வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமைக் கட்சிகளின் கூட்டம் 01.07.2026 அன்று மாலை 4 மணியளவில் சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு முதல்வரும், த.வெ.க. தலைவருமான மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மறுமலர்ச்சி திமுக, காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாநில நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமைக் கட்சிகளின் கூட்டம் 01.07.2026 அன்று மாலை 4 மணியளவில் சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு முதல்வரும், த.வெ.க. தலைவருமான மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மறுமலர்ச்சி திமுக, காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மாநில நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றும்போது, கூட்டணி அரசுக்கு என்று குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும், குறைபாடுகளை முதல்வரிடம் அல்லது தலைமையிடம் மட்டுமே சுட்டிக்காட்ட வேண்டும் என்றும், வர இருக்கும் உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தலிலும் இக்கூட்டணி இணைந்து செயல்பட வேண்டும் என்றும், மறுமலர்ச்சி திமு கழகம் தனது வலுவான ஆதரவிறனை தமிழக வெற்றிக் கழகத்திற்கு தொடர்ந்து அளிக்கும் என்றும் குறிப்பிட்டார். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் உரைக்கு பின்னர் நிறைவாக உரையாற்றிய மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள், மதச்சார்பற்ற தன்மை, சமூக நீதி, கூட்டாட்சி, மாநில உரிமைகள் ஆகியவற்றில் தமது அரசு என்றும் உறுதியாக இருக்கும். லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத வெளிப்படையான ஆட்சி தொடரும் என்றும், ஐந்து ஆண்டுகள் மட்டுமல்லாது அதற்கு பின்னும் நமது கூட்டணி அரசு தொடரும் என்றும் குறிப்பிட்டார். தோழமைக் கட்சி தலைவர்களுடன் கலந்து கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன்ராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, டாக்டர் ரொஹையா, புதூர் மு.பூமிநாதன், சு.ஜீவன், டாக்டர் சி.கிருஷ்ணன், தலைமைக் கழகச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், அமைப்புச் செயலாளர் சு.குருநாதன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் ஆவடி இரா.அந்திரிதாஸ், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் பூ.லோகநாதன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு | சங்கொலி