வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

தொகுதி மறுவரையறை திருத்த மசோதா குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

தொகுதி மறுவரையறை திருத்த மசோதா குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) பணிகள் மற்றும் அதற்கான சட்டத் திருத்த மசோதாக்கள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்ய உள்ள, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம், 08.08.2026 அன்று மதியம் 3 மணியளவில், கலைவாணர் அரங்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தோழமை கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கலந்து கொண்டேன்.

மிகக்குறிப்பாக, தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவில் உள்ள பாதகங்களை அலசி ஆராய்ந்தோம். அதை நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் விவாதித்தோம்.

எல்லா மாநிலங்களுக்கும் 50 விழுக்காடு கூடுதல் தொகுதிகள் வழங்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்தாலும், குறிப்பாக அதனால் தமிழ்நாட்டிற்கும், சிறுபான்மை மக்களுக்கும் ஏற்படவுள்ள பாதகங்களை மிக விரிவாக எடுத்துரைத்து, அதை நாம் எதிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன்.

அத்துடன், சிறுபான்மை மக்கள் முதல்வர் மீது வைத்துள்ள நம்பிக்கையை சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள, வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்களை முடக்கும் FCRA திருத்தச் சட்டத்தையும் நாம் எதிர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினேன்.

தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசும், தோழமை கட்சிகளும் வலுவாய் எதிர்ப்போம் என்று ஒருமித்த குரலோடு, இரண்டு மணிநேரம் தொடர்ந்த இந்த ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நிறைவுபெற்றது.

தமிழ்நாடு மாநில உரிமைக்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிரான இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை தனது தலைமையிலான தமிழ்நாடு அரசு முழுமையாக எதிர்க்கும் என்றும், அதற்கான தீர்மானத்தை எதிர்வரும் நாட்களின் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவோம் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

தொகுதி மறுவரையறை திருத்த மசோதா குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்! | சங்கொலி