வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

நாடாளுமன்றத்தில் வைகோ’: 30 ஆண்டுகால வீர வரலாற்றைப் பதிவு செய்யும் 4 தொகுதிகள் - நூல் அறிமுகம்

நாடாளுமன்றத்தில் வைகோ’: 30 ஆண்டுகால வீர வரலாற்றைப் பதிவு செய்யும் 4 தொகுதிகள் - நூல் அறிமுகம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 30 ஆண்டுகால நாடாளுமன்றப் பணிகளையும், அவர் ஆற்றிய உரிமைக்குரல் உரைகளையும் தொகுத்து 4 தொகுதிகளாக ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ (Vaiko in Parliament) எனும் வரலாற்று ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணி: 1978 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு, தமிழீழ விடுதலைப் போராட்டம், மாநில சுயாட்சி, காவிரி நதிநீர் உரிமை, போபர்ஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஆற்றிய அனல் பறக்கும் உரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. சிறப்பம்சங்கள்: 23 முக்கிய தேசிய மற்றும் சர்வதேச ஆளுமைகளின் அணிந்துரைகள், அரிய புகைப்படங்கள் மற்றும் வைகோவின் அரசியல் சாதனைகளின் முழுமையான ஆவணமாக இந்நூல் அமைந்துள்ளது.

இங்கிலாந்தின் தேம்ஸ் நதிக்கரையில், பிரபுக்கள் சபை, காமன்ஸ் சபை ஆகியவைகள் இணைந்த நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை கண்டு களித்த பெருமைக்குரிய தலைவர் நம் தலைவர் வைகோ!

சீன தேசத்தில், புரட்சியாளர் மாவோவின் கல்லறைக்கு எதிரில், ‘மக்கள் மாமன்றம்’ என்ற பெயரில் அமைந்துள்ள நாடாளுமன்றத்தில், இந்திய அரசின் பிரதிநிதியாக உரையாற்றிய பெருமை நம் தலைவர் வைகோ அவர்களுக்கு உண்டு!

அமெரிக்க நாட்டின் தலைநகர் வாஷிங்டன் நகரில், கேபிடல் ஹில் என்ற இடத்தில் அமைந்துள்ள நாடாளுமன்றம்...

சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய கொள்கைகளை உலகுக்கு வழங்கிய பிரெஞ்சு நாட்டின் நாடாளுமன்றம்...

ஸ்விஸ் நாட்டின் பெர்ன் நகரில், அந்நாட்டின் நான்கு மொழிகளையும் ஆட்சி மொழிகளாக பெருமையுடன் சுவரில் பொறித்துள்ள அந்நாட்டு நாடாளுமன்றம்...

ஆஸ்திரேலிய நாட்டின் எழில் கொஞ்சும் நாடாளு மன்றம்

முதலான வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளு மன்றங் களை நேரில் கண்டு அங்கு காலடிகளை பதித்த பெருமைக்குரிய தலைவர் நம் தலைவர் வைகோ!

இந்த வரிசையில் இந்திய நாடாளுமன்றத்தில் 26.04.1978 அன்று முதன் முதலாக காலடி எடுத்து வைத்து, “இந்தியை திணித்தால், தூங்குகிற வேங்கைப் புலியை உசுப்பிவிடும் பேராபத்தை சந்திப்பீர்கள்” என்று அண்ணாவின் குரலை ஓங்கி ஒலிக்கத் தொடங்கியவர் நம் தலைவர் வைகோ!

“உலர்ந்த புல்லின் ரொட்டிகள் கிடைக்கும் அந்த நேரம் வரை, ஓடைகளில் தண்ணீர் கிடைக்கும் அந்த நேரம் வரை, நான் வளிமண்டலத்தின் காற்றை சுவாசிக்கும் அந்த நேரம் வரை, என் சொந்த நிலத்திற்காக என் வாளை உயர்த்துவேன். ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன்” என்ற மாவீரன் ராணா பிரதாப் சிங்கின் இலட்சிய முழக்கத்தை மேற்கோள் காட்டி, 24.07.2025 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்ற பிரியா விடை கூட்டத்தில், “தமிழீழ விடுதலைக்காகவும், தமிழின விடுதலைக்காகவும் தொடர்ந்து களமாடுவேன்” என்று சூளுரைத்தவர்தான், திராவிட இயக்கப் போர்வாள் வைகோ!

நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் 30 ஆண்டுகளாக, தலைவர் வைகோ அவர்களின் உரிமைக்குரல் இமயம் அதிர ஓங்கி ஒலித்தது. அந்த உரைகள் அனைத்தும், நான்கு தொகுதிகளாக தொகுக்கப்பட்டு, “நாடாளு மன்றத்தில் வைகோ (VAIKO IN PARLIAMENT)” என்ற வரலாற்று ஆவணமாக குமுதம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

“நாடாளுமன்றத்தின் சுவர்கள் வைகோவின் குரலை இன்றும் எதிரொலிக்கிறது” (The Walls of Parliament still eco Vaiko’s Voice) என்ற வைர வரிகள் கல்வெட்டுக்களாக இந்நூலின் முகப்பு அட்டைகளில் கம்பீரமாய் மிளிர்கின்றன.

முதல் இரண்டு தொகுதிகளின் முகப்பு அட்டை களில், இந்திய நாடாளுமன்ற பின்னணியில் தலைவர் வைகோ அவர்களின் எழுச்சித் தோற்றமும், மூன்றாம் தொகுப்பின் முகப்பு அட்டையில் இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் உரையாற்றும் காட்சியும், நான்காம் தொகுதியின் முகப்பு அட்டையில் அமெரிக்க நாட்டின் கருப்பின அதிபர் பராக் ஒபாமாவுடன் தலைவர் வைகோ உரையாடும் காட்சியும் இடம் பெற்றுள்ளன.

திருமதி இந்திரா காந்தி, அடல்பிகாரி வாஜ்பாய், யஷ்வந்த் சின்கா, ராஜீவ் காந்தி, டாக்டர் மன்மோகன் சிங், சோம்நாத் சாட்டர் ஜி ஆகிய தலைவர்களின் படங்களோடு, தலைவர் வைகோ அவர்களைப் பாராட்டி அவர்கள் கூறிய புகழுரைகள் நூலின் இறுதிப்பக்க அட்டைகளில் இடம்பெற்று நூலுக்கு அணிசேர்க்கின்றன!

தலைவர் வைகோ அவர்களின் ஈடு இணையற்ற பொதுவாழ்வின் அடித்தளம்; அவரின் இன்னல்களை - துயரங்களை தாங்கும் சுமைதாங்கி, ஈழ விடுதலைக்காக அன்னை மாரியம்மாள், சகோதரர் வை.ரவிச்சந்திரன் ஆகியோரின் வரிசையில், ஆரவாரமின்றி அழுத்தமான பங்களிப்பை செலுத்திய பெண் அரிமா என்ற பெருமைகளை அணிகலன்களாகக் கொண்ட தலைவர் வைகோ அவர்களின் வாழ்விணையர் அம்மா ரேணுகாதேவி அவர்களுக்கு இந்நூல் காணிக்கை ஆக்கப்பட்டு உள்ளதை நூலின் மூன்றாம் பக்கத்தில் உள்ளதைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறார்கள்!

நூலின் முதல் தொகுப்பில் 378 பக்கங்களில் நாடாளு மன்ற உரைகள், 16 பக்கங்களில் தலைவர் வைகோ அவர்களின் இலட்சியப்பயணத்தை விளக்கும் வண்ண ஒளிப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மற்ற தொகுப்புக்களிலும் இத்தகைய ஒளிப்படங்கள் எழிலோடு இடம்பெற்றுள்ளன.

துணை குடியரசுத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய், மேனாள் துணை குடியரசுத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, மேனாள் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண கார்கே, ஜம்மு-காஷ்மீர் தேசிய காங்கிரஸ் தலைவர் டாக்டர் பரூக் அப்துல்லா, இந்திய அரசின் ஒன்றிய மேனாள் அமைச்சர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எம்.பி., மேனாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்கா, மலேசியாவின் பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி, ரஷ்யவெளியுறவு அமைச்சர் அன்ரெய் வலாவ்ஸவ், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, திராவிடர் கழக தலைவர், பேராசிரியர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, திரிணாமூல் காங்கிரஸ் இணை செயலாளர் டெரிக் ஓ பரியன் எம்.பி., விஐடி பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கோ.விஸ்வநாதன், ராஷ்டிரிய ஜனதா தள நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மனோஜ்குமார் ஜா, கவிப்பேரரசு வைரமுத்து, இந்து என்.ராம், முன்னாள் காவல்துறை இயக்குனர் (DGP) ஏ.எக்ஸ்.அலெக்சாண்டர், மனித உரிமை போராளி ஹென்றி டிபேன், என 23 ஆளுமைகளின் அணிந்துரைகள் நூலின் 5 ஆம் பக்கத்தில் தொடங்கி 71 ஆம் பக்கம் வரை இடம்பெற்றுள்ளதை இந் நூலின் சிறப்பாகவும், சாதனையாகவும் நாம் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

அணிந்துரை வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கும், தன்னை நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்து அனுப்பி வைத்த டாக்டர் கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும், பாராளுமன்ற பணி சிறக்க வழிகாட்டிய முரசொலி மாறன், நூலாக்கத்திற்காக துணை நின்ற கழக பொருளாளர் மு.செந்திலதிபன், ராஜா வையாபுரி, ஜஸ்டின் பிராமி, ஆர்.ஞானதாஸ், ஜெயகுமார், கேசவன் நாராயணன், இந்திரஜித் வையாபுரி, முத்துக்குமரன், சரவணன், மகேந்திர வையாபுரி, க.விநாயகம், விக்டர் ஞான எபிநேசர், காவல்துறையின் முன்னாள் டி.ஜி.பி. ஏ.எக்ஸ் அலெக்சாண்டர், குமுதம் பதிப்பகத்தின் தலைவர் வரதராசன், துணை தலைவர் சங்கர் சுப்பிரமணியன் ஆகிய அனைவருக்கும், நூலாசிரியர் வைகோ அவர் களின் நன்றி தெரிவிக்கும் மூன்று பக்கங்கள் (72, 73, 74) அவரின் பண்பு நலனை விளக்குகின்றன.

நிதி ஒதுக்கீட்டுச் சட்ட முன் வடிவு (The Approproation எண் 3) 1978-குறித்த விவாதத்தின் போது, 02.05.1978 அன்று நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ நிகழ்த்திய உரைதான் அவரின் கன்னிப்பேச்சு (Maiden Speech) ஆகும். 81, 82, 83, 84, 85 ஆகிய பக்கங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உரை இடம்பெற்றுள்ளது. இதிலிருந்து இந்நூல் தொடங்குகிறது.

தலைவர் வைகோ அவர்கள் இந்தித் திணிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் 10 முறை நிகழ்த்திய உரைகள், சேதுக்கால்வாய்த் திட்டம் குறித்து இரண்டு முறை நிகழ்த்திய உரைகள், ஜம்மு-காஷ்மீர், நாகாலாந்து மாநில உரிமைகள் தொடர்பாக ஐந்து முறை நிகழ்த்திய உரைகள், போபர்ஸ் ஊழல் தொடர்பாக 11 முறை நிகழ்த்திய உரைகள், காவிரி நதிநீர் உரிமை தொடர்பாக 9 முறை நிகழ்த்திய உரைகள், நடராஜர் - ராமர் சிலைகள் கடத்தப்பட்டது குறித்து இரண்டு முறை நிகழ்த்திய உரைகள், அரசமைப்புச் சட்ட திருத்தம் குறித்து 9 முறை நிகழ்த்திய உரைகள், மண்டல் குழு பரிந்துரைகள் குறித்து 05.10.1991 அன்று நிகழ்த்திய உரைகள், மதக்கலவரங்கள் தொடர்பாக 4 முறை நிகழ்த்திய உரைகள், வளைகுடா போர் குறித்து 2 முறை நிகழ்த்திய உரைகள், ஆசிய விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஆகியவைகள் குறித்து 3 முறை நிகழ்த்திய உரைகள் ஆகியவைகள் முதல் தொகுப்பில் முழுமையாக இடம்பெற்றுள்ளன.

1978 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரையிலான 17 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் பிரச்சினைகள் குறித்து தலைவர் வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய அறிவார்ந்த உரைகளின் தொகுப்பாக முதல் தொகுதி அமைந்துள்ளது!

தலைவர் வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் 1978 ஆம் ஆண்டில் இரண்டு முறை ஆற்றிய உரைகள், 1980 ஆம் ஆண்டில் 11 முறை ஆற்றிய உரைகள், 1981 ஆம் ஆண்டில் 31 முறை ஆற்றிய உரைகள், 1982 ஆம் ஆண்டில் 20 முறை ஆற்றிய உரைகள், 1983 ஆம் ஆண்டில் 3 முறை ஆற்றிய உரைகள், 1984 ஆம் ஆண்டில் 5 முறை ஆற்றிய உரைகள், 1985 ஆம் ஆண்டில் 8 முறை ஆற்றிய உரைகள், 1987 ஆம் ஆண்டில் 25 முறை ஆற்றிய உரைகள், 1988 ஆம் ஆண்டில் 24 முறை ஆற்றிய உரைகள், 1992 ஆம் ஆண்டில் 3 முறை ஆற்றிய உரைகள், 1993 ஆம் ஆண்டில் 3 முறை ஆற்றிய உரைகள் 1994 ஆம் ஆண்டில் 4 முறை ஆற்றிய உரைகள் என மொத்தம் 152 உரைகள் இந்நூலின் இரண்டாம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

நூலின் இரண்டாம் தொகுதியில் 1981 ஆம் ஆண்டு தொடங்கி 1990 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், தலைவர் வைகோ அவர்கள் நாடாளு மன்றத்தில் ஆற்றிய 43 உரைகள் முழுவதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றியே அமைந்துள்ளது.

வன்னிக்காட்டில் தேசிய தலைவர் பிரபாகரனையும், விடுதலைப்புலிகளையும் உயிரைப் பணயம் வைத்து சந்தித்து, தாயகம் மீண்ட தலைவர் வைகோ அவர்களை, பவளம்கூர் பன்சால், ஏ.ஜி.குல்கர்னி, அனுமந்தப்பா, எம்.எம்.ஜேக்கப், ரவூப் வலியுல்லா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவையை நடத்திக் கொண்டிருந்த அவையின் துணைத் தலைவரும், பாச உணர்வோடு வரவேற்று, நாடாளு மன்றம் முழுவதுமே உங்களைப் பற்றி கவலைப் பட்டது என்று குறிப்பிட்டது, தாயகம் திரும்பிய தங்களை விழா எடுத்துக் கொண்டாடுகிறோம் என்று அவையின் துணைத் தலைவரே நெகிழ்ச்சியுடன் பேசியது, அனைவருக்கும் தலைவர் வைகோ நன்றி தெரிவித்தது முதலான வரலாற்று நிகழ்வுகளை இந்நூலின் இரண்டாம் தொகுதியின் 223, 224 பக்கங்கள் பெருமையுடன் பதிவு செய்துள்ளது.

மீனவர் பிரச்சினை குறித்து 7 முறையும், பஞ்சாப் கலவரம் தொடர்பாக 12 முறையும், வெளியுறவுத் துறை தொடர்பாக 4 முறையும், பொதுப் பிரச் சினைகள் 40 முறையும் தலைவர் வைகோ நாடாளு மன்றத்தில் நிகழ்த்திய உரைகள் இரண்டாம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

மணிப்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை உடைப்பு, தலித் கிறித்தவர்களின் இட ஒதுக்கீடு, தில்லி பேருந்தில் மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமை, பீகார் பூகம்பத்தில் ஏற்பட்ட அழிவு, ரஷ்ய பிரதமர் கோர்ப்பசேவ் வருகை, பெங்களூர் - திருவனந்தபுரம் இரயில் விபத்து, நூற்பாலை தொழில் நெருக்கடி, பாரத் பந்த் போராட்டக்காரர்கள் கைது, குழந்தை தொழிலாளர் கொள்கை, கல்லூரி பேராசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம், நிதிநிலை அறிக்கைகள், இரயில்வே நிதிநிலை அறிக்கை, வெள்ளம் மற்றும் வறட்சி நிவாரணப் பணிகள், கேந்திரிய வித்யாலாயாக்களில் இந்தி திணிப்பு, சென்னை கடற்கரையில் மீனவர்கள் மீது காவல் துறையின் துப்பாக்கிச் சூடு, சென்னை - தாதர் ரயிலில் நடைபெற்ற கொள்ளை, மதுரை - செங்கோட்டை பாசஞ்சர் ரயில் ரத்து, மீரட் கலவரம், சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டது, திருச்செந்தூர் கோயில் பால் கமிஷன் அறிக்கை, விளையாட்டு வீரர்களின் பயணச் சலுகைகள் ரத்து, சென்னையில் தி.மு.க.வினர் மீது காவல்துறை நடத்திய தாக்குதல், டாக்டர் கலைஞர் அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டது, வேலை இல்லா திண்டாட்டம், குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு எதிரான இடஒதுக்கீட்டுஎதிர்ப்பு பறிப்பு, வேளாண் விளைபொருள் விலை நிர்ணயம், கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவுப்பாறை, ஆசிய விளையாட்டு போட்டி, கரும்பு விவசாயிகள் போராட்டம் என அந்த காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து தலைவர் வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகள் மூன்றாம் தொகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நூலின் நான்காம் தொகுப்பில் 1998 ஆம் ஆண்டு முதல், 2002 ஆம் ஆண்டு வரை, நாடாளு மன்றத்தில் தலைவர் வைகோ நிகழ்த்திய 50 உரைகள் முதல் பகுதியில் இடம்பெற்றுள்ளன. நாடாளுமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாலயோகி அவர்களை பாராட்டி தலைவர் வைகோ ஆற்றிய வாழ்த்துரையில் இருந்து நூலின் நான்காம் தொகுதி தொடங்குகிறது.

வாஜ்பாய் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் நிகழ்த்திய உரை, பொக்ரான் அணுவெடி சோதனை குறித்த உரை, விவசாயிகளின் தற்கொலை மீதான உரை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் இட ஒதுக்கீடு பாதுகாப்பு, சேதுக்கால்வாய் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு கோரிக்கை, காவிரி தீர்ப்பாய இடைக்கால ஆணையை நிறைவேற்றக் கோருதல், பாகிஸ்தான் சிறையில் இருந்து கன்னியாகுமரி மீனவர்களை விடுவிக்க கோரிக்கை, இந்திய விமானங்களின் கடத்தல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டப் பேரவை நிறைவேற்றிய மாநில சுயாட்சி தீர்மானம், தீப்பெட்டித் தொழில் தொழிலாளர் நலன், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அஞ்சல் தலை வெளியிடுதல், அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல், நெய்வேலி நிலக்கரி நிறுவன முதலீட்டு விற்பனை தடுப்பு, பணியாளர் தேர்வில் தாய் மொழியில் தேர்வு எழுதுதல், குஜராத் மாநில சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு முதலான முக்கியமான பிரச்சினைகள் குறித்து தலைவர் வைகோ நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இந்த தொகுதியின் இரண்டாம் பகுதியில் 2019 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை, நாடாளு மன்ற மாநிலங்கள் அவையில் தலைவர் வைகோ நிகழ்த்திய 37 உரைகள் இடம்பெற்றுள்ளன.

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வருதல், இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமைகள் பாதுகாப்பு, தேனி மாவட்டத்தை அழிக்கும் நியூட்ரினோ திட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில உரிமைகள், கூடங்குளம் அணு உலை பிரச்சினை, எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவித்தல், பொதுவங்கி சட்டம், மேகதாது அணை பிரச்சினை, தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி வழங்குதல் முதலான பிரச்சினைகளில் தலைவர் வைகோ நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ அவர்களுக்காக நடைபெற்ற பிரிவு உபச்சாரக் கூட்டத்தில் தலைவர் வைகோ நிகழ்த்திய நன்றி உரை, திருச்சி சிவா, தம்பிதுரை, கே.ஆர்.சுரேஷ் ரெட்டி, டாக்டர் ஜான் பிரிட்டாஸ், டாக்டர் சிவblockதாசன், அப்துல்வகாப், சந்தோஷ்குமார் ஆகிய உறுப்பினர்கள், தலைவர் வைகோ அவர்களைப் பாராட்டி வழங்கிய வாழ்த்துரைகள் ஆகியன இந்நூலின் 382, 383, 384, 385, 386, 387, 388 ஆகிய பக்கங்களில் கம்பீரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

மே நாள் விழாவுக்கு அரசு விடுமுறை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் காப்பு, சிம்பொனி இசை அமைத்த இளையராஜாவுக்கு பாராட்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு, தாதா சாகேப் பால்கே விருது வழங்க கோரிக்கை, காயிதே மில்லத் அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட கோரிக்கை முதலான தலைவர் வைகோ அவர்களின் சரித்திர சாதனைகள், இந்நூலின் நிறைவு பகுதியில் பக்கம் 389 முதல் 404 பகுதியில் இடம்பெற்றுள்ளன.

தலைவர் வைகோ அவர்களின் 30 ஆண்டுகால நாடாளுமன்ற பணிகளின் சாதனைகளின் தொகுப்பு மலராக, வரலாற்று ஆவணமாக இந்நூல் மின்னி மிளிர்வதை வாசகர்கள் உணர்வார்கள்!

'நாடாளுமன்றத்தில் நமது குரல்' என்ற தலைப்பில் தி.மு.கழக தேர்தல் பணி செயலாளரான தலைவர் வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் நூல் குறித்து அப்போது விடுதலை இதழில் 'எடை மேடை' பகுதியில் எழுதிய எனக்கு 'நாடாளுமன்றத்தில் வைகோ' நூல் குறித்தும் இப்போது சங்கொலியில் எழுதும் அரிய வாய்ப்பினை நான் பெற்றது என் வாழ்நாளில் நான் பெற்ற பெறற்கரிய பேறு என எண்ணி மகிழ்ச்சியில் திளைக்கிறேன்!

ஆ. வந்தியத்தேவன்
ஆ. வந்தியத்தேவன்கொள்கை விளக்கச் செயலாளர்

கொள்கை விளக்கச் செயலாளர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

நாடாளுமன்றத்தில் வைகோ’: 30 ஆண்டுகால வீர வரலாற்றைப் பதிவு செய்யும் 4 தொகுதிகள் - நூல் அறிமுகம் | சங்கொலி