தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள திரு மாணிக்கம் தாகூர் அவர்களை கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, காங்கிரஸ் கட்சி வலிவுடனும், பொலிவுடனும் திகழ்வதற்கு தங்களது உழைப்பும் ஆற்றலும் பெரிதும் பயன்பட மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்தினார். தலைமைக் கழகம் 27.06.2026 அன்று விடுத்துள்ள அறிக்கை.






