சுற்றுச்சூழலைப் பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி கண்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருப்போரூரில் மாவட்டச் செயலாளர் பூ.லோகநாதன் ஏற்பாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றினார். துணைப் பொதுச்செயலாளர் சு.ஜீவன், அமைப்புச் செயலாளர் சு.குருநாதன், தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன் மாவட்டக் கழகச் செயலாளர்கள் நெமிலிச்சேரி மு.பாபு, சைதை ப.சுப்பிரமணி, மாவை மகேந்திரன், பாரத் கே.ஆர்.இராஜேந்திரன், காயல் இ.கோவிந்தராஜ், தென்றல் நிசார், நா.பாஸ்கர், ம.தொ.மு.பே கி.வெங்கடேசன் மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகளும், கழகத் தோழர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர் (30.06.2026).

அண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்
திருவனந்தபுரம் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மையத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான அப்துல்கலாம் தேசிய விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலில் 29.07.2026 அன்று நடைபெற்றது.
மேலும் படிக்க »





