வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

அண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்

அண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்

திருவனந்தபுரம் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மையத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான அப்துல்கலாம் தேசிய விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலில் 29.07.2026 அன்று நடைபெற்றது.

திருவனந்தபுரம் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மையத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான அப்துல்கலாம் தேசிய விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலில் 29.07.2026 அன்று நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆதவ் அர்ஜுனா அவர்கள் விருதினை வழங்கி உரையாற்றும்போது, “அண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன்!” என்று குறிப்பிட்டார். அவரது உரை வருமாறு:

இங்கே இருப்பதற்கு மூன்று முக்கிய காரணம், ஒன்று நான் பெரிதும் விரும்பக்கூடிய என்னுடைய வாழ்நாளில் எனக்கு ஒரு சிந்தனையை எப்போதும் கொடுக்கக் கூடிய ஐயா ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள். இரண்டாவது நம்முடைய தலைவர் காதர் மொய்தீன் ஐயா அவர்கள்.

மூன்றாவது முக்கிய காரணம், புயல் என்று அழைப்பீர்கள், பார்லிமெண்ட் டைகர் என்று சொல்வீர்கள். சிறு வயதிலிருந்தே அவரது பேச்சைக் கேட்டு வளர்ந்தவன். பொடா சட்டத்தில் கைது செய்து, மன்னிப்புக் கேள் என்று கூறியபோதில்கூட, நான் சிறையிலேயே இருப்பேன் என்று சிறையில் இருந்தவர்.

காதர் மொய்தீன் ஐயா அவர்கள் அழைத்தார்கள் என்று எங்கள் முதல்வர் அண்ணன் ஜோசப் விஜய் அவர்கள் புறப்பட்டு நேராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு வந்தார். அந்த அலுவலகத்தின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர் வருகை தந்தது எங்களுடைய அண்ணன் ச.ஜோசப் விஜய் அவர்கள் மட்டும்தான். அந்த அளவிற்கு நட்பும், அன்பும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் இருக்கிறது.

அதிகாரத்திற்காகவும், ஆட்சிக்காகவும் இல்லை எங்கள் சமூகத்தினுடைய தூய்க்காக ஆட்டாவில் பங்கு என்று நாங்கள் முடிவெடுத்தோம். ஆனால் காலச் சூழ்நிலை அரைப் பார்த்து சோடா பாட்டல் என்று சொல்லும்போது ஏற்படுகின்ற வருத்தம் எங்களுக்கும் இருக்கிறது. 87 வயதான மூத்த தலைவரை நோக்க வைக்கும் இந்த விமர்சனம் ஒரு கேவலமான சிந்தனை.

அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். கொள்கைகள் மாறலாம். ஒரு கட்சி தோற்கலாம். ஒரு கட்சி கூட்டணி மாறலாம். ஆனால் ஒரு தலைவர் மீது வைக்கப்படும் விமர்சனம் நாகரிகமாகவும், உண்மைத் தன்மையோடும் இருக்க வேண்டும். ஆட்சி அமைந்த இந்த 60 நாட்களில் ஐயா காதர் மொய்தீன் அவர்கள் தனக்கென்று ஒரு கோரிக்கையும் வைத்ததே இல்லை.

தமிழக மக்கள் ஆதரித்து, 108 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுவிட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்ததென்றால், பா.ஜ.க. அரசு வந்துவிடும். தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு, வி.சி.க.வுடன் சேர்ந்து ஐயா அவர்களும் முடிவு எடுத்தார்கள். இதுதான் உண்மை.

பதவி ஏற்ற பின்பும் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களுக்கும், எங்களுக்கும் மன நிறைவு இல்லாமலே இருந்தது. எங்களிடம் வந்து அமைச்சரவையில் இடம் கொடுங்கள் என்று ஐயா காதர் மொய்தீன் அவர்கள் கேட்டதே இல்லை. நாங்கள் ஆதரவு கொடுத்துவிட்டோம். நம்பிக்கையோடு இருக்கிறோம். மக்கள் கொடுத்த ஆதரவுக்கு நல்ல ஆட்சியை நடத்துங்கள். மதச்சார்பின்மை, சமூக நீதியில் உறுதியோடு இருங்கள். இதுதான் அவர் கேட்டவை.

அப்போது எங்களுடைய முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக வேண்டும் என்று கூறினார். சகோதரர் ஷாஜகான் அமைச்சரவையில் பங்கேற்றிருப்பது ஒரு கட்சிக்கான அங்கீகாரம் என்பதைவிட, ஒரு சமூகத்திற்கான பிரதிநிதித்துவம்.

எங்கெல்லாம் ஏழை மக்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும். இதுதான் அம்பேத்கர் கடைசியாக எழுதியது. யாரிடமும் மனு கொடுக்கச் செல்ல வேண்டாம். அதிகாரத்தை நோக்கிச் சென்று அனைத்து உதவிகளையும் மக்களுக்குச் செய்யுங்கள் என்று கூறினார்.

விமர்சனங்களைத் தாண்டி மதச்சார்பின்மையும், சமூக நீதியும் கொண்ட ஒரு ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அதில் எப்போதும் உறுதியாக இருப்போம்.

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திடுவார்கள் என்று எல்லோரும் கூறினார்கள். அதிமுகவுடன் சென்றிருந்தால் இன்னும் கூடுதலாக 200 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும். அன்றைக்கு அதிமுக பா.ஜ.க.வோடு இருந்த காரணம் மட்டு மல்ல, எங்கள் தலைவர் தன்னை நம்பினார், மக்களை நம்பினார், பெண்களை நம்பினார், இளைஞர்களை நம்பினார். அதனால்தான் தனியாக போட்டியிட வேண்டும் என்று கூறினார்.

ஒவ்வொரு முறையும், மதச் சார்பின்மை, சமூக நீதிக்கான அரசாக இருக்கும் என்று பதிவு செய்து கொண்டே இருந்தார் எங்களுடைய தலைவர் விஜய் அவர்கள்.

இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் நினைத்துப் பார்க்க வேண்டும். தேர்தலுக்குப் பின்பு 108 தொகுதிகளுடன் நிற்கிறோம். நீங்கள் சேர்ந்தால் 47 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்து விடும் என்று ஒரு பக்கத்திலிருந்து பெரிய குரல் எழுந்தது. 108 எம்.எல்.ஏ.வை வைத்து ஆட்சி அமைக்கப் போறாங்களா? தெரியாது. காங்கிரஸ் போய் ஆதரவு கொடுக்குமா? தெரியாது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போய் ஆதரவு கொடுக்குமா? தெரியாது. அதிமுக போய் ஆதரவு கொடுக்குமா? தெரியாது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு என்று அந்த கவலை எங்கள் தலைவருக்கு இல்லை. ஏனென்றால், அவர்கள் திமுகவோடு 50 வருட கூட்டணி. இதுதான் அன்றைக்கு இருந்த நிலைமை.

அப்போது, இயற்கையும், தேர்தலும் ஒரு புதிய அரசை உருவாக்கியுள்ளது. இந்தத் தேர்தல் முடிவு என்பது பெரிய வரலாறு. யாரும் எதிர்பாராத செயல். அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சரவையில் சேர்ந்திருப்பது இன்னும் மிகப் பெரிய வரலாறு. இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் நீங்கள் ஒவ்வொரு தேர்தலிலும் குரலற்றவர்களாக இருந்தீர்கள். அது இன்றைக்கு அல்லாஹ்வின் அருளால் மாறியது.

அதிமுகவின் 47 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் நான் முதலமைச்சரானால், உங்களுக்குள் 15 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைக் கேட்போம், மந்திரிகள் ஆக்குவோம், சமூக நீதிக்கான அரசை மட்டுமே நாம் உருவாக்குவோம். இவர்கள் பா.ஜ.க.வோடு செல்வார்கள் என்று தெரியாது என்று இப்போது திமுகவினர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருந்தால், வெற்றி பெற்று முடித்தவுடன் அன்றைக்கே ஆதரவு பெற்றிருப்போம்.

மக்கள் தீர்ப்புக்கு ஆதரவாக இருப்பவர்கள் அவர்கள் தாங்களாகவே உங்களுக்கு ஆதரவு அளிப்போம் என்றார். அதன்படி கம்யூனிஸ்டுகள், வி.சி.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு கொடுத்தார்கள்.

200 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் அதை தைரியமாக எங்கள் தலைவர் பார்த்திருக்க மாட்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைச்சரவையில் பங்குபெற்றதுடன், கரூர் தொகுதியிலும் ஜெயித்தது. இப்பொழுதுதான் எனது அமைச்சரவை முழுமை பெற்றது. இறைவனுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்தார் எங்கள் தலைவர். ஏழை எளிய மக்களுக்கான அரசு இது என்பதை முதலமைச்சர் உணர்த்தியிருக்கிறார். வட்டமளவில் பணமில்லை என்று சொல்வதல்ல ஒரு குறையாக இருக்கலாம். ஆனால், வட்டமளவில் பெண்களுடைய பயணம் முன்பு அரசுப் பேருந்துகளில் இலவசமாக இருந்ததுபோல், இப்போது மாற்றித் தந்ததற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுதான் புதிய சிந்தனை.

சிறு வயதில் நான் தமிழ் வழி கல்வியில் ஆரம்பக் கல்வியை படித்திருந்தாலும், செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தேன். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களும் அங்கு படித்த முன்னாள் மாணவர்தான். என்னுடைய பேராசிரியர் அவர்கள் அப்துல் கலாம் அவர்களின் புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். அப்துல் கலாம் அவர்களும் தமிழ் வழிக் கல்வி படித்தவர். சாதாரணமான ஏழை இஸ்லாமிய குடும்பத்திலிருந்து வந்தவர்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பெரிய விஞ்ஞானியாக மாறியதும், குடியரசுத் தலைவரானது அதுவும் எனது குடும்பம் என்று நினைப்பதுதான் அப்துல் கலாம் அவர்கள் மீது எனக்குள்ள மதிப்பு.

சென்னை அண்ணா நகரில் ஒருமுறை தி.மு.க., பொதுக் கூட்டத்தில் வைகோ பேசும்போது, ஒரு கவிஞர் பேச்சைத் தொடங்கினார். அப்போது வைகோ அவர்களை ஒரு பாசிச சக்தியாக உருவகப்படுத்தியதை, வைகோ அவர்கள் தேர்தல் களத்தில் எதிர்கொண்ட விதத்தைப் பார்த்தேன். அன்று மேடையில் நின்ற வைகோ அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை ‘இந்திய நாட்டின் பாசறை’ என்று வர்ணித்தார். பா.ஜ.க.வைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் அழைத்தும் இந்திய நாட்டின் பாசறையாக உருவகப்படுத்திய முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த ஐயா காதர் மொய்தீன் அவர்களைத்தான் அவர்கள் முன்னிறுத்தினார்.

அனுபவம் வாய்ந்த தலைவர்கள், கொள்கை பலமிக்க தலைவர்களைப் பெருமைப்படுத்துவது நம்முடைய கடமை. இந்த மேடையில் அப்துல்கலாம் விருது வழங்கும் விழா நடைபெறும்போது, தலைவர் வைகோ அவர்களின் தியாகங்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இங்கு எல்லோரும் சமம் என்ற ரத்தக் குரல் தமிழ் நாட்டிலிருந்து சத்தமாகக் கேட்கத் தொடங்கியுள்ளது. அதுதான் நம்முடைய அரசியல்.

நான் கல்லூரியில் அரசியல் மேடையில் படிக்கும் போது, அரசியல் தலைவர்கள் பேச்சுகளைக் கேட்போம்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் தேர்தல் பொதுக்கூட்டம் என்றால், அந்தத் திரைப்படக் கல்லூரியில் கூட்டம் நடைபெறும். அங்கே செல்வோம். கலைஞரின் பேச்சைக் கேட்பதற்கு எவ்வளவு ஆர்வமிருந்ததோ, அதேபோல் வைகோ அண்ணன் பேச்சைக் கேட்பதற்கும் ஆர்வம் இருந்தது.

அவர்களின் பேச்சைக் கேட்கச் செல்வோம். இவர்கள் எதெல்லாம் பேசுகிறார்களோ, நாங்கள் அதைச் சரியாகத் தயாரித்துப் பேசுவோம்.

இப்போதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அண்ணன் வைகோ அவர்கள் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்தப் பொடா சட்டம் விலக்கப்பட்டவுடன், அவருக்கு ஒரு பெரிய ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது ஒரு லட்சம் இளைஞர்கள் திரண்டு நின்று பார்த்தார்கள்.

அப்போது என் உடன்பிறந்த நண்பர் வைகோவை காட்டி, "எப்படி இருக்கிறார் பார்; அனல் பறக்கிறது" என்றார்.

பேச்சைக் கேட்கச் செல்லும்போது, பேச்சைத் துண்டு பிரசுரங்களாகக் கொடுத்திருப்பார்கள். இது எனக்கு வழங்கப்பட்டது. அப்படி அண்ணன் வைகோ அவர்களின் பேச்சை நான் மேடைகளில் பேசிப் பார்த்திருக்கிறேன். அண்ணன் வைகோ அவர்களின் பேச்சை மேடைகளில் குரலாகக் கேட்கும்போது, அவை ஒரு நாட்டின் வரலாற்றையே பேசக்கூடியதாக இருக்கும்.

அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ, அரசியல்வாதிகளோ, ஏழைகளின் உணர்வுகளை உணர்ந்து அவர்களுக்கு உதவ வேண்டும்.

சமூக நீதி, மதச்சார்பின்மை என்ற கோட்பாடுகள்தான் நமது அரசியல் இயக்கத்தின் அடிப்படைகள்.

நாங்கள் எங்களது உரிமைகளை மீட்பதற்கு பாடுபடுகின்ற இயக்கம். எங்கள் அரசு ஒரு மதச்சார்பற்ற அரசாக இருக்கும் என்று தலைவர் விஜய் உறுதிபூண்டுள்ளார். நாங்கள் எப்போதும் உங்களுக்குப் பக்கபலமாக இருப்போம்.

தமிழ்நாட்டில் எப்பொழுதும் மதப் பெரும்பான்மை வாதம் இடம் பெற முடியாத ஒரு அரசியலையும், அரசையும் எங்களுடைய முதலமைச்சரும், நாங்களும் உருவாக்குவோம். உங்களுடைய புத்தகங்கள், பேச்சுக்கள் மூலம் நாங்கள் கற்றது இதுதான். ஐயா காதர் மொய்தீன் அவர்களிடம் கற்றுக் கொண்டதும் இதுதான்.

நான் வாழ்க்கையில் இரண்டு முடிவுகளை தவறாக எடுத்துவிட்டேன் என்று ஐயா வைகோ அவர்கள் கூறினார். ஒரு முடிவு நான் ஒரு கட்சியில் கூட்டணியில் சேர்ந்தது. மற்றொரு முடிவு 2017 இல் எடுத்த முடிவு என்று கூறினார். அது பழைய வரலாறு. ஐயா வைகோ அவர்களே கவலைப்படாதீர்கள். தமிழக வெற்றிக் கழகக் கூட்டணியில் நீங்கள் இணைந்தவுடன், எங்கள் தலைவருடன் சேர்ந்தவுடன் உங்களுக்கான மரியாதையையும், நீங்கள் சொல்லக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நாங்கள் எப்பொழுதும் பெரிதாக எடுத்துக் கொண்டு நல்ல கருத்துக்களை அரசில் செயல்படுத்தக் கூடிய தலைமையை இன்றைக்கு நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கு துரை வைகோ மட்டும் மகன் அல்ல, என்னையும் உங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். இனி தேர்தல் வேலைகளை எல்லோரும் சேர்ந்து செய்வோம். தமிழக வெற்றிக் கழகம் மட்டும் இல்லை. இனிமேல் தனியாக தேர்தலில் எவரும் பயணிக்கப் போவது இல்லை. நாம் எல்லோரும் சேர்ந்து இனி எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் 65 விழுக்காட்டுடன் இந்தக் கூட்டணி வெற்றி பெறும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

உள்ளாட்சித் தேர்தலாக இருக்கட்டும், இடைத் தேர்தலாக இருக்கட்டும், நாடாளுமன்றத் தேர்தலாக இருக்கட்டும் தமிழக வரலாற்றில் முதல் முறையாக 65 விழுக்காட்டுடன் நாம் மிகப் பெரிய வெற்றி பெறுவோம்.

எதிராளிகளுக்கு பதில் சொல்லி உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். உங்களுடன் விளையாடுகிற அளவுக்கு எதிரில் யாரும் இல்லை. கலைஞருடன் அது முடிந்துவிட்டது. நீங்கள் கலைஞருக்குக் குரல் கொடுத்தீர்கள் சரி, இன்றைக்கு நீங்கள் குரல் கொடுக்கும் அளவுக்கு எதிரில் பெரிய ஆள் இல்லை. அதனால்தான் கொளத்தூரிலேயே முடித்து விட்டோம். கொளத்தூரிலேயே வரலாற்றை முடித்து விட்டோம்.

எத்தனை முறை வேண்டுமானாலும் மறு எண்ணிக்கை கேட்கலாம். ஒன்பதாயிரம் வாக்குகளிலிருந்து 15 ஆயிரம் வாக்குகளாக மாறுமே தவிர, ஒன்பதாயிரம் ஓட்டில் ஒரு ஓட்டு குறையாது.

ஏனென்றால் இது மக்கள் கொடுத்த தீர்ப்பு. குடும்ப ஆட்சியைத் தூக்கி எறிவதற்கான தீர்ப்பு. அவர்கள் ஏழு இயந்திரங்களை அல்ல, 70 இயந்திரங்களை எடுத்துப் பார்த்தாலும் ஒன்பதாயிரம் ஓட்டுகளில் இருந்து 15 ஆயிரம் ஓட்டுகளாக மாறுமே தவிர, ஒரு ஓட்டுகூட குறையாது. மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்று யாரோ அவருக்கு தவறாக ஆலோசனை கூறியிருக்கிறார்கள். அது ஜனநாயகக் கடமை. அவர்கள் செய்துவிட்டுப் போகட்டும்.

ஆகையால், உங்கள் கர்ஜனையை நாடாளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் தான் நாங்கள் கேட்க வேண்டும். சிலருக்காக பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். பழைய வரலாற்றை தூக்கிப் போடுங்கள். இப்பொழுது ஒரு புதிய வைகோ அவர்களை நாங்கள் பார்க்கப் போகிறோம். வைகோ 2.0. நாங்கள் உங்களுக்கு பலமாக இருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு பலமாக இருக்கிறீர்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு நாங்கள் பலமாக இருக்கிறோம். அவர்கள் எங்களுக்கு பலமாக இருக்கிறார்கள். இங்கு ஆதிக்கம் இல்லை. நட்பும், அன்பும் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கும். அதிகாரத்துக்கான சண்டை இல்லை. எம்.எல்.ஏ.க்களுக்கும், அமைச்சர்களுக்கும் சண்டை இல்லை. தமிழ்நாட்டை காக்கக்கூடிய நட்பும், உறவும் நம்மிடையே இருக்கிறது.

இளைஞர்கள் எங்களுடைய அரசியல் கொள்கை. பெண்கள்தான் நம்முடைய அரசியலின் கொள்கை. அதிகாரத்துக்காக இந்தக் கூட்டணி ஒன்றுசேரவில்லை. மாறாக சமூக நீதிக்காக இந்தக் கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.

அமைதி, 70 நாள் ஆகிவிட்டது. இதுவரைக்கும் ஐயா காதர் மொய்தீன் குறித்து ஒரு துளி அமைச்சர் கூட குறைகூறவில்லை. ஒரு சுதந்திரமான அமைச்சர். அவர் சுதந்திரமாக செயல்படுகிறார் என்று தான் முதல்வர் ஒவ்வொரு அமைச்சரவையிலும் கூறுகிறார். அப்படி சகோதரத்துவமாக நாம் அமைந்திருக்கிறோம். அப்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் ஒரு 2.0. நம் இஸ்லாமிய பெண்கள் மேற்படிப்பு படிக்கக்கூடிய திட்டங்களை உருவாக்க வேண்டும். ஐயா காதர் மொய்தீன் மூலமாக பெரிய திட்டங்களைக் கொண்டு வருவோம்.

வெளியே அமைச்சரவையுடன் என்ன மாற்றம் ஏற்பட்டது? என்று சில பேர் கேட்கிறார்கள். அவருடைய அமைச்சரவையில் எடுத்ததற்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய். இந்த வருடத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய்.

ஒரு தலித் சகோதரர் வி.சி.க.விலிருந்து வந்து தனது மக்களுக்காக 25 ஆயிரம் கோடி ரூபாயை எந்தத் தடையுமில்லாமல், எந்தவிதமான குடும்ப ஆதிக்கமும், கமிஷனும் இல்லாமல் செலவு செய்யப் போகிறார். அந்தப் பணம் உண்மையான ஏழையாக இருக்கக்கூடிய தலித் மக்களுக்குச் சென்று சேரும். இதுதான் அரசிடமுடைய நிர்வாகம். இது ஆதிக்கவாதிகளுக்குப் புரியவில்லை.

எட்டு தலித் அமைச்சர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது இந்த வருடம் கழித்துத் தெரியும். சில அமைச்சர்களுக்கு இரண்டு மாதத்திற்குள் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால் நாம் நம் கடமையைச் செய்வோம்.

இஸ்லாமிய, தலித், கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் எல்லோரும் சேர்ந்து இந்த ஆட்சியை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்கான கடமை உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் உரையாற்றினார்.

அண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம் | சங்கொலி