மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு 22.06.2026 அன்று காலை 8.40 மணி அளவில் அலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். அவர் கூறிய பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி வருமாறு:-
"மாண்புமிகு முதல்வர் அவர்களே, இந்த இனிய பிறந்தநாள் ஆண்டுதோறும் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாடப்பட்டு, நீங்கள் எடுக்கின்ற அரசியல் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும், எதிர்ப்புக்கள் தவிடு பொடியாகவும், தமிழ்நாட்டினுடைய மேன்மைக்காவும், உயர்வுக்காகவும், வழிகாட்டும் நல்லாட்சியை நீங்கள் நடத்திடவும், முழுமையான உடல் நலனோடும், மன நிறைவோடும் பன்னூறு பிறை கண்டு வாழவும் இயற்கைத் தாயின் அருளைப் பிரார்த்திக்கிறேன்" என்று வாழ்த்துத் தெரிவித்தார்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் அதற்கு நன்றி கூறினார்.
தலைமைக் கழகம் 22.06.2026 அன்று விடுத்துள்ள செய்தி.



