செவ்வாய், 14 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

“வெற்றித் தமிழகம்” தொலைநோக்கு திட்டங்கள்! ஆளுநர் உரைக்கு வைகோ பாராட்டு

“வெற்றித் தமிழகம்” தொலைநோக்கு திட்டங்கள்! ஆளுநர் உரைக்கு வைகோ பாராட்டு

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசின் ஆளுநர் உரையை வரவேற்று, சமூக நீதி, மாநில உரிமைகள், இருமொழிக் கொள்கை, ஊழல் ஒழிப்பு, டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் "வெற்றி தமிழகம்" தொலைநோக்கு திட்டங்கள் உள்ளிட்ட புதிய அரசின் அறிவிப்புகள் பாராட்டத்தக்கவை என்றும், அவை தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கி இருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், புதிதாக அமைந்துள்ள ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் செயல் திட்டங்களை எடுத்துக் காட்டியுள்ளார்.

சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர் என்று ஆளுநர் சுட்டிக்காட்டி இருப்பது உண்மையே.

மதச்சார்பின்மை, சமூக நீதி, மாநில உரிமை, சிறுபான்மையினர் நலன், மீனவர் நலன், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப சமத்துவம், சமதர்மக் கோட்பாடுகளை நிலைநிறுத்த புதிய அரசு உறுதியாக இருப்பதை ஆளுநர் உரையில் பிரகடனம் செய்திருப்பது நம்பிக்கை தருகிறது.

மக்களாட்சியில் மக்களே மன்னர்கள் என்று உரைத்த பேரறிஞர் அண்ணாவின் மணிவாசகத்தைச் சுட்டிக்காட்டி இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை ஆளுநர் உறுதி செய்திருக்கிறார்.

2031 இல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு "வெற்றி தமிழகம்" என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது.

சமூக நீதி நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் நீடிக்கும் என்று அறுதியிட்டு கூறியிருப்பதும், மாநில உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுக்கவும், நதிநீர் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழக வெற்றிக் கழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று அழுத்தம் திருத்தமாக ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். அரசு நிர்வாகத்தில் புரையோடிக் கிடக்கும் லஞ்ச ஊழல்களை அடியோடு ஒழிக்கவும், நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தி அனைவருக்குமான அரசாக தமிழ்நாடு அரசு திகழும்.

கனிம வளக் கொள்ளைகள் தடுக்கப்படும்; அரசின் வருவாய் அதிகரிப்பதற்கு மதுபான உற்பத்தியாளர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த வரித் தொகை சுமார் 1000 கோடிக்கு மேல் அரசின் கருவூலத்திற்கு கொண்டு வந்திருப்பது நிதி மேலாண்மையில் புதிய அரசின் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.

ஒன்றிய அரசு நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டி வரும் நிலையில் நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவெக அரசு முனைப்பாக இருக்கிறது.

தமிழக அரசு இயந்திரம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும். தொழில் தொடங்க ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டு எளிமையான வழிமுறைகள் உருவாக்கப்படும்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டும்; போதைக் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்படும்.

இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு சமூக நீதி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை மூலம் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கதாகும்.

  • பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 18.06.2026 அன்று விடுத்துள்ள அறிக்கை.