திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் பல்வேறு ரயில்வே சார்ந்த கோரிக்கைகள் குறித்து 13.06.2026 அன்று காலை மதுரை ரயில்வே கோட்ட மேலாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, கோரிக்கை மனுக்களை வழங்கி துரை வைகோ எம்.பி., விரிவாக கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 30.05.2026 அன்று அவர் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்ட குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, கழிப்பறை பராமரிப்பு, குடிநீர் வசதிகள், RO குடிநீர், தேசியக் கொடி ஏற்றுதல் மற்றும் அம்ரித் பாரத் நிலைய மேம்பாட்டுப் பணிகளை நவம்பர் 2026-க்குள் தரமாக நிறைவு செய்ய வலியுறுத்தினார். மேலும், புதுக்கோட்டை ரயில் நிலையத்தை General Quota முறைக்கு மாற்றுவது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கழிப்பறையை கட்டணமின்றி பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாகவும் கோரிக்கை வைத்தார். மேலும், உடையான்பட்டி மற்றும் பூங்குடி ரயில்வே மேம்பாலத் திட்டங்கள், திண்டுக்கல்-திருச்சி வழித்தடத்தில் கூடுதல் ஷட்டில் ரயில்கள், புதிய இராமேஸ்வரம்-திருச்சி மற்றும் திருச்சி-திருச்செந்தூர் இன்டர்சிட்டி ரயில்கள், திருச்சி-திண்டுக்கல் DEMU-வை பழனி வரை நீட்டித்தல், திருச்சி-காரைக்குடி ஷட்டிலை மானாமதுரை வரை நீட்டித்தல், கீரனூர் ROB மற்றும் போட்மெயில் ரயில் நிறுத்தம், இனாம் குளத்தூர் ரயில்வே கேட்டில் நிலத்தடி மின்கம்பி அமைப்பதற்கான அனுமதி, மற்றும் கோவில்பட்டி மழைநீர் வடிகால் திட்டத்திற்கு NOC வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தார். இந்தக் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றது. புதுக்கோட்டை அம்ரித் பாரத் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நவம்பர் 2026-க்குள் நிறைவடையும், புதுக்கோட்டை General Quota கோரிக்கை பரிசீலிக்கப்படும், கீரனூர் ரயில்வே மேம்பாலத் திட்டம் தற்போது பரிசீலனையில் உள்ளது. மேலும் இனாம்குளத்தூர் ரயில்வே கேட்டில் நிலத்தடி மின்கம்பி அமைப்பதற்கான அனுமதி தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று கோட்ட மேலாளர் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து, இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில், தனது அலுவலகம் ரயில்வே மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடையே தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் என்றும் துரை வைகோ எம்.பி., தெரிவித்தார். திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் ரயில்வே சார்ந்த கோரிக்கைகள் அனைத்தையும் சாதகமான முறையில் பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் உறுதியளித்தார்.

அண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்
திருவனந்தபுரம் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மையத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான அப்துல்கலாம் தேசிய விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலில் 29.07.2026 அன்று நடைபெற்றது.
மேலும் படிக்க »





