-
-
- திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் அந்த இயக்கத்தைச் சேர்ந்த இதழ்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. 1916 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டு பின்னர் நீதிக்கட்சி என்று அறியப்பட்டது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட போதே அதன் முப்பெரும் தலைவர்களான சர் பிட்டி தியாகராயர், டாக்டர் சி. நடேசனார், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோரால் திராவிடன் என்னும் தமிழ் நாளிதழ், ஆந்திர பிரகாசினி என்னும் தெலுங்கு நாளிதழ், ஜஸ்டிஸ் என்னும் ஆங்கில நாளிதழ் ஆகியவை நடத்தப்பட்டன. ஜஸ்டிஸ் என்ற நாளிதழின் பெயரால் தென்னிந்திய நல உரிமை சங்கம் 'ஜஸ்டிஸ் பார்ட்டி' (நீதிக்கட்சி) என்றே அழைக்கப்பட்டது. நாளிதழின் பெயரால் கட்சியை அடையாளப்படுத்தப்பட்டது வரலாற்றில் நீதிக்கட்சியை மட்டுமே என்று திராவிட இயக்கம் பெருமை கொள்ளலாம். திராவிட இயக்கத்தின் வரலாற்றை ஐந்து காலகட்டங்களாக பிரிக்கலாம்:முதல் கட்டம்: 1916 முதல் 1925 வரை - நீதிக்கட்சி காலம் இரண்டாம் கட்டம்: 1925 முதல் 1937 வரை - சுயமரியாதை இயக்கம் மூன்றாம் கட்டம்: 1937 முதல் 1949 வரை - திராவிடர் கழகம் நான்காம் கட்டம்: 1949 முதல் 1967 வரை - திராவிட முன்னேற்றக் கழகம் ஐந்தாம் கட்டம்: 1967 முதல் தற்போது 2026 வரையில் - அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திராவிடன் ஏடுநீதிக்கட்சிக் காலத்தில் தோன்றிய திராவிட இதழ்களில் தலையாய இடத்தை பெறுவது "திராவிடன்" நாளிதழே. 1916 முதல் 1931 வரை 15 ஆண்டுகள் திராவிடன் இதழ் தொடர்ந்து வெளிவந்தது. "திராவிடன்" எனும் பெயர் சூட்டப்பட்டதற்கான காரணத்தை பண்டித எஸ்.எஸ். அருணகிரிநாதர் பின்வருமாறு கூறியுள்ளார்: பிராமணர் அல்லாதவர் ஆகிய எல்லா சாதி வகுப்பாரையும் ஒரே குறியீட்டுப் பெயரால் அழைத்து வரும்படியான வழக்கம் ஏற்பட வேண்டும், அவர்களிடையே இன உணர்ச்சியை எழுப்பி விட வேண்டும் என்ற விருப்பத்தினாலேயே "திராவிடன்" என்ற பெயர் முடிவு செய்யப்பட்டது. திராவிடன் முதல் இதழ் 1.06.1917 வெள்ளிக்கிழமை முதல் வெளிவந்தது. இதன் ஆசிரியராக தி. பக்தவச்சலம் பிள்ளை பி.ஏ. அவர்களும் துணை ஆசிரியர்களாக சுவாமி ருத்ர கோடீஸ்வரரும் பண்டித வில்வபதி செட்டியாரும் பணியாற்றினர். பதிப்பாளர்: ராவ் பகதூர் பி.தியாகராய செட்டி, பி.ஏ. அச்சிடப்பட்ட இடம்: சென்னை மவுண்ட் ரோடு, 16-ஏ, "ஜஸ்டிஸ் பிரிண்டிங் ஒர்க்ஸ்". திராவிடன் இதழில் அன்றே (1917) "தமிழ்நாடு" என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்தது. சமூகத் துறையில் சாதி பேதங்களை, மூடநம்பிக்கைகளை எதிர்த்தும், பஞ்சமர் முன்னேற்றத்திற்காகவும் குரல் கொடுத்தது. இந்தி எதிர்ப்பிலும் தெளிவான நிலையை எடுத்திருந்தது. 1917 ஆகஸ்ட் 24 இதழில் "ஆங்கிலமே பொது பாஷையாகக் கவர்மெண்டார் செய்வதோடு நாமும் ஒற்றுமையெய்திச் சிற்றூர்கள் தோறும் தாய்மொழியும் ஆங்கிலமும் கற்பிக்கும் பாடசாலைகளில் ஏற்படுத்த வேண்டும்" என்று விருதைச் சிவஞான யோகி எழுதியிருந்தார். திராவிடனில் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ஆன சிந்தனைச் சிற்பி சிங்காரவேலனார் எழுதிய "தொழிற்சாலைகளும் தொழிலாளரும்", "நவீன ருஷ்யா", "ருஷ்யத் தொழிலாளர் நிலைமை" போன்ற கட்டுரைகளும் வெளிவந்தன.
-

அண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்
திருவனந்தபுரம் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மையத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான அப்துல்கலாம் தேசிய விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலில் 29.07.2026 அன்று நடைபெற்றது.
மேலும் படிக்க »






