செவ்வாய், 14 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம்

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டக் கழக செயல்வீரர்கள் கூட்டம்

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட மறுமலர்ச்சி திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், கழகத்தின் 32வது பொதுக்குழுவில் அனைத்து தகுதியான நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட மறுமலர்ச்சி திமுக செயல்வீரர்கள் கூட்டம் 12.06.2026 வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மாவட்ட கழக அலுவலகமான அண்ணா அறிவகத்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜீனராஜ் அவர்கள் தலைமையில் கழக பொருளாளர் பொறியாளர் மு.செந்திலதிபன், தலைமைக் கழக செயலாளர் ஆ.வந்தியத்தேவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அக்கூட்டடதில் மாநகர் மாவட்ட செயலாளர் நா.முருகன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பூங்கொடி சா.செந்தில்நாதன், மேற்கு மாவட்ட செயலாளர் கே.கே.சேதுபாஸ்கரன், கிழக்கு மாவட்ட செயலாளர் சோ.வீரக்குமாரன் மற்றும் ஈரோடு மாநகர் தெற்கு, கிழக்கு, மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர். மேலும் அக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கழக வெளியீட்டு அணி துணைச் செயலாளர் பெ.முத்துமாணிக்கம் அவர்களது இளையமகன் மருத்துவர் மு.கெளசிகன், கழக முன்னாள் சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் கே.என்.சின்னத்தம்பி, சென்னிமலை பேரூர் கழக முன்னாள் செயலாளர் சோடாக்கடை முத்துசாமி, கழகத் தொண்டரணி தோழர் ம.லோகநாதன் அவர்களின் தந்தையார் மணி, மாவட்ட இலக்கியணி புரவலர் அக்ரகாரம் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் ஆகியோரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

நடைபெற உள்ள கழகத்தின் 32வது பொதுக்குழுவில் தகுதியான கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.