வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

திருச்சி மாநகர் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன்னுரிமை அளித்து செயல்படுவேன் - துரை வைகோ எம்.பி.,

திருச்சி மாநகர் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன்னுரிமை அளித்து செயல்படுவேன் - துரை வைகோ எம்.பி.,

திருச்சி மாநகர மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளித்து தீவிரமாகச் செயல்படுவேன் என்று எம்.பி. துரை வைகோ உறுதியளித்துள்ளார்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாநகர் மாவட்டத்தில் (2026-2027) ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (MPLADS) திட்டப் பணிகளுக்கான கோரிக்கைகள் தொடர்பாக 30.06.2026 அன்று மாலை பல்வேறு இடங்களில் களஆய்வு மேற்கொண்டேன்.

முதலில், பாப்பாக்குறிச்சி காட்டுர் பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, தற்போது பயன்பாட்டில் இல்லாமல் இருந்தாலும் நல்ல நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர இயலுமா என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.

அப்போது, அங்கிருந்து தனியார் நிலங்களை பெற்று அருகில் உள்ள மற்றொரு குடியிருப்பு பகுதிக்கு செல்வதற்கு சாலை அமைத்து தர கோரிக்கை வைத்தனர். இதனை உரிய முறையில் தனியார் மற்றும் அதிகாரிகளிடம் பேசி நிலங்களை பெற்று தரும் பட்சத்தில் உரிய திட்டத்தில் நிதி பெறப்பட்டு சாலை அமைத்து தர முயற்சிப்பேன்.

மேலும், அப்பகுதிக்கு நெடுஞ்சாலையிலிருந்து புதிய சாலை இணைப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர் சக்திவேல் அவர்கள் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக, எம்.பி., அலுவலகத்தினர் அப்பகுதி மக்களுடன் இணைந்து நேரில் களஆய்வு மேற்கொண்டு, அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினேன்.

அதனைத் தொடர்ந்து, எல்லக்குடி பிள்ளையார் கோவில் தெரு (வார்டு எண் 39) பகுதியில் புதிய நியாய விலைக் கடை கட்டிடம் அமைப்பது தொடர்பான கோரிக்கையை நேரில் ஆய்வு செய்தேன்.

பின்னர், பொன்மலைப்பட்டியில் உள்ள Sacred Heart மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வி வசதிகளை மேம்படுத்தும் வகையில் மேஜை, நாற்காலிகள் வழங்குவதற்கான தேவைகள் குறித்து பள்ளி நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினேன்.

அதன்பின், மொரைஸ் சிட்டி முகாம்பிகை நகரில் (வார்டு எண் 44) பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மின்மோட்டாருடன் கூடிய சின்டெக்ஸ் நீர்த் தொட்டி அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டேன். அப்போது அருகில் உள்ள குடிநீர் குழாய் திட்டத்தில் இணைப்பு பெறுவதில் உள்ள குறைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காண உறுதியளித்துள்ளேன்.

தொடர்ந்து, கொட்டப்பட்டு கருப்பு கோவில் பகுதியில் (வார்டு எண் 61) பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக கழிப்பறை வசதி ஏற்படுத்து வதற்கான இடத்தை பார்வையிட்டு, அதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினேன். அப்போது, அவர்கள் பலநூறு வருட பாரம்பரியமாக தாங்கள் வருடத்தில் ஒரு முறை திருவிழாவில் நீர் கொண்டு செல்ல விமான நிலைய பகுதியில் சிறப்பு அனுமதிபெற்று தர கோரிக்கை விடுத்தனர். அதற்கு முயற்சி மேற்கொள்வதாக கூறியுள்ளேன்.

அதனைத் தொடர்ந்து, பாரதி தெரு (வார்டு எண் 61), குளம்பட்டு (வார்டு எண் 65), கே. சாத்தனூர் (வார்டு எண் 63), செந்தண்ணீர்புரம் (வார்டு எண் 35) மற்றும் பெரிய கம்மாளத்தெரு (வார்டு எண் 20) ஆகிய பகுதிகளில் புதிய நியாய விலைக் கடை கட்டிடங்கள் அமைப்பது தொடர்பான கோரிக்கைகளை நேரில் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களின் தேவைகளை கேட்டறிந்தேன்.

திருச்சி மாநகர் பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் தேவையான வளர்ச்சித் திட்டங்களை விரைவாக செயல்படுத்த தொடர்ந்து களத்தில் செயல்படுவேன் என்று துரை வைகோ எம்.பி., கூறியுள்ளார்.

திருச்சி மாநகர் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முன்னுரிமை அளித்து செயல்படுவேன் - துரை வைகோ எம்.பி., | சங்கொலி