செவ்வாய், 14 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

பாரதிராஜா : பூங்காற்று திரும்புமா!

பாரதிராஜா : பூங்காற்று திரும்புமா!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். கிராமிய வாழ்க்கை, சமூகநீதி, பகுத்தறிவு, தமிழர் உரிமை ஆகியவற்றை திரைப்படங்கள் மூலம் உயர்த்திப் பேசிய அவரது கலைப் பங்களிப்பும், தமிழ்ப்பற்றும் என்றும் நிலைத்திருக்கும்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மரணம் தமிழ் மக்களை துயரக்கடலில் மூழ்கடித்துவிட்டது! பாரதிராஜாவின் பரம ரசிகனாக, தலைவர் வைகோ நெஞ்சம் உருகி வெளியிட்ட இரங்கல் அறிக்கையும், "பிதாமகனே போய்விட்டாயா, கிராமத்து ராஜாவே இறந்துவிட்டாயா? என்று கேட்டு, இனி என்ன எழுத? என்று தடுமாறி, என்னை அழவிடு! என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் கண்ணீர் அறிக்கையும், நம்மை ஆறாத்துயரில் தள்ளி நிலைகுலையச் செய்கிறது.

கரு தந்து உயிர் தந்த தன் அம்மா, கடன்பட்டுத் தந்த 300 ரூபாய், மூன்று பேண்ட், மூன்று சட்டை, சோப்பு டப்பா, ஆறு சிசர் பாக்கட் சிகிரெட், பெட்டி இவைகளோடு கொட்டும் மழையில் புறப்பட்டு சென்னை பட்டணத்தில் காலடி எடுத்து வைத்து, இடர் பல கண்டு, இமயமாய் எழுந்து நின்று, சாதனைச் சரித்திரம் படைத்த பாரதிராஜா; காவலர்களின் 70 துப்பாக்கி குண்டு முழக்கம், அரசு வாகனங்களின் அணிவகுப்பு, அமைச்சர்களின் வணக்கம், என அரசு மரியாதையோடு பிறந்த மண்ணில் தன் கலைப் பயணத்தை நிறைவு செய்தார்!

கும்பிட்ட கரங்களோடு, "என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா வந்திருக்கிறேன்!" என்ற காந்தக் குரலோடு, திரைப்படங்களை திராவிட இயக்க பிரச்சாரக் களங்களாக்கிய, பாரதிராஜா, பிறந்த மண்ணில் மண்ணோடு கலந்து விட்டார்; கரைந்து விட்டார்! மகாராஜா, மகாராணி, அரண்மனை, கடவுளர்களின் புராணங்கள், பேய் பூதம் பிசாசு கதைகள்... இவைகளை மட்டுமே காட்டிக் கொண்டிருந்த தமிழ் திரைப்பட உலகை, தமிழ் மக்களின் பக்கம் திருப்பிய மகா கலைஞர்தான் பாரதிராஜா!

சலசலக்கும் அருவிகள், விண்முட்டும் மலைகள், அசைந்தோடும் மேகக் கூட்டங்கள், துள்ளியோடும் மான், மிதந்து செல்லும் மீன், மண் சுவர், கரி பிடித்த பானை, திண்ணை வைத்த வீடு, ஓலைக் குடிசை, சப்பாணி, பரட்டை, மயிலு, குருவம்மா என நம்மோடு நின்றவர்கள், ஏர், கலைப்பை, மாட்டு வண்டி, கமலை, உரல், உலக்கை, புல்லாங்குழலில் புறப்பட்டு வரும் இசை, ஆலமர நிழலில் நடக்கும் நீதி விசாரணை, நாம் கொண்டாடி மகிழ்ந்திடும் விழாக்கள், நம்முடைய மகிழ்ச்சி, சோகம், கோபம், முரட்டுத்தனம், வீரம் இவைகளையெல்லாம் திரையில் காட்டி, முதன் முதலாக நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்த இயக்குநர்தான் பாரதிராஜா!

கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தைகளை கருவிலேயே கொல்லும் கொடுமை கண்டு கொதித்தெழுந்தார் பாரதிராஜா! தன் தாயார் பெயரிலேயே கருத்தம்மாவை திரையில் காட்சிப்படுத்தினார். கள்ளிப்பாலுக்கு தப்பிப் பிழைத்த பெண் குழந்தை மருத்துவராகி, கொல்லத் துடித்த தந்தையாரையே பிழைக்க வைக்கும் கதை அது! தந்தையாக பேராசிரியர் பெரியார்தாசன் நடித்தார். இயக்குநர் பாரதிராஜா நிறைவடையும் வரை திரும்ப திரும்ப நடித்து, ஒரு கட்டத்தில், பாரதிராஜாவிடம் அறை வாங்கி பின்னர் சரியாக நடித்ததை பெரியார்தாசன் மேடைதோறும் முழங்கினார்! அத்தகைய உணர்ச்சிக் காவியத்திற்கு ஒன்றிய அரசின் தேசிய விருது கிடைத்தது.

தலைநகர் டில்லியில் நடைபெற்ற விழாவில் ரவிக்கை அணியாத, பாம்படம் அணிந்த, தொங்கிப்போன காதுகளுடன் கூடிய மூதாட்டியான தன் தாய் கருத்தம்மா அந்த விருதைப் பெற்று மகிழ்ந்ததை தனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைத்து பூரித்துப் போனவர் பாரதிராஜா! இதனைப் போல இவரின் 'அந்தி மந்தாரை' படத்திற்கு கரங்களைப் பற்றி பாராட்டினார், எம்.ஜி.ஆர் பார்த்து ரசித்த இறுதி திரைப்படமும் அதுவே! இதன் பின்னர்தான் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனிடம் எம்.ஜி.ஆர் பேசினார்! திரைப்படம் வந்தால் எதிர்ப்பு வரும் என்று வெங்கட்ராமன் கூறியபோது, திரைப்படம் வராவிட்டால், அதைவிட பெரிய அளவில் எதிர்ப்பு வரும் என்று துணிச்சலுடன் வாதிட்டார் எம்.ஜி.ஆர்! தடைகளை தகர்த்துக் கொண்டு வந்த 'வேதம் புதிது' திரைப்படம் சமூகத்தில் அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியது. இந்திய அரசின் விருதையும் பெற்றது!

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கே, நடிப்பு சொல்லிக் கொடுத்து முதல் மரியாதை திரைப்படத்தை பாரதிராஜா தயாரித்தார். இந்த திரைப்படம் மக்களிடம் வரவேற்பு பெறாது, தோல்விதான் அடையும் என்று கூறிய இளையராஜா, அதற்காக பணம் பெறாமல் இசை அமைத்துத் தந்தார். ஆனால் அந்த திரைப்படம் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்டதோடு, ஒரு கோடி ரூபாய் நிதி தந்து, ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் காண்பிக்கப்படும் அளவு புகழ்ச் சரித்திரம் படைத்தது முதல் மரியாதை! கிடைத்த திரைப்பட விருதினை, தனது துணைவியாரை வாங்கச் செய்து, பெருமைப்படுத்தினார் பாரதிராஜா!

காதலுக்கு தடையாக மதமும், சாதியும், ஆதிக்கமும், ஆயுத மிரட்டலும் அணிவகுத்து நின்றபோது, சிலுவையையும், பூணுலையும் சுழற்றி எறிந்து விட்டு, மனிதர்களாய் ஒன்றிணைந்த காதல் ஜோடிகளின் 'அலைகள் ஓய்வதில்லை' திரைப்படத்தின் மூலம் மானுடத்தை உயர்த்திப் பிடித்தார் பாரதிராஜா!

"அஞ்சு பத்து அண்ணாக்கள் செய்ய வேண்டிய பகுத்தறிவு பிரச்சாரத்தை ஒரே படத்தில் சாதித்துக் காட்டிவிட்டாய்! என் படத்தில் நான் சொல்லத் தயங்கிய பல விஷயங்களை தைரியமாக படமாக்கி இருக்கிறாய்!" என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் பாரதிராஜா! சாதி மதக் கலவரங்களால், மூட நம்பிக்கைகளால், உயர் சாதி ஆணவத்தால், அர்த்தமற்ற சடங்குகளால் தமிழ் மக்கள் அன்றாடம் சந்திக்கும் கொடுமைகளை 'வேதம் புதிது' திரைப்படம் மூலம் மக்களிடம் கொண்டு சென்றார் பாரதிராஜா! "அடிக்கடி பாலுத்தேவர், பாலுத்தேவர் என்று சொல்கிறீர்களே, பாலு என்பது உங்கள் பெயர்! தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா? நான் கரையேறிவிட்டேன்! நீங்கள் எப்பொழுது கரையேறப் போகிறீர்கள்?" என்று குடுமி வைத்த சிறுவன் கேட்க, அவர் கன்னத்தில் விழுந்த அறைகளாக அதனை காட்சிப்படுத்தி, சாதி ஆணவத்திற்கு எதிராக அந்த படத்தில் அறை கூவல் விடுத்தார் பாரதிராஜா! இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே எதிர்ப்பு கிளம்பியது. அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனை சந்தித்து, தணிக்கைத் துறைக்கு அழுத்தம் கொடுத்து, திரைப்படத்தை வெளிவர முடியாமல் செய்ய பகீரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பிரச்சினையில் தலையிட்டு உதவிடுமாறு முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை நாடினார் பாரதிராஜா!

வேதம் புதிது திரைப்படம் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டபோது, அதனை பிரிவியூ தியேட்டரில் பார்த்து மகிழ்ந்த முதல்வர் எம்.ஜி.ஆர் பாரதிராஜாவின் கோவணம் கட்டி, வாயில் வெற்றிலை மென்று ஒதுக்கும் சப்பாணியாக கமல் ஹாசனையும், பரட்டையாக ரஜினி காந்த்தையும், மயிலாக ஸ்ரீதேவியையும் (இதழில் தேவியையும் என அச்சாகியுள்ளது), குருவம்மாவாக காந்திமதியையும், மருத்துவராக சத்யராஜையும் (இதழில் சத்யஜித்தையும் என அச்சாகியுள்ளது) 16 வயதினிலே திரைப்படத்தில் காட்டினார் பாரதிராஜா! பாரதிராஜாவிடம் 5 ரூபாய் முன்பணம் கொடுத்து, வண்ணப்படமாக இதனை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் ராஜ்கண்ணு! 5 லட்ச ரூபாய் செலவில் திரைப்படம் வெளிவந்து, சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த இசை அமைப்பாளர், சிறந்த பெண் பாடகி ஆகியவைகளுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகளையும், தென்னிந்திய பிலிம் பேர் விருதுகளையும் அள்ளிக் குவித்தது 16 வயதினிலே!

தூய காதலுக்கு கல்வி தடையில்லை என்று ஜெனிபர் டீச்சர் மூலம் சின்னப்பதாசுக்கு சொல்லிய 'கடலோரக் கவிதைகள்'; அண்ணனுக்கு உயிர் தந்து இரண்டாம் பாசமலராக ராதிகாவை அறிமுகம் செய்த 'கிழக்குச் சீமையிலே'; சிறை மீண்ட தன் கணவன் தன் கற்பு மீது சந்தேகப்பட்டபோது, அவன் கட்டிய தாலியைக் கழற்றி எறிந்து, சீதை, நளாயினி, சாவித்திரி ஆகியோர் போற்றிய புராணக் கதைகளை குழிதோண்டி புதைத்த புரட்சிப் பெண்ணாய் ஜோதியை காட்டிய 'புதிய வார்ப்புகள்', என பாரதிராஜாவின் ஒவ்வொரு திரைப்படமும் புரட்சிக்கு அழைப்பு விடுவிக்கும் அழியாத காவியம் ஆகும்! அதனால்தான், "பாரதிராஜாவின் படங்களில் கருத்துப் புலப்படுத்தல்" என்ற தலைப்பில், பேராசிரியர் இரகுபதி தமிழ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்து பட்டம் பெற்றிருக்கிறார்!

பாரதிராஜா மிகச்சிறந்த இயக்குநர் என்பது மட்டுமல்ல, பாக்கியராஜ், மணிவண்ணன், சுந்தர்ராஜன், மனோபாலா, சீமான் என்ற இயக்குநர்களையும், நெப்போலியன், நிழல்கள் ரவி, ராதிகா, கார்த்திக், பாண்டியராஜன், ராதா, ரோஹினி, வடிவுக்கரசி முதலான நடிகர், நடிகையர்களையும் பயிற்சி தந்து உயர்த்திவிட்ட உன்னத மனிதர் ஆவார். இயக்குநர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி, ரெட்டைச்சுழி, பாண்டிய நாடு, திருச்சிற்றம்பலம், குரங்கு பொம்மை முதலான திரைப்படங்களில் சிறந்த நடிகராகவும் தன் திறமையை வெளிக்காட்டினார் பாரதிராஜா! இவைகள் அனைத்திற்கும் மேலாக, சிறந்த பகுத்தறிவாளர், தமிழீழ விடுதலை ஆதரவாளர், தமிழின உணர்வாளர் என பன்முக அடையாளங்களைக் கொண்டவர் பாரதிராஜா!

5 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியார் திடலில், திராவிடர் கழகம் நடத்திய புத்தக விழாவில் அவரோடு பங்கேற்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. அந்த நிகழ்வில் தன் சிறு வயது நினைவுகளை மலரும் நினைவுகளாய் பேசினார் பாரதிராஜா! எட்டு வயது சிறுவனாக அவர் இருந்தபோது, காங்கிரஸ் காரரான அவர் தந்தை, 'கருப்புச்சட்டை கூட்டங்களுக்கு தப்பித்தவறிக்கூட நீ சென்று விடாதே' என்று கூறினாராம். கருப்புச் சட்டைக்கு ஒரு கூட்டமா அப்படி ஒரு கட்சியா ? அதன் விவரம் என்ன என்று தன் தமிழாசிரியர் இராமலிங்கம் பிள்ளையிடம் கேட்டாராம் பாரதிராஜா! தமிழாசிரியர் இராமலிங்கம் ஓர் திராவிட இயக்கத்துக்காரர்; அவர் தந்த விளக்கம் கேட்டு, பெரியார் கூட்டத்தை மறைந்திருந்து கேட்ட பாரதிராஜா, 'பெரியார் பேசுவதில் என்ன தவறு' என்று நினைத்தாராம்! 'என் பகுத்தறிவின் தொடக்கம் அதுதான்' என பெருமைபட பேசினார் பாரதிராஜா!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 'பெரியார் சிலையை உடைப்போம்' என்று எச்.இராஜா திமிரோடு பேசியபோது, தலைவர் வைகோ அவர்கள், "துணிச்சலும், நேர்மையும் இருந்தால் சொல்லிவிட்டு வா; உன் கையை துண்டாக்குகிறேன்!" என்று அறைகூவல் விடுத்து அவரின் கொட்டத்தை அடக்கினார் அல்லவா? அதேபோல, அதே மொழியில், அதே பாணியில், பாரதிராஜாவும் பதிலடி கொடுத்து, சங்பரிவாரின் சனாதனக் கும்பலின் கன்னத்தில் அறைந்தார் பாரதிராஜா!

காவிரி உரிமை மீட்கவும், தமிழின உரிமை காக்கவும், நெய்வேலியிலும், இராமேசுவரத்திலும் திரைக் கலைஞர்களை அணி திரட்டி, ஒன்றிய அரசுக்கு எதிராக போர் முழக்கம் எழுப்பினார் பாரதிராஜா! தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரை ஏழு ஆண்டுகாலம் போராடி, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்று மாற்றிய தமிழ் உணர்வின் சின்னம்தான் பாரதிராஜா!

தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்; தமிழீழம் சென்று தேசிய தலைவர் பிரபாகரனை சந்தித்து, ஆதரவு தெரிவித்தவர்; என்பது மட்டுமல்ல, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஈழத் தமிழினம் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட கொடுமை தாண்டவமாடிய காலத்தில், ஒன்றிய அரசு தனக்கு வழங்கிய 'பத்ம பூஷன்' விருதை தூக்கி எறிந்து, திருப்பி அனுப்பிய தன்மானத் தமிழன்தான் பாரதிராஜா!

ஜெயகாந்தன், கி.ரா., அகிலன், தீபம் பார்த்தசாரதி, பொன்னீலன், நாஞ்சில் நாடன், மேலாண்மை பொன்னுசாமி ஆகியோரின் படைப்புக்களை படித்து பரவசம் கொண்டேன் என்று கூறிய பாரதிராஜா, கல்கியின் பொன்னியின் செல்வன் அனைத்து பாகங்களையும், மின்சாரவிளக்கு இல்லாத அந்த காலத்தில் மண்ணெண்ணை சிமிழ் விளக்கில் படித்தேன் என்று பெருமை பேசியவர் பாரதிராஜா! வீடு முழுக்க இது போன்ற புத்தகங்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறேன். அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை எடுத்துப் படிக்க நேரமில்லாமல், சட்டையில் தீ பற்றிய இளைஞன் ஓடுவதைப்போல, திரைத்துறையில் ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று கவலையுடன் சொன்னவர்தான் பாரதிராஜா! இதோ அந்த ஓட்டம் நின்றுவிட்டது! கரகரக்கும் அவரின் வெண்கலக்குரல் காற்றில் கரைந்துவிட்டது!

பூங்காற்று திரும்புமா மடியில் வெச்சு தாலாட்ட.... நமக்கொரு தாய் மடி கிடைக்குமா?

என்ற ஏக்கம் துளைத்தெடுக்க... அவரின் திரைக்காவியங்களால் என்றும் நம்மோடு அவர் வாழ்கிறார் என்ற உணர்வோடு பாரதிராஜா என்ற இமயச் சிகரத்திற்கு, புகழ் வணக்கம், வீரவணக்கம் செலுத்துவோம்!

  • ஆ.வந்தியத்தேவன், தலைமைக் கழகச் செயலாளர்
பாரதிராஜா : பூங்காற்று திரும்புமா! | சங்கொலி