின் கூட்டு மனசாட்சியை நிறைவேற்றுவதற்காக) தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மூன்றாமாண்டு நினைவுக் கூட்டத்தை ஜே.என்.யு பல்கலைக் கழகத்தின் சில மாணவர் அமைப்புகள் நடத்தியிருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் 'பாகிஸ்தான் வாழ்க! இந்தியா ஒழிக!' என்று மாணவர்கள் கோசமிட்டதாக ஏ.பி.வி.பி குண்டாந்தடிகள் வழக்கம் போல பா.ஜ.க எம்.பி.க்கு தெரிவிக்க, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி போன்றோரின் நேரடி தலையீட்டின் கீழ், டில்லி காவல்துறை தேசத்துரோகம் மற்றும் இந்தியாவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல் போன்ற வழக்குகளை குற்றம் சாட்டப்படுவர் யார் என்று பெயரைச் சொல்லாமலேயே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக தொடுத்திருக்கின்றனர்.

கண்ணையா குமார் கைது: இப்படிச் செய்வதன் மூலம் யார் மீது வேண்டுமானாலும் தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தலாம் என்பதற்கு நிருபணமாக டெல்லி காவல்துறை சாதாரண உடையில் ஜே.என்.யு. பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா குமாரை தேசத்துரோக குற்றச்சாட்டில் கடத்திச் சென்றது. மேலும் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் மற்றும் ஏ.பி.வி.பி காலிகளின் துணையோடு, டெல்லி காவல்துறை பல்கலைக் கழக மாணவர்களை சூறையாட வெறிகொண்டு அலைந்தது. நள்ளிரவில் பெண்கள் விடுதியைச் சோதனையிடுவது, அடையாள அட்டை வைத்திர்க்காத மாணவர்களை சித்ரவதை செய்து பொய் வழக்கு போட முயல்வது, காஷ்மீரிலிருந்து வரும் ஒட்டு மொத்த மாணவர்களையும் கைது செய்ய முனைவது, இதுவரை மோடி அரசின் பாசிசக் கொள்கைகள் மற்றும் இந்துத்துவ கும்பலின் அரசியலையும் அம்பலப்படுத்திய மாணவர்களையும் குறி வைத்து வேட்டையாடுவது என ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பல் பல்வேறு மாணவர் பிரச்சனையில் அம்பலப்பட்ட பிறகும் கூட அடிபட்ட நரியாக ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது.

ஏதோ பாகிஸ்தான் ஆதரவு மற்றும் இந்தியாவிற்கு எதிரான முழக்கங்களுக்குத்தான் தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் மாணவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதாக இந்துத்துவ பாசிச கும்பல் சமூகத்தின் பொதுப்புத்தியில் தன்னை இருத்த தவியாய் தவிக்கிறது. ஆனால் நிதர்சனத்தில் காவிக்கூம்பல் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புரளிகளைக் கிளப்பி மக்களை மதரீதியாக பிளவு படுத்தி அரசின் தோல்வியை மூடிமறைத்து அகண்ட பாரதக் கனவை நிறைவேற்ற முயன்று வருகிறது. சான்றாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அப்சல் குரு நினைவுக் கூட்டம் நடத்திய உமர் எனும் மாணவர் லஷ்கர்-ஈ-தொய்பாவுடன் நேரடித் தொடர்புடையவர் என்று ஒரே போடாக போட்டார். ராஜ்நாத்சிங்கின் இந்த புரளி, அரசின் புலனாய்வுத் துறையாலேயே நிராகரிக்கப்பட்டு இருப்பது ராஜ்நாத்சிங்கின் களவாணித்தனத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

இரண்டாவதாக, பாகிஸ்தானில் இருக்கும் ஹபீஸ் செய்யது நேரடியாக ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவு தருவதாக கட்டியமைக்கப்பட்ட செய்தியும் ஹபீஸின் பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் டிவிட்டர் கணக்கும் போலியானது என்பதையும் வெளிச்சத்திற்கு வந்தபிறகு ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நோக்கமும் அம்பலப்பட்டுவிட்டது. அதே போல பல்கலையில் "பாக் வாழ்க" கோஷம் போட்டவர்கள் ஏ.பி.வி.பியினரே என்று ஆம் ஆத்மி வீடியோ மூலம் அம்பலப்பட்ட பிறகும் அவாள் கூட்டம் ஊளையிடுவதை நிறுத்தவில்லை.

இந்துத்துவ கும்பல் இச்சந்தர்ப்பத்தை கணிசமாக தன்பக்கம் அறுவடை செய்யவும் தவறவில்லை. டில்லியில் ஜே.என்.யு பல்கலைக் கழகத்திற்கு வெளியே இரயில் நிலையங்கள் உட்பட சங்பரிவாரங்கள் ஜே.என்.யு மாணவர்களை தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டி தாக்கி வருகின்றனர். பாட்டியாலா உயர்நீதி மன்றவளாகத்தில் வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் நுழைந்த இந்துத்துவ வானரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, டி.என்.ஏ நாளிதழ், எகனாமிக்ஸ் டைம்ஸ், கைரலி தொலைக்காட்சி, ஐ.பி.என் குழும நிருபர்களைத் தாக்கியிருக்கின்றனர்.

ஜே.என்.யு மாணவர் தலைவர் கண்ணையா குமாருக்கு ஆதரவாக கோர்ட் வளாகத்திற்கு வந்த மாணவர்களையும் தேசத் துரோகிகள் என்று இந்துத்துவக் கும்பல் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதையும் காவல்துறை வேடிக்கை பார்த்ததையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் அலோக் சிங் வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல் தனி வழக்காக பதியப்பட்டிருக்கும் நிலையில் பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் இந்துத்துவ வானரங்கள், மாணவர் தலைவர் கண்ணையா குமாரைத் தாக்கியிருக்கிறது. உச்சநீதிமன்ற கெடுபிடி உத்தரவுகள்! எல்லாம் மோடியின் பாசிச பயங்கரவாதத்திற்கு முன்னால் கழிவறைக் காகிதமாக நிற்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

(தொடரும்..)