அவரது உரை வருமாறு: "என்னுடைய அரசியல் வாழ்வில் எனக்கு நல்ல வெற்றி கிடைக்க வேண்டும் என்று வாழ்நாளெல்லாம் ஏங்கிக் கொண்டிருந்த அண்ணாச்சி செல்லச்சாமி அவர்களின் பிள்ளைகள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அவர்களுடைய இடத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியையும், அதன் அருகே விளம்பரப் பலகையையும் அமைத்திருக்கிறார்கள். அவர்கள் பல இடங்களில் நல்ல ஊதியத்தில் வேலையில் இருக்கிறார்கள். அவர்கள் மனதில் நமது ஊரில் பிறந்து கட்சி ஆரம்பித்த தலைவருக்கு நாம் மரியாதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கொடிக் கம்பத்தை அமைத்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்".
இந்தக் கொடியேற்று விழாவில் கலந்து கொண்ட ஒன்றியச் செயலாளர் சீனிவாசன், கலிங்கப்பட்டி கிளைக் கழகச் செயலாளர் நிறைபாண்டி கோனார், ஊராட்சி மன்ற தலைவர் மணிமொழி சந்துரு, கவுன்சிலர் அருள்குமார், முன்னாள் கவுன்சிலர் சுந்தரமூர்த்தி, க.கனகராஜ், பேங்க் மாரிச்சாமி, ஏ.கே.எஸ்.சுப்புராஜ், ஜோதிபாஸ், சிவக்குமார், மன்மதன், பிள்ளையார்குளம் ராஜேந்திரன், சண்முகராஜ், காளிராஜ் உள்ளிட்டோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். (06.06.2026)






