புதன், 15 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

கோரிக்கைகள் நிறைவேறும்வரை மக்களைத் திரட்டிப் போராடுவோம்!

கோரிக்கைகள் நிறைவேறும்வரை மக்களைத் திரட்டிப் போராடுவோம்!

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் 05.06.2026 அன்று நடைபெற்ற உண்ணாவிரத அறப்போரில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, "கோரிக்கைகள் நிறைவேறும்வரை மக்களைத் திரட்டிப் போராடுவோம்!" என்று குறிப்பிட்டார். அவரது பேட்டியின் விவரம் வருமாறு:

விவசாயிகளை அச்சுறுத்தி வரும் காட்டுப்பன்றிகளை, வனவிலங்குகள் பட்டியலிலிருந்து மத்திய அரசு நீக்க வலியுறுத்தியும், செண்பகவல்லி அணையை மறுபடியும் கட்டிக் கொடுக்க கேரள அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், உள்ளாறு அணையை கட்டித்தர வலியுறுத்தியும் இந்த உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதைப் போல உள்ளாறு அணைக்கட்டுத் திட்டம், செண்பகவல்லி அணை சரி செய்யப்பட்டால்தான் முழுமையான நீர் உள்ளாறுக்கு வரும். அந்த அணையைக் கட்டலாம் என்று டாக்டர் கலைஞர் காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகனை அழைத்துக் கூறினார். அது அப்படியே நின்றுபோய்விட்டது.

அந்த உள்ளாறு அணைக்கட்டுத் திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினால் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், சிவகிரி வட்டாரங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசனம் பெறும். விவசாயிகள் துன்பம் தீரும். குடிதண்ணீர் கிடைக்கும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலை அறப்போர் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏராளமான பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி ஊடக நண்பர்கள் காலை ஒன்பதரை மணிக்கெல்லாம் வந்துவிட்டீர்கள். விவசாயிகள், தமிழ் உணர்வாளர்கள், கழகத் தோழர்கள் என ஆயிரத்து ஐநூறு பேருக்கு மேல் இந்த உண்ணாவிரத அறப்போரில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிக்கையாளர்களுக்கும், தொலைக்காட்சி ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தியாளர்: அனைத்துக் கட்சிகளும் இந்தப் பிரச்சினை குறித்து கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாக அமைந்தால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இப்போது நீங்கள் நடத்துகிற உண்ணாநிலை போராட்டத்தை மதிமுக தொடர் போராட்டமாக முன்னெடுக்குமா?

வைகோ: வாய்ப்பு இருக்கிறது. மக்களைத் திரட்டுவதற்கு ஒரு வழிநடை பயணத்தை நடத்தவும் நான் திட்டமிட்டிருக்கிறேன். செங்கோட்டையில் தொடங்கி, இந்த வழியாக வந்து, ராஜபாளையம் எல்லை வரை சென்று திருவேங்கடத்தில் முடிப்பற்கு திட்டம் வகுத்திருக்கிறேன். அப்போது இலட்சக்கணக்கான மக்களை நாள்தோறும் சந்திப்பேன். இதை மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே வருவேன். அந்தத் திட்டத்தையும் நான் வைத்திருக்கிறேன்.

செய்தியாளர்: இது விவசாயிகளின் பொதுவான பிரச்சினை. இந்தப் பகுதி மக்களின் குடிநீர் ஆதார பிரச்சினையும்கூட, இதை மதிமுக மட்டும் தனித்து நடத்தும் போராட்டம் என்று இல்லாமல் அனைத்துக் கட்சியையும் அரவணைத்து உங்கள் தலைமையில் அதைச் செய்வதற்கான வாய்ப்புகள், சாத்தியக் கூறுகள் இருக்கிறதா?

வைகோ: நாங்கள் அழைப்புக் கொடுத்துவிட்டோம். கம்யூனிஸ்டு கட்சியினர் வந்திருக்கிறார்கள். எனக்கு பொன்னாடை போர்த்தினார்கள். இப்பொழுது வாழ்த்திப் பேசப் போகிறார்கள். விவசாய சங்கத்தினர் அதிகமாக வந்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் அக்கறையுள்ளவர்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், விவசாய சங்கத்தினர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என நான் பொதுவாக அழைப்புக் கொடுத்தேன். இங்கே இருப்பவர்களில் பலர் விவசாயிகள்.

செய்தியாளர்: அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இப்பகுதி மக்களுக்காக ஒரு போராட்டம் நடத்த வாய்ப்பு இருக்கிறதா?

வைகோ: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஒன்றிணைவது என்பது இன்றைக்கு பெரிய கேள்விக் குறி! எதற்காக ஒன்றிணைய வேண்டும் என்பன போன்ற கேள்விகள் வரும். பொதுவான பிரச்சினை என்பதால்தான் மேகேதாட்டு அணை பிரச்சினைக்கு கொடி கட்டாமல் சோழ மண்டலம் முழுவதும் ஊர் ஊராகச் சென்றேன். அனைத்துக் கட்சியினரும் என்னை வரவேற்றார்கள். அந்த மாதிரி செய்யக்கூடிய பண்பாடு எனக்கு உண்டு. தேவைப்பட்டால் அதை மீண்டும் செய்வேன்.

செய்தியாளர்: செண்பகவல்லி அணையோடு சேர்த்து பல்வேறு அரசியல் காரணங்கள் உள்ளடக்கி இருக்கிறதா?

வைகோ: கேரளத்தில் உள்ளவர்கள் பலருக்கும், செண்பகவல்லி அணையை சரிசெய்து கொடுத்தால் நமக்கு ஒன்றும் நஷ்டம் இல்லையே? என்ற மனப்பாண்மை அங்கே இருக்கிறது. அதைத்தான உம்மன்சாண்டி ஏற்றுக் கொண்டு சரி செய்து கொடுக்க வேண்டும் என்றார். இப்பொழுது வந்திருக்கக்கூடிய முதலமைச்சரை அது சம்மந்தமாக எந்த விதத்தில் அணுக வேண்டுமோ? அதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.

செய்தியாளர்: கேரள வனத்துறை அதிகாரிகள் தலையணைக்குக் கீழே இங்கே வந்து தங்கி செயல்படுகிறார்கள். நம் வனத்துறையினர் ஏன் அந்தப் பக்கமே செல்லவில்லை?

வைகோ: முல்லைப் பெரியாறில் என்ன செய்கிறார்கள் என்றால், நமது பொதுப்பணித் துறை அதிகாரிகளை படகில் ஏற்ற மாட்டார்கள். அப்படி ஏற்றினாலும் மிகவும் கொடுமைப் படுத்துவார்கள். சில நேரங்களில் அடிக்கவும் செய்தார்கள். அவர்கள் உள்ளேயே வருவார்கள். நம் அதிகாரிகள் அப்படிச் செல்ல மாட்டார்கள். மிகவும் பண்போடு நடந்து கொண்டார்கள். முல்லைப் பெரியாறில் இதுதான் நடந்தது. நமது அணையை உடைக்க வேண்டும் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் அவர்கள் ஊடுருவி உள்ளே வருவார்கள். நம் அதிகாரிகளை படகில் ஏற்ற மாட்டார்கள். கேரளம் நம் சகோதர மாநிலம். கேரள மக்களையும் நேசிக்கிறேன். அவர்கள் மீது குறை சொல்ல விரும்பவில்லை. அவர்களை சமாதானப்படுத்தி, அவர்கள் மனதில் இதனால் நமக்கொன்றும் நட்டம் இல்லை என்ற எண்ணத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். அந்த முயற்சியில் நான் ஈடுபடுவேன். எனக்கு மிகவும் உயிரான நண்பர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் ஜான் பிரிட்டாஸ், அகில இந்திய பொதுசெயலாளர் பேபியும் நானும் உயிர் நண்பர்கள். அவர்களிடம் சென்று கூறினால் பரிசீலிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

செய்தியாளர்: தமிழ்நாட்டில் ஆளும் கட்சியுடன் காங்கிரஸ் இருக்கிறது. கேரளத்திலும் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. நீங்கள் காங்கிரசை வலியுறுத்துவீர்களா?

வைகோ: காங்கிரசையும் வலியுறுத்துவேன். முதலமைச்சரையும் வலியுறுத்துவேன். மார்க்சிஸ்ட் கட்சியையும் வலியுறுத்த வேண்டும். சி.பி.ஐ.யையும் வலியுறுத்த வேண்டும். அதைச் செய்வோம்.

செய்தியாளர்: அரசியலில் இன்றைக்கு தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய அளவில் உங்களைப் பற்றிதான் எல்லா இடங்களிலும் பேசப்பட்டு வருகிறது.

வைகோ: அவ்வளவு பேசப்படுகின்ற அளவுக்கு நான் பிரபலமாகிவிட்டேனா?

செய்தியாளர்: நீங்கள் எப்போதும் பிரபலமானவர் என்பதில் மாற்றம் இல்லை. உங்கள் போராட்டக் குணத்தை என்றைக்கும் நாங்கள் வரவேற்போம்.

வைகோ: மிகவும் நன்றி!

செய்தியாளர்: த.வெ.க., மதிமுக நிலைப்பாடு குறித்து நீங்கள் தற்போது பேசும்போது சொல்லிவிட்டீர்கள். ஆனால் தெளிவான கருத்தை நீங்கள் வைத்து விட்டீர்கள் என்றால்...?

வைகோ: எங்கள் பொதுக்குழுவில்தான் இதுபற்றிய கருத்துக்கள் எல்லாம் பரிமாறப்படும். நாங்கள் அவரசப்பட்டு எந்த முடிவும் எடுக்கவில்லை. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கலைஞர் பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, பத்து நிமிடங்கள் முழக்கமிட்டேன். பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் 20 நிமிடங்கள் பேசினேன். யாரும் செய்தியாக அதனை வெளியிடவில்லை. இலக்கியத்திலும், அரசு சாதனைகளிலும், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதிலும் அவருக்கு நிகரான தலைவர் உலகத்திலேயே இல்லை. கலைஞர் போன்று சாதித்தவர்கள் யாரும் இல்லை.

செய்தியாளர்: 2029 இல் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா?

வைகோ: இது 2026! மூன்று வருடத்தில் என்னென்ன நடக்கும் என்று யார் கண்டது?

செய்தியாளர்: துரை வைகோ அவர்கள் அண்மையில் முதலமைச்சரைச் சந்தித்திருக்கிறார். அது நெருக்கமான சந்திப்பா?

வைகோ: பொது கோரிக்கைகளுக்காக முதலமைச்சரைச் சந்தித்திருக்கிறார். முதலமைச்சரை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அவர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர். அந்தத் தொகுதியின் 12 கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கொடுத்திருக்கிறார். எதிர்க்கட்சியினர் கூட முதலமைச்சரைச் சந்திக்கலாம். அதற்கு அரசியல் ரீதியான வியாக்கியானம் வேண்டாம். இதில் அரசியல் பின்னணி ஒன்றும் கிடையாது.

செய்தியாளர்: உங்கள் கூட்டணிக் கட்சியினர் அரசில் அங்கம் வகித்துள்ளார்கள். மதிமுகவுக்கு அந்த ஏக்கம் இருக்கிறதா? அது கிடைக்கவில்லை; கை கூடவில்லை என்ற எண்ணம் இருக்கிறதா?

வைகோ: கிடையவே கிடையாது. என் கதவைத் தட்டிய மத்திய கேபினெட் அமைச்சர் பதவியை மூன்று முறை மறுத்தவன் நான். ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என்றிருந்தபோது, நான் போட்டியிடாமல் தம்பி சிப்பிப்பாறை இரவிச்சந்திரனை நிறுத்தினேன். பதவிகளுக்காக எங்கள் கட்சி இல்லை. எங்கள் கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் புடம்போட்ட தங்கங்களாக பல வருடங்களாக என்னுடன் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பதவியைப் பற்றிய கவலையும் இல்லை. பல பேருக்கு பதவி கிடைக்கவில்லை என்ற எண்ணமும் இல்லை. ஒன்றுஇரண்டு பேர் விலகிச் சென்றார்கள். அவர்கள் நன்றாக இருக்கட்டும்.

செய்தியாளர்: இன்றைக்கு தென்காசிக்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வந்தார். அது அரசு நிகழ்வாகத் தான் இருந்தது. ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை என்று நமது எம்.எல்.ஏ.கூட கருத்து தெரிவித்திருந்தார்.

வைகோ: மரபுகள் தெரியாமல், என்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரியாமல், நிர்வாகத்தில் எந்த அனுபவமும் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் வந்து சிறிது நாட்கள்தான் ஆகிறது. அது போன்று சில பிழைகள் நடக்கக்கூடும். இனிமேல் அப்படிப்பட்ட பிழைகள் நடக்காமல் அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.

செய்தியாளர்: சென்னையில் மேயருக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் நடக்கும் புரோட்டோகால் உண்மை தானா? சரிதானா?

வைகோ: கோலி விளையாடுகின்ற சின்னப் பிள்ளைகள் சண்டை போட்டுக் கொண்டது போன்று இருவரும் மாறி மாறி சொல்கிறார்கள். இதற்கெல்லாம் நான் விளக்கம் சொல்ல முடியுமா?

கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.