வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

திக்கெட்டும் எதிரொலிக்கட்டும் சங்கொலி முழக்கம்! - சங்கொலி 30 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வைகோ உரை

திக்கெட்டும் எதிரொலிக்கட்டும் சங்கொலி முழக்கம்! - சங்கொலி 30 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வைகோ உரை

சங்கொலி 30-ஆம் ஆண்டு நிறைவு விழா - வைகோ உரை: சென்னை எழும்பூரில் நடைபெற்ற 'சங்கொலி' இதழின் 30-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார்.

கழக வார ஏடு ‘சங்கொலி’யின் 30 ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் 17.07.2026 அன்று நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளரும், சங்கொலி ஆசிரியருமான வைகோ அவர்கள் உரையாற்றும்போது, “திக்கெட்டும் எதிரொலிக்கட்டும் சங்கொலி முழக்கம்!” என்று குறிப்பிட்டார். அவரது உரை வருமாறு:

என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றாக 1996 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 24 ஆம் நாள் அன்று தமிழ் இசைதான் உலகில் தொன்மை இசை என்று நிலைநாட்டுவதற்காக செட்டிநாட்டு அரசர் அண்ணாமலை அரசர் தமிழிசை சங்கத்தை உருவாக்கி, அதன் விளைச்சலாக அண்ணாமலை மன்றத்தை தலைநகர் சென்னையில் நிர்மாணித்த பின்பு, அந்த அரங்கத்தில் தொடங்கப்பட்டது சங்கொலி இதழ்!

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக உதை பந்து போட்டிகள் நடக்கும்; அந்த உலக உதைபந்து போட்டி நிறைவு நிகழ்ச்சியைக் காணும் வழக்கத்தை விடமுடியாதவராக அமெரிக்காவுக்கு தற்போது சென்றுவிட்ட இந்து பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் ராம் அவர்கள் வந்திருந்து வாழ்த்த, புரட்சித் தமிழர் சத்தியராஜ் அவர்கள் வாழ்த்த, நினைவில் வாழும் மணிவண்ணன் வாழ்த்த சங்கொலி ஏடு அப்போது தொடங்கப்பட்டது.

ஐந்து நிமிடத்திற்கு மேல் பேச இயலாதவனாக நான் இங்கே வந்து நிற்கிறேன். நான் எழுப்புகின்ற குரல் 40 ஆண்டுகளுக்கு முந்தைய குரலாக எங்கள் செவிப்பறைகளில் இப்போது மோதுகிறது என்று கடந்த இரண்டாண்டு காலமாக கழகக் கண்மணிகள் என்னிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து வந்தார்கள்.

அந்தக் குரல் வெட்டுப் பாறைகளில் வெண்கல மணி உருண்டு ஓடுகிறபோது எழுகின்ற ஓசை போல, பொங்கிப் பாய்கின்ற அருவியின் சலசலப்பு ஓசையைப் போல, மின்னல்கள் பாய மேகங்கள் உரச, இடிகள் எழுப்புகின்ற ஓசையாக எங்கள் பொதுச் செயலாளரே உங்கள் குரல் 40 ஆண்டுகளுக்குப் பின்னரும் மங்காமல் ஒலிப்பது ஒன்றே போதும் எங்களுக்கு என்று கடந்த இரண்டாண்டு காலமாக என் தோழர்கள் சொல்லி வருகிறார்கள்.

நான் மிகக் கவனமாக இருப்பவன். இந்தக் குரல் இயற்கை எனக்குக் கொடுத்தது - இயற்கைத் தாய் எனக்குக் கொடுத்தது. என் மூச்சு அடங்குகின்ற வரையிலும் இந்தக் குரல் ஒலிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறவன்.

1978 ஆம் ஆண்டில் தெற்கே எங்கள் மறவர்சீமையில் விவசாயிகள் போராட்டம் நடந்தபோது, பனவடலி சத்திரம் என்கின்ற அந்த ஊரில் விவசாயிகளை ஒடுக்குவதற்காக வந்த காவல்துறை கண்ணீர் புகை பயன்படுத்திவிட்டு, கூட்டம் கலையாத நேரத்தில் ஒரு அதிகாரி துப்பாக்கி சூடு நடத்தினார். துப்பாக்கி ரவைகள் பாய்ந்து வருகிறபோது, அந்த மறவர் சீமையின் வாலிபர்கள் காவல்துறை அதிகாரியை எதிர்த்துப் போராடினார்கள். காவல்துறை அதிகாரி சுட்டுக் கொண்டே இருந்தார். இவர்கள் முன்னேறிக் கொண்டே இருந்தார்கள். அவர் துப்பாக்கியால் சுட்டார்; இவர்கள் கற்களால் தாக்கினார்கள். அந்தக் காவல்துறை அதிகாரி அந்த இடத்திலேயே விழுந்து மாண்டு போனார்.

ஆயிரமாயிரம் அதிரடிப்படை காவல்துறையினர் அங்கே கொண்டு வந்து குவிக்கப்பட்டார்கள். ஊர் ஊராகப் புகுந்து காவல்துறையினர் தாக்கத் தொடங்கினார்கள். வாலிபப் பருவ ஆண்கள் ஊர்களை விட்டு ஓடி காடுகளுக்குப் போய்விட்டார்கள். பெண்கள் பதறியவர்களாக நின்றார்கள்.

அந்த வட்டார கிராமங்களில் அந்தக் காலத்தில் நான் செல்லப் பிள்ளையாக இருந்தவன். நான் மிசா சிறையை விட்டு வெளியே வந்தபோது, அந்த வாலிபர்கள் என்னை தோளில் தூக்கிச் சுமந்து கொண்டு வீதிகளுக்குள் போனார்கள். நான் ஒவ்வொரு ஊராகச் சென்றேன். அந்தத் தாய்மார்களுக்கு தைரியம் கூறினேன். பயப்படாதீர்கள்; காவல் துறை அத்துமீறி உள்ளே வர ஒருக்காலும் நான் அனுமதிக்க மாட்டேன். என் பிணத்தின் மீதுதான் அவர்கள் உங்களை நெருங்க முடியும் என்று ஆறுதல் கூறினேன்.

காடுகளில் இருக்கின்ற இளைஞர்களை பார்ப்பதற்காக தென்னந்தோப்புகள் வழியாகச் சென்றபோது, இளநீர் சாப்பிடுங்கள் என்று என்னிடம் ஒரு இளநீரைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒருவிதமான இளநீர் சுவை இருக்கிறது. பொள்ளாச்சி மண்ணில் இருக்கக்கூடிய இளநீரும், தஞ்சையில் இருக்கின்ற மண்ணின் இளநீரும் ஒரே மாதிரி சுவையாக இருக்காது. அவர்கள் கொடுத்த இளநீரைக்குடித்துவிட்டு, தஞ்சை டேவிட் தேர்தலின் அண்ணன் அன்பில் நிற்கிறார், பிரசாரத்திற்கு போக வேண்டும் என்று நான் சென்றேன்.

அப்போது என்னால் பேச இயலவில்லை. குரலே வரவில்லை. நான் டாக்டர்களைச் சென்று பார்த்தேன். அவர்கள் மருந்துகள் கொடுத்தார்கள். டானிக் எல்லாம் கொடுத்தார்கள். நாற்பத்தி ஐந்து நாட்கள் எனக்குக் குரலே வரவில்லை. நிரந்தரமாக இப்படி ஆகிவிடுமோ? என்று நான் பயந்தேன். பின்னர் சென்னையில் ஒரு மருத்துவர் கொடுத்த மருந்தால் எனக்கு விடுதலை கிடைத்தது. இது 1978! அதன் பிறகு என் தொண்டை கம்மியதே கிடையாது.

2003 ஆம் ஆண்டு வேலூர் சிறையில் டெல்லி குளிர் பனியைப் போல கடுமையான குளிர் பனி. வெயில் என்றாலும் பாறைகளிலிருந்து சீறி வருகின்ற வெப்பக் கதிர்கள் வாட்டி வதைக்கும். எனவே இந்தக் குளிரும், பனியும் என்னைத் தாக்கும். நான் இருந்த சிறை அறையில் ஒன்பது கம்பிகள் கொண்ட கதவு இருக்கும். ஜன்னல்களைத் கொண்டுவரச் சொல்லி அதை நான் மூடி விட்டேன். சாம்பலத்தையும் நான் மூடி வைத்துவிட்டு உள்ளே கொசுவத்தி கொளுத்தி வைத்தேன். அதிலிருந்து புகை வந்துகொண்டே இருந்தது. முன் யோசனையோடு அதை நான் தவிர்த்திருக்கலாம். அந்த சுருளில் வந்த புகை உடலுக்குள் சென்று சென்று நுரையீரலைத் தாக்கி அதனால் தாங்க முடியாத இருமல். காலை முதல் இரவு வரை இருமிக்கொண்டே இருந்தேன்.

டாக்டர் மாசிலாமணி இரண்டு முறை இரண்டு விதமான மருந்துகளைக் கொண்டு வந்து கொடுத்தார். ஒன்றும் கேட்கவில்லை. டாக்டர் கலாநிதி வந்தார். அவரும் என்னை நன்றாக சோதித்துவிட்டு, ஒரு வேளை காச நோயாக இருக்கலாம், நீங்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து ஒரு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்று கூறினார்.

“நான் வரமாட்டேன். இந்தச் சிறையைவிட்டு அரசு மருத்துவமனைக்கு நான் வரமாட்டேன். ஏன்? என் கழகக் கண்மணிகள்தான் என் உயிரினும் மேலானவர்கள். ஒரு வேளை காச நோய் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டால் உன்னுடைய நுரையீரல் பாதித்திருக்கிறது, சயரோகம் உனக்கு வந்து விட்டது என்றால் என்னைக் கேட்காமலேயே என் கட்சி தோழர்கள் உயர்நீதிமன்றத்தில் பிணை மனு போடுவார்கள். மருத்துவரின் பரிசோதனை எனக்குத் தெரியாமல் கொண்டு சென்று பதிவு செய்வார்கள். ஒரு வேளை நீதிபதி எனக்கு பிணை விடுதலை கொடுக்கலாம். இந்தப் பிணை விடுதலையை வாங்குவதற்காக வைகோ ஒரு நாடகம் ஆடிவிட்டான். மருத்துவமனைக்குச் சென்று பொய்யாக ஒரு சான்றிதழ் வாங்கிவிட்டான் என்று என் மீது மிகுந்த பற்று கொண்டிருக்கின்ற ஒன்றிரண்டு பத்திரிகைகள் எழுதும். என் கண்மணிகள் கண் கலங்குவார்கள். என் நமது தலைவரை இவ்வளவு இழிவுபடுத்துகிறார்கள் என்று அவன் வருந்துவான். தேனி கடலைக்கு முன்பு இரண்டு பேர் தவறாக பேசினால் அவர்கள் நொந்து போவார்கள். ஆகவே நான் ஒருக்காலும் மருத்துவமனைக்கு வரமாட்டேன். ஒருக்காலும் எக்ஸ்ரே எடுக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

சிகாகோவிலிருந்து 18 மணி நேரம் பயணித்து வந்து, சென்னை விமான நிலையத்தில் நான் கைது செய்யப்பட்டபோது, ஐநூறு காவல்துறையினர் 30, 40 காவல்துறை வாகனங்களில் வந்து ஒசூர் பின்லேடனைைக் கொண்டு போகிறார்களா? அல்லது இந்த எளியவனைக் கொண்டு போகிறார்களா? என்கிற வண்ணம் நள்ளிரவு இரண்டு மணிக்கு மதுரையில் நீதிபதியின் இல்லத்தில் என்னைக் கொண்டு போய் நிறுத்தினார்கள் காவல் துறையினர்.

15 நாட்கள் நீதிமன்றக் காவல் என்று நீதிபதி அறிவித்தார். அங்கே இருந்து வேலூர் சிறைக்குச் செல்கிறபோது, பகல் ஒரு மணி ஆகி விட்டது. என்னைக் கைது செய்ததைக் கண்டித்து மறியல் செய்து, கைது செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான தோழர்கள் அந்தச் சிறையில் அடைபட்டுக் கிடந்தார்கள். நான் போகிற வழியில் என் அருமைச் சகோதரர் அடைக்கலம் பத்திரிகைகளைக் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார். அதைப் பார்த்தால், அனைத்துப் பத்திரிகைகளிலும் எட்டுக் காலச் செய்தி வெளியிட்டிருந்தார்கள். என்னைப் பற்றி செய்தியேவரவில்லைஎன்று வருத்தப்படுகிறீர்களே, அந்தக் காலத்தில் தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து இந்த வைகோவுக்குத்தான் எட்டுக்காலச் செய்தி.

ஒரு நாளேடு எங்களுக்கு மிகவும் ஆதரவு கொடுத்தது. சேலத்தில் போட்டிப் பொதுக்கூட்டம் நடந்த போது, அது புஸ்வானம் ஆகிவிட்டது என்று போட்டது. இப்போது என்ன காரணத்தினாலோ என் மீது அளவு கடந்த வெறுப்பும், கசப்பும் கொண்டிருக்கிறது.

அதன் பிறகு ஒரு வருடம் கழித்து, என்னைப் பற்றி நக்கல், நையாண்டி, ஏளனம் இல்லாமல் அந்தப் பத்திரிக்கை வராது. ஒரு கருத்துப் படம் போட்டாலும் என்னை இழிவுபடுத்தித்தான் போடுவார்கள். ஆனால், அந்தப் பத்திரிக்கை அலுவலகம் மதுரையில் தாக்கப்பட்டபோது, பூமிநாதனிடம் கூறி ஆயிரம் பேரைத் திரட்டிச் சென்று நான் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினேன்.

அந்தப் பத்திரிக்கை என்னைப் பற்றிமுதல் பக்கத்தில் எட்டுக் காலத்தில், “வை.கோபால்சாமிக்கு பிடித்தமான நடிகர் யார்? நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! பிடித்தமான விளையாட்டு எது? கைப்பந்தாட்டம் (வாலிபால்)! பிடித்தமான உணவு எது? புலால் (அசைவ) உணவு!” என்று எழுதியிருந்தார்கள்.

இதைப் படித்துவிட்டு நான் யோசித்தேன், இந்தச் சிறையில் ஏ-வகுப்பு சிறைவாசி என்றால், வாரத்தில் மூன்று நாட்கள் ஆட்டுக் கறியோ அல்லது முட்டையோ கொடுப்பார்கள். நான் ஆட்டுக் கறியும், முட்டையும் சாப்பிட்டுவிட்டு, சிறையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று அந்தப் பத்திரிக்கை எழுதுது.

இதைப் படித்துவிட்டு நம் தொண்டர்கள் துடித்துப் போவார்கள். ஆகவே சிறை வாசலுக்குள் நுழையும் போது, எத்தனை வருடம் இருந்தாலும் ஒரு முட்டை கூட சாப்பிடக்கூடாது என்று நான் ஒரு முடிவு எடுத்துக் கொண்டேன். 19 மாதமும் அப்படித்தான் இருந்தேன். ஏன் இப்படி இருக்கிறீர்கள்? என்று என் சகாக்கள் சண்டைக்கு வந்தார்கள். புலால் இல்லாமல் வாழ முடியாதா? எத்தனை வருடமானாலும் இப்படியே இருப்போம் என்று தொண்டர்களுக்காக நான் எடுத்த முடிவு. மருத்துவமனைக்குச் செல்வதல்லை என்று என் சகோதரர்களுக்காக நான் முடிவு எடுத்தேன்.

பாளை - வண்ணாரப்பேட்டையிலிருந்து டாக்டர் வரதராஜன் புதிதாக ஒரு மாத்திரைப் பட்டியைக் கொண்டு வந்து கொடுத்து, ஒருவேளை இந்த மாத்திரை உங்கள் பிரச்சினையைத் தீர்க்கும் என்றார். என்ன ஆச்சரியம்! ஐந்தாம் நாள் என் இருமல் நின்றுவிட்டது. தொண்டை சரியாகிவிட்டது.

இப்போது இருக்கின்ற தொண்டை பிரச்சினை நானாக வரவழைத்துக் கொண்டது. தமிழ்நாட்டின் சுற்றுச் சூழலை நாசமாக்கியது மட்டும் அல்ல, வேலைக் கருவேல மரங்கள் விவசாயத்தையே அழித்து விட்டது. கேரளாவில் இதன் ஒரு செடியைக் கூட பார்க்க முடியாது. அதை முளைக்கும் போதே பிடுங்கி எறிந்துவிடுவார்கள். இது தமிழ்நாடு முழுவதும் அடர்ந்து விட்டது. அதை முழுவதும் அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து, நானே வாதாடினேன்.

நீதியரசர் செல்வம் அவர்கள் ஒரு கிராமத்திலிருந்து வந்தவர். எங்கள் கிராமமே வேலிக் கருவேல மரங்களால் அழிந்துவிட்டது என்று நீதிமன்றத்திலேயே கூறினார். அவர் என்னைப் பார்த்து, நீங்கள் உங்கள் கட்சித் தொண்டர்கள், விவசாயிகளோடு இதை அகற்றுகின்ற வேலையில் ஈடுபட்டு, மற்றவர்களுக்கு ஊக்கம் அளித்து முன்மாதிரியாக இருந்தால், அரசாங்கமும் இதைச் செய்தால் இந்த மரங்களை அகற்றி விடலாமே! என்றார்.

அடுத்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி அவர்களே, நீங்கள் கூறியவாறு நான் கடந்த ஏழெட்டு நாட்களாக இந்த வேலிக் கருவேல மரத்தை அகற்றுகிற வேலையில் காலை முதல் மாலை வரை நானே ஈடுபட்டேன் என்றேன்.

பின்பு வேலிக் கருவேல மரங்களை அகற்றக் கூடாது என்று தடை ஆணை வந்தது. பின்னர் நீதிபதி பாத சக்ரவர்த்தி அவர்களும், நீதிபதி சதீஷ்குமார் அவர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் தொடுத்த வழக்கில் அரசாங்கம் இந்த வேலிக் கருவேல மரங்களை அகற்றும் பணியில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்று கூறிவிட்டு, அந்தத் தீர்ப்பில் என்னை மிகவும் பாராட்டினார்கள்.

உடனே நான், எங்கள் மாவட்டச் செயலாளர்களை எல்லாம் அழைத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து, மரம் வெட்டும் இயந்திரங்கள் மற்றும் பொக்லைனை வைத்து வேலிக் கருவேல மரங்களை அகற்றி விடுவோம் என்று கூறினேன்.

தொடர்ந்து எட்டு நாட்கள், எட்டு மாவட்டங்களில் இந்த வேலையில் நான் ஈடுபட்டேன். ஒரு நிமிடம் கேமராவுக்கு போஸ் கொடுத்துவிட்டு நான் போயிருக்கலாம். அதைப் பெரிய கூட்டம் கட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் என்று போடுவார்கள். கட்சிக்காரர்கள் வருத்தப்படுவார்கள் என்று நானே அந்த மரங்களைறுத்தெறிந்தேன். என்னோடு ஜீவன், பாஸ்கரசேதுபதி, பூமிநாதன் ஆகியோர் இருந்தார்கள். அப்படி அறுக்கின்ற நேரத்தில் வருகின்ற கரியமல வாயு தாக்கி என் நுரையீரலில் பாதிக்கப்பட்டுவிட்டது.

கடந்த பத்து நாட்களாக பேசவே முடியவில்லை. இந்தத் தொண்டு செய்ததால் எங்களுக்கு ஒரு ஓட்டு கிடைக்குமா? கிடைக்காது. ஒரு ஓட்டுகூட கிடைக்காது. வேலிக் கருவேலையை அகற்றி நாட்டுக்காகப் பாடுபடுகின்ற கட்சி என்று எங்கள் மீது அன்பு காட்டி வாக்களிப்பார்களா? ஒருக்காலும் வாக்களிக்க மாட்டார்கள். பிரதிபலன் எதிர்பார்த்துச் செய்வது பொதுத் தொண்டு அல்ல. நம்முடைய கடமையைச் செய்வோம். நாம்தானே வழக்குத் தொடுத்தோம். நாம் நம்மால் இயன்ற அளவுக்கு நம் மாவட்டச் செயலாளர்களை வைத்து இந்த வேலையை செய்வோம் என்று ஈடுபட்டதால், கடந்த பத்து நாட்களாக என்னால் பேசவே முடியவில்லை.

மறைமலை அடிகள் விழாவில் நான் பேசுவதற்கு அவ்வளவு செய்திகள் இருந்தன. ஒரு மணி நேரம் பேசியிருக்கலாம். பத்து நிமிடத்திற்கு மேல் என் தொண்டையிலிருந்து குரலே வரவில்லை. இன்றைக்கும் அதே நிலையில்தான் இங்கே வந்து நிற்கிறேன். இது எதற்கு கிடைத்த பரிசு? நாட்டுக்காக, இந்த செந்தமிழ் மண்ணுக்காக, இந்த நாட்டு மக்களை வாழ வைப்பதற்காக எல்லா விதத்திலும் நான் போராடியிருக்கிறேன். எவரும் செய்யாத அளவுக்கு உலகக் கோடீஸ்வரனின் ஸ்டேர் லைட் நாசகார நச்சாலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வாதாடி, வழக்கறிஞர் தேவதாஸுடன் இருக்க அந்த ஆலையை மூட வைத்தவன் இந்த வைகோ.

அந்த உலகக் கோடீஸ்வரன் என்னைச் சந்திக்க தயாராய் தயாய் இருந்தான். ஒரு நிமிடம்கூட அவனை நான் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். நானும் என் தோழர்களும் நேர்மையான அரசியல் நடத்துகிறோம். கடைசி வரை நேர்மையாகத்தான் இருப்போம்.

இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மாபெரும் கட்சிகள். கோடிக்கணக்கான மக்களின் ஆதரவு பெற்ற கட்சிகள். அவர்களை யாராலும் அசைக்க முடியாது என்று எண்ணினோம். அதை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தகர்த்துத் தரைமட்டமாக்கி தூள் தூளாக்கிவிட்டு முதலமைச்சராக என் சகோதரன் ஜோசப் விஜய் அமர்ந்திருக்கிறார்.

கடந்த 15, 20 நாட்களாக முதலமைச்சர் மீதும், அரசு மீதும் விஷக்கனை கணைஎய்கிறார்கள் வட்டாரம்மட்டும் அல்ல, கூட்டணிக் கட்சிகள் வட்டாரத்திலிருந்தும் நாள்தோறும் பாணங்களைப் பிரயோகிக்கிறார்கள். தி.மு.க. ஆட்சி இருந்தபோது உங்கள் பாணங்கள் எங்கே போயிற்று? கட்டணக் குரல் ஏன் அன்று எழவில்லை.

நான் இன்று இரண்டரை மணிக்கு முதலமைச்சரைப் பார்த்தேன். நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய அரிய உரைகளின் தொகுப்பு வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி, டெல்லியில் (Constitution club) வெளியிடப் படவுள்ளது. வெளிடப்படுபவர் சபாநாயகர் ஓம் பிர்லா, முதல் பிரதியைப் பெறுபவர் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய். இதற்காக அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டேன். முதல் அழைப்பு இதழை அவரிடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இன்று அவரைப் போய் பார்த்துவிட்டு வந்தேன்.

1993 இல் என் மீது எப்படி பழிகள் சுமத்தப்பட்டதோ? இப்பொழுது ஒரு தவறான காலக்கட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்துப் பல பேர் இறந்தனர்? அந்தக் கூட்டத்தில் நான் இருந்தேனா? அந்தக் கள்ளச்சாராயத் தலைவனுக்கும் கட்சி அடைக்கலமளிப்பதை கடந்த ஒரு வார காலமாக என் மீது தொடுத்துக் கொண்டு இருக்கிறது. நீ ஆயிரம் கணைகளை வீசு; பார் என்னை நீ நெருங்க முடியாது. (ஆரவாரம், கரதட்டல்) இது எத்தனையோ வினா அடிகளைத் தாங்கி மரம் பாய்ந்த நெஞ்சு. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றாரே பேரறிஞர் அண்ணா. அந்த இதயத்தைக் கொண்டவன் இந்த வைகோ.

அபாயகரமான பொய்யான கற்பனையான புனைந்து, என் மீது 32 ஆண்டுகளுக்கு முன்பும் சுமத்தினார்கள். எந்தக் கடாச்சாகா என் உயிர் மூச்சாக இருந்தேனே? எந்தக் கடாச்சாகா வரைவுக்காக என் உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்தேனே? 29 முறை சிறை சென்றேனே? இரவும் பகலும் என் வீட்டில் என் பிள்ளைகளின் மடியைப் பேணிச் சென்ற செல்லது இல்லை. மாதத்தில் ஒரு நாள் வீட்டில் தங்குவேன். நான் நேசித்து சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை மக்கள் மன்றத்திலும் உயர்த்துவதற்காக என் ரத்தத்தை சிந்தி நான் உழைத்தேன். என்னை பிராஞ்சேடு அரவணைத் தார்கள் அண்ணன் அன்பில், அண்ணன் முரசொலி அடியார்.

நான் விடுதலைப் புலிகளின் மீது ஏன் பற்றுக் கொண்டிருக்கிறேன்? தனி நாடு வேண்டும் என்று கேட்ட பெரியாரின் உணர்வினை, சுயமரியாதை உரிமை கேட்ட அண்ணாவின் குரலை மனதில் பதிய வைத்திருப்பவன் நான்.

பெரியார் மையம் இடிக்கப்பட்டது. இந்தியாவின் தலைமை அமைச்சர் வஜ்பாய் அவர்களிடம் சென்று, திராவிட கழகத்தின் தேர்தலில் போட்டியிடாதவர்கள். திராவிட நாட்டு கோரிக்கை வைப்பவர்கள். எங்களை தனி நாடு கேட்க சொல்லாதீர்கள். ஆகையால் பெரியார் மையம் அமைப்பதற்கு வேறு நல்ல இடம் தாருங்கள் என்று கூறினேன். வஜ்பாய் அவர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரை தொடர்பு கொண்டு, மகாராஷ்டிரா, வீராமணியை உங்களை வந்து சந்திப்பார்கள். அவர்கள் கேட்பதை செய்து கொடுங்கள் என்றார். மூன்று இருந்த இடத்தை விட பெரிய இடத்தை பெரியார் மையம் கட்டுவதற்கு அமைச்சர் ஒதுக்கிக் கொடுத்தார்.

அந்த விதத்தில்தான் இந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது.

தர்மத்துக்காக ஒருவன் ஆயுதம் ஏந்திப் போராடுகிறான். அந்தத் தவப் புதல்வனைப் பெற்ற தமிழ்த் தாய் அவனை நினைத்து உளம்பூரிப்பும் அடைவாள். உலக மாவீரர்கள் சரித்திரத்தை முறையாக படித் திருக்கிறேன். வரலாற்றுப் புரட்சிப் படைட் புரட்சியாளர்களைப் பற்றிய வரலாற்றுப் பற்றி படித்திருக்கிறேன். அவர்கள் எவரும் என் பிரபாகரனுக்கு நிகர் இல்லை. அதை நான் திட்டவட்டமாக கூறுவேன்.

ஒழுக்கத்தின் உறைவிடம் பிரபாகரன். ஒழுக்கத்தின் இலக்கணம் பிரபாகரன். அர்ப்பணிப்பிற்குளே இருந்து அப்பழுக்கற்ற படையைத் தயாரித்தவர். ஏடி அவுஸ் வல்லரசுகளை எதிர்த்து களம் அமைத்து போராடியவர். சிங்களத்தையும், என் சகோதரரின் படை மாத்திரம் போரிட்டிருந்தால் சிங்களத்தை கொய்து வரை அவர்களை விரட்டி அடித்திருப்பார். தமிழீழம் பிறந்திருக்கும். ஆனால், ஏடி அவுஸ் வல்லரசுகள் ஆயுதங்களை அள்ளி அள்ளி சிங்களவனுக்குக் கொடுத்து, தங்களின் நாட்டிடமிருந்த முப்படை தளபதிகளை அனுப்பி ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தார்கள். ஐநூறு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

பத்துக் கடலை மாட வேண்டாம் என்ற பார்வையை சொன்னாரே! சுடுகாட்டில் உயிர் ஓய்ந்து கொண்டிர்ந்த நேரத்தில், தீயின் அழைப்பது எதனால்? இந்தச் சின்ன வயதில் இது தேவையா? என்று உணர்ச்சிகரமாகவும்,கதறிக்கொண்டுடிருந்த முள்ளிருந்த தமிழ்ப் பெண்கள் மாறாடித்துக் கொண்டு அழ, அதை வீடியோவாக கொண்டு வந்து பேசி சுப்பிரமணியம் என்னிடம் கொடுக்க, டெல்லியில் ஒரு வடக்கைக் களமாடிப் பிடித்துக் கொண்டு, ஒரு டி.வி பெட்டியை வடக்கைக்கு எடுத்துக் கொண்டு ஒவ்வொரு தலைவர் வீட்டிற்கும் சென்று அந்தக் கேஸட்டை போட்டு போட்டுக் காட்டினேன்.

தீயின் உணர்வாளிந்த மேடை, தாய்மார்கள் கதறி புலம்பினார்கள். எங்கள் இனமே அழிக்கப்படுகிறது. இந்தியாவின் தலை நகரில் உள்ள எல்லா கட்சித் தலைவர்கள் வீட்டிலும் போய் அந்த நம்பர் மரக் குளியில் இதனைப் போட்டுக் காட்டினேன்.

அந்தத் தருணத்தில்தான் சிங்கள இராணுவம் மட்டும் அல்ல, இந்திய இராணுவமும் எங்கள் மக்களைக் கொன்று குவித்தது. வல்லரசுத் துறையில் கட்டுக் கொன்று, இந்தியாவின் மலையாய் - ஜார்ஜ் பெர்னாண்டஸ் வீட்டில் நடந்து போய்ப் போராட்டம் நடத்தப்பட்டது என்று ஆதாரம் காட்டி யுத்தம் போட்டார். அவருடைய கொடுமையான தாக்குதலை அவர்கள் நடத்தினார்கள்.

1987 நவம்பர் 9 ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலக் மேலவை கூடியது. அவைத் தலைவர் சங்கர்தயாள் சர்மா துணை குடியரசுத் தலைவரான பின்பு அன்று தான் முதல் முதலாக சபையில் வந்து அமர்கிறார். நான், நட்சத்திரம், சேரும் பார்க்கக் கூடியவர் அவர். என் மீது அளவற்ற பாசத்தைக் கொண்டிருந்தார். அது வேறு. முதல் கேள்வி என்னைச் சொல்கிறார். அமைச்சர் நெப் பார்க்கலாம். No question hour. The rights of tamils have become a question mark என இனமே கேள்விக்குறி ஆகிவிட்டது. அதைப் பற்றி இங்கு பேச வேண்டும். Hell with your Question hour உங்கள் கேள்வி நேரம் நரகத்திற்கு போகட்டும் என்றேன்.

இருப்பசாய் வந்தார். உபசந்திர வந்தார். மாரிக் கிரேட் சுட சுடர் சுடரின் வந்தார். பேசாமல் இருங்கள், கேள்வி நேரம் நடைபெற முடியாட்டும் என்றார்கள். புதிய நேரத்தில் இதை எழுப்பிக் கொள்ளலாம் என்றார்கள். mind your business go to your seat. உங்கள் நாற்காலிக்கு செல்லுங்கள்;

எனக்கு அறிவுரை கூறாதீர்கள். எங்கள் இனமே அழிக்கப்படுகிறது. அதைப் பற்றி விவாதிக்காமல் எதை விவாதிப்பது? என்று கேட்டேன். சங்கர்தயாள் சர்மா பார்த்தார். with all pain I order to expel him, சபையை விட்டு வெளியேற்றுகிறேன் என்றார். நான் வெளியேற்றப்பட்டேன்.

மறுநாள் முயன்று பார்த்தேன். ஆளும் கட்சித் தரப்பிலிருந்து இலங்கைத் தமிழரைப் பற்றி இங்கே விவாதிக்க அனுமதிக்கக் கூடாது என்று கூறி விட்டார்கள். நான் அடங்காமல் உரக்கக் கத்திப் பேசினேன். இலட்சக்கணக்கில் எங்கள் மக்கள் சாகிறார்கள். இதைப் பற்றி இங்கே விவாதிக்கக் கூடாது என்கிறார்கள். நான் கொடுத்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறினால், அவைத் தலைவர் கேட்பார் என்றேன். நான் சொல்கிறேன், காலை 10 மணிக்கு மாநிலங்களவை அறைக்கு வாருங்கள் என்றார் வஜ்பாய்.

அவர் கூறியது போன்று காலை 10 மணிக்கு சென்றேன். அவர் சர்ஃ போட்டுக் கொண்டு, மஞ்சள் நிற ஜிப்பாவைப் போட்டுக் கொண்டு, கையில் ஒரு பையை வைத்துக் கொண்டு மாநிலங்களவை தலைவர் அறைக்குள் வஜ்பாய் சென்றார். 15 நிமிடம் கழித்து வெளியே வந்தார். நான் வெளியே நின்று கொண்டிருந்தேன். என்னை அழைத்து, உன்னுடைய கவன ஈர்ப்புத் தீர்மானம் இன்று அல்லது நாளைக்குள் எடுத்துக் கொள்ளப்படும். நீங்கள் உங்கள் இடத்திற்கு செல்லுங்கள் என்றார்.

விவாதம் வந்தது. 55 நிமிடங்கள் பேசியிருக்கிறேன். அப்பொழுது இந்திய இராணுவத்தைத் தாக்கிப் பேசினேன். தலைமை அமைச்சர் வந்தார். இந்திய இராணுவத்தை விமர்சித்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றார் என்னைப் பார்த்து. பிரதமர் அவர்களே என்ன விளைவுகள் நேரும்? அதிகபட்ச தண்டனை தூக்கு தண்டனை தானே? நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். நான் பேசுவேன்; தூக்குத் தண்டனை என்றாலும் நான் ஏற்றுக் கொள்வேன் என்றேன். இப்படிப்பட்ட உணர்வுகளால்தான் வளர்ந்தவன்.

எந்தத் தலைவனை உயிர்க்குக் மேலாக நேசித்து, உயிரைக் கொடுப்பதற்கு தயாராக இருந்தேனோ? அந்தத் தலைவர் மூன்று முறை என்னை மாநிலங்களவைக்கு அனுப்பினார். அதற்கு நன்றியாக நான் நடந்துகொண்டேன். அந்த இயக்கத்தின் சீர்மையை உயர்த்தினேன். தமிழர்க்காகவும், திராவிட இயக்கத்திற்காகவும் குரல் கொடுத்தேன். ஒவ்வொரு முறை பேசும்போதும் அந்தத் தலைவரின் புகழைச் சொல்லி, அவரின் புகழை அங்கீகரிப்பதாகவே அமைந்தது.

ஆனால் நடந்தது என்ன? நீ கொலை செய்யத் திட்டமிட்டுவிட்டாய்!உனக்காக விடுதலப்புலிகள் அந்தத் தலைவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு விட்டார்கள்! வை.கோபால்சாமியின் அரசியல் உயர்வுக்காக விடுதலப்புலிகள் அந்தத் தலைவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று ஊர்ஜிதம் ஆகாத ஒரு தகவலை ஒன்றிய உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பினார்.

அதற்கு முன்பு 1993 செப்டம்பர் 22, மறுநாள் காரைக்குடியில் அண்ணா விழாவில் உரையாற்றச் செல்வதற்காக நான் இரயிலில் அமர்ந்திருக்கிறேன். தி.மு.கழகத்தின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவர் பதற்றத்தோடு வந்து, என்னிடம் அண்ணே கோயம்புத்தூர் சிறைமுகாமில் உங்களைப் பற்றிப் பாராட்டிப் பேசி சென்னி. தலைவர் என்னை அழைத்து, என்னடா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? வைகோவை ஏதோ உச்சி மேல் தூக்கி வைத்துப் பேசினாயாமே? பத்து நாட்களில் அதிர்ச்சித் தரத்தக்க செய்திவரும், அதன்பிறகுதான்நீ அதை உணர்வாய்! என்று கூறினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று கூறினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பத்து நாட்களில் என்ன செய்தி வரப்போகிறது? என்று நினைத்தேன்.

காரைக்குடி சென்று சிக்கல் விடுதியில் தங்கினேன். அங்கு குளிர்காய்ந்துசென்றபோது, வாஸ்பேசினில்காலை வைத்தேன். அந்த செராமிக் உடைந்து எனது வலது கால் பெருவிரல் நரம்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இரத்தம் கொட்டக் கொட்ட அதை நிறுத்த முயற்சி செய்தேன்.

இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு என் தொண்டையில் இருந்து இரத்தம் வந்தது. சென்னை வந்து டாக்டர் கே.கே.ராமலிங்கம் அவர்களிடம் சென்றேன். என் தொண்டையில் ஒரு கட்டி இருக்கிறது. அது புற்று நோய் கட்டியாக இருக்காது. இருந்தாலும் உடனே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர் கே.கே.ஆர். கூறினார். பழனியிலும், இரண்டாம்பேட்டையிலும் இடைத்தேர்தல். அங்கு நான் பிரச்சாரத்திற்குச் செல்ல வேண்டும். அதனால் நான் உடனே வர முடியாது. 18 ஆம் தேதி, நான் வந்து விடுகிறேன் என்று டாக்டரிடம் கூறிவிட்டு பிரச்சாரத்திற்குச் சென்றேன்.

அங்கு எந்தக் கூட்டத்திலும் நான் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. கூனிக் குறுகி நின்றேன். இந்தக் கருப்புத் துண்டைப் பார்த்தால் தி.மு.க தொண்டர்கள் ஆரவாரம் செய்வார்கள். இந்தக்கருப்புத் துண்டை சுருட்டி மடித்து வேனில் வைத்துவிட்டு ஒரு மூலையில் அமர்ந்து கொண்டேன்.

பின்பு என் மீது என்ன குற்றச்சாட்டு? தேர்தல் பிரச்சாரத்திற்கே தேர்தல் பணிச் செயலாளர் வரவில்லை என்பது. ஒன்றைப்பக்க குற்றச்சாட்டில் இது பிரதான குற்றச்சாட்டு. இரண்டாம்பேட்டைக்கு வந்தேன். வேட்பாளர் என்னைப் பார்க்கவில்லை. 18 இடங்களில் பேசிவிட்டு, அண்ணா பிறந்தநாள் அன்று ஈரோட்டுக்குச் சென்றேன். தலைவர் அவர்கள் பேசிவிட்டுச் சென்றேன். நான் கூட்டம் பேசுகின்ற ஊர்களுக்கெல்லாம் சென்று எனக்கு முன்பாக பிரச்சாரம் செய்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார். நான் ஏழு ஊர்களில் பேசிவிட்டு காங்கேயத்தில் வந்து மேடையில் நிற்கிறேன். கார் சத்தம் கேட்கிறது. கான்வாய் வருகிறது. தலைவரின் பட்டப் பெயரைச் சொல்லி அபிவிருத்தியிலிருந்து வாழ்க! வாழ்க! என்று முழக்கமிட்டுக் கொண்டே இருந்தேன்.

பேச்சை நிறுத்தினேன். நீ தொடர்ந்து பேசு என்று தலைவர் கூறவில்லை. திரும்பிப் பார்த்தேன். எட்டு, ஒன்பது பேர் வரிசையாக நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறார்கள். ஒரு நாற்காலிகூட காலியாக இல்லை. யாரும் எழுதத் தயாராக இல்லை. இரண்டாவது வரிசையைப் பார்த்தேன். அதிலும் ஒன்பது பேர் அமர்ந்திருக்கிறார்கள். எந்த நாற்காலியும் இல்லை. மூன்றாவது வரிசையைப் பார்த்தேன். எந்த நாற்காலியும் இல்லை. நான்காவது வரிசையில் கோவை எம்.பி. மோகன், அண்ணே இங்கே வாருங்கள். இங்கே ஒரு நாற்காலி இருக்கிறது என்றார். நான் சென்று அங்கே அமர்ந் தேன். வேட்பாளரில் தொடங்கி அனைவரின் பெயரையும் கலைஞர் கூறினார். என் பெயரைக் கூறவில்லை. கணேச மூர்த்தி ஒருவர் தான் என் பெயரைக் கூறினார். நான் நேசித்து பூஜித்த தலைவர் எல்லாருடைய பெயர் களையும் விவரித்தார். என் பெயரை விவரிக்கவில்லை. கூட்டத்திலிருந்து கூச்சல் போட ஆரம்பித்தார்கள் காங்கேயத்தில். என் மனம் உடைந்தவனாக இறங்கி மொஞ்சனூர் தலைவர் பண்ணைக்குச் சென்றுவிட்டேன்.

வீராபாண்டி ஆறுமுகம் என்னை அழைத்தார். நான் பத்துக் கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறேன். நாளை வந்து பேசிவிட்டுப் போ என்றார். சரி என்று பத்துக் கூட்டங்கள் பேசிவிட்டு வந்து, குறிப்பிட்ட நாளான 18 ஆம் தேதி அதிகாலையில் மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்தேன். திவான் ஒருவர் மட்டும்தான் என்னுடன் இருந்தார். எனக்கு குளோராஃபார்ம் மயக்க ஊசி போட்டார்கள். எண்களை எண்ணச் சொன்னார்கள். 15 வரை எண்ணினேன். அதன் பிறகு எனக்கு நினைவு இல்லை. அறுவைச் சிகிச்சை முடிந்து என்னை படுக்கையில் படுக்க வைத்திருக்கிறார்கள். படுக்கையில் சிறிது நினைவு வருகிறது. டாக்டர் ராமலிங்கம் அருகில் நிற்கிறார். அப்போது “நான் ஒரு தவறும் செய்யவில்லையே அண்ணா! நான் ஒரு துரோகமும் நினைக்கவில்லையே அண்ணாரை! உங்களுக்காக நான் உயிரையே கொடுப்பேன் அண்ணா! என்னை ஏன் அண்ணே நீங்க சந்தேகப்படுறீங்க” இத்தனையும் அரை மயக்கத்தில் நான் சொன்னவை என்றார் டாக்டர்.

இந்தச் சூழ்நிலையில்தான் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து உன்னை ஏன் நீக்கக் கூடாது? என்று கேள்வி வந்தது.

வீட்டில் இருந்தால் வீராபாண்டி ஆறுமுகம் கலை ஞரிடம் என்னை அழைத்துச் செல்ல முயற்சிப்பார். இன்னொரு முறை மன்னிப்புக் கேட்டு அதை எட்டுக் காலத்தில் முரசொலியில் போடுவார்கள். நம்மை நேசிக்கின்ற தொண்டன், இவர் பேசுவார், பின்பு மன்னிப்புக் கேட்பார். இவருக்கு இந்த வேலையாகப் போய்விட்டது என்று நம்மை நேசிக்கின்ற தொண்டர்கள் நினைப்பார்கள் என்று எண்ணினேன்.

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கோவை மாணிக்க வாசகம் இதய நோய் வந்து மருத்துவமனையில் இருக்கிறார்ஆம். உடனே நான் அங்கு செல்ல வேண்டும் என்று வீராாண்டி ஆறுமுகம் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக நான் சென்று விட்டேன். டாக்டர் தணிகாசலத்தை அழைத்துச் சென்றேன். அவருக்கு உடனடியாக ஆபத்து எதுவும் இல்லை. ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறி விட்டார். இது ஏழாம் தேதி.

எட்டாம் தேதி சூடவாசல் கூட்டம். வீராபாண்டி ஆறுமுகம் அதை ரத்து செய்யச் சொன்னார். ரத்து செய்துவிட்டேன். ஏழாம் தேதி இரவு 10 மணிக்கு சாப்பிடலாம் என்று சாப்பாடு வைத்து தரையில் உட்கார்ந்திருந்தேன். அப்படி அமர்ந்திருக்கும்போது கதவைத் தட்டினார்கள். யாரென்று பார்த்தால் கவி பேரரசு வைரமுத்து, இயக்குநர் இமயம் பாரதிராஜா. எடுத்த எடுப்பிலேயே நமக்கு அலுவலகத்திற்கு வீடு கொடுத்த கொடை வள்ளல் கலைப்புலி தாணு மூவரும் வந்து வாசலில் நிற்கிறார்கள்.

சாப்பாட்டுத் தட்டை எடுத்து வைத்துவிட்டு, வீட்டிற்குள் அழைத்துச் சென்று மூன்று நாற்காலியை எடுத்து வந்து அவர்களை அமரச் சொல்லி விட்டு, படுக்கையில் நான் உட்கார்ந்து கொண்டேன். எதற்காக கோபமாக இருக்கிறீர்கள்? காலையில் வாருங்கள் கலைஞரைப் பார்த்தால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்றார்கள்.

நான் சொல்வதை கொஞ்சம் கேட்கிறீர்களா? கடந்த இரண்டரை மூன்று வருடங்களாக என்னை என்ன பாடு படுத்திவிட்டார்கள் என்று மூன்று மணி நேரம் சம்பவங்களைத் தொகுத்துக் கூறினேன். அவர்கள் இரவு பத்தரை மணிக்கு வந்தார்கள். இரண்டரை மணியைத் தாண்டிவிட்டது. அவர்கள் ஒன்றும் பேசவில்லை. கவிப்பேரரசு வைரமுத்து, இந்த மூன்று மணி நேரமும் சத்தியத்தின் குரலைக் கேட்டோம். நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை என்று எழுந்து சென்றுவிட்டார்கள்.

என்னை கட்சியை விட்டு நீக்கக் கூடாது என்று இரத்தத்தில் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பிய நொச்சிப்பட்டி தண்டபாணி எனது வீட்டின் முன் தீக்குளித்துவிட்டார். குருநாதன் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். ஒரு மணி நேரம் கழித்து அவர் இறந்துபோய்விட்டார் என்றார். யாராவது தீக்குளித்தால் நான் சாகும்வரை உண்ணா விரதம் இருப்பேன் என்று அறிக்கை வெளியிட்டேன்.

காலையில் நான் மருத்துவமனைக்குச் சென்றேன். முகம் கருகவில்லை. நடுபாவி இப்படி செய்து விட்டானே! என்று அவரது உடலை எடுத்துச் சென்று அவரவுக்குரிச்சி மயானத்தில் சிந்தையில் உடலை வைத்துவிட்டு, ஒரு ஒளிபெருக்கி, பத்து மின் விளக்குகள் ஏற்பாடு செய்யச் சொன்னேன். அப்படி செய்திருந்தார்கள்.

அன்று நீதி கேட்கிறேன் என்று நான் முதன் முதலாக மனம் திறந்து இரண்டரை கல் மணி நேரம் பேசிவிட்டு திருச்சி பெமினா ஹோட்டலுக்குச் சென்றேன். மறுநாள் காலை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை, “ஜூலியஸ் சீசர் படுகொலையின்போது மார்க் ஆண்டனி பேசியதைப் போல வைகோ அவாங்குரிச்சிமயானத்தில்பேசினார்”என்றுகோட்டம் கட்டி செய்தி வெளியிட்டிருந்தது. அங்கிருந்தபோது, இடிமழை உதயந்தீக்குளித்துவிட்டான்என்றார்கள். நான் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு ஓடினேன். அண்ணன் வருவாரா? அண்ணன் வருவாரா? என்று கேட்டுக் கொண்டே இருந்தான். ஐந்து நிமிடத்திற்கு முன்புதான் இறந்துவிட்டான் என்றார்கள். விழுப்பனங்குறிச்சிக்கு அவரது உடலை தூக்கிக் கொண்டு சென்றோம். மண்ணச்சநல்லூர் நடராசன், மலர்மன்னன், ஷேக் முகமது எல்லோரும் வந்தார்கள்.

அங்கு சுடுகாட்டில் உடலை வைத்துவிட்டுப் பேசினேன். “நான் உங்களுக்காக உயிரைக் கொடுக்கச் சித்தமாக இருப்பேன். உங்கள் உயிரைக் காப்பாற்ற உங்கள் மூத்த மகன் வருவானா? நடு மகன் வருவானா? இளைய மகன் வருவானா? ஆனால் இந்த வைகோ உயிரைக் கொடுக்க வருவான்”. இடிமழை உதயனை சிதையில் வைத்துவிட்டு இப்படிப் பேசினேன்.

வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த உப்பிலியாபுரம் பஞ்சாயத்துத் தலைவர் உப்பிலியாபுரம் வீரப்பன் தீக்குளித்து, மருத்துவமனையில் சாகக் கிடக்கிறார் என்று அடுத்த தகவல் வந்தது. அவருக்கு உடம்பெல்லாம் கருகிவிட்டது. கண்ணும் தெரியவில்லை.

அடுத்து மேலப்பாளையம் தியாவில் முஸ்லிம் இளைஞர் ஜவாஹர்லால் விஷம் குடித்து இறந்து போனார்.

அடுத்த தகவல், கோவை காமராஜபுரத்தில் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் பாலன். அவர் கோவை திமுக மாநில மாநாட்டில் முதல் நாள் நான் பேச அழைக்கப்படவில்லை. அந்த இரவில் 12 மணிக்கு அருந்ததியர் தெருவில் கோவை மாவட்ட திமுக முன்னணியினர் என்னை அழைத்துச் சென்றிருந்தனர். தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் அருகே நான் சென்றேன். வருங்கால முதல்வர் - வருங்கால தலைவர் என்று என் பெயரைச் சொல்லி ஒரு இளைஞன் முழக்கமிட்டான். அவரை அப்படியே அடித்து மேடையிலிருந்து கீழே தூக்கி எறிந்தேன். கீழே போய் விழுந்தான். அவர்தான் தீக்குளித்த கோவை காமராஜபுரம் பாலன்.

அதன்பிறகு பேராசிரியரைச் சந்தித்தேன். அவர், “கலிங்கப்பட்டியில் போய் பேசாமல் இரு. இரண்டு மூன்று வருடங்கள் போகட்டும். அந்தளை எதிர்த்தெல்லாம் அரசியல் பண்ண முடியாது. நீயும், நானும் கட்சி நடத்த முடியுமா? உன் வேலையைப் பார்த்துவிட்டு போ” என்று கூறினார்.

நானும் அந்த முடிவில்தான் இருந்தேன். என் மனைவியிடமும், நாம் ஊருக்குச் சென்றுவிடுவோம். தாத்தா கட்டிய அரண்மனைபோன்ற வீடு இருக்கிறது. மாடியில் படுத்தால் அருமையான தென்றல் காற்று வரும். இதோடு நம் அரசியலை முடித்துக் கொள்வோம் என்று முடிவெடுத்திருந்தேன் நான். என் மனைவிக்கும் மிகவும் மகிழ்ச்சி. நல்ல முடிவு ஊருக்குப் போய்விடுவோம் என்று கூறிவிட்டார்கள்.

ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக இந்தச் சம்பவங்கள் நடைபெற்றதால், ஐவர் மேனியை எரித்த நெருப்பு என்னை நீதி கேட்கச் சொன்னதால் இந்த மறுமலர்ச்சி திமுக உதயமாயிற்று.

இதை எல்லாம் ஏன் இப்பொழுது பேசுகிறாய்? வருடம் 32 ஆயிற்றே? என்று நீங்கள் நினைக்கலாம். இப்பொழுது அதே விதத்தில் என் மீது பாணத்தைத் தொடுக்கிறார்கள். ஏன்? நான் அந்தக் கூட்டணியை விட்டு வெளியேறி வந்துவிட்டேன். தன்மானத்தைக் காப்பதற்காக. கழகத்தின் 1400 பொதுக்குழு உறுப்பினர்களும் இந்தக் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்ததால் ஒரு ஜனநாயகப் புரட்சி நடத்தி, 35 விழுக்காடு ஓட்டு வாங்கி கோட்டையில் வந்து அமர்ந்திருக்கிறாரே விஜயோடு கரம் கோர்க்கலாம் என்பது கழகத்தில் உள்ள அத்தனை தோழர்களின் விருப்பம்.

இந்த முடிவெடுத்த காரணத்தால் கடந்த ஒரு மாத காலமாக பழைய தாக்குதலை ஆரம்பித்து விட்டார்கள். நான் அனைத்தையும் தாங்கி பழகிப்போனவன். உங்கள் தாக்குதல்கள் எல்லாம் என்னை நிலைகுலையச் செய்யாது. விஜயை ஆதரிக்கிறேன் என்றால், 2004 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 61 நாள் திமுக - காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்தேன் இலட்சக்கணக்கில் மக்கள் வந்தார்கள். 40க்கு 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த கூட்டணியில் வெற்றி பெற்றார்கள். இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம், வைகோவின் பிரச்சாரம் என்று இந்து பத்திரிக்கை கட்டம் கட்டி செய்தி வெளியிட்டது. அப்படித்தான் மாமா காமராஜரின் அவர்களை ஆதரித்துப் பேசச் சென்றேன்.

இப்பொழுது கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கின்ற கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி. அவர்கள் விஜய் அரசைப் பற்றியோ, அல்லது அமைச்சர் களைப் பற்றியோ ஒரு விமர்சனம் செய்வது உண்டா? கிடையாது. விமர்சிக்க விரும்புகிறீர்களா? அமைச்சர் களை அழைத்துச் சொல்லுங்கள். முதலமைச்சரை நேராகப் பார்த்து அவரிடம் கூறுங்கள். ஏன் பத்திரிக் கையாளர்களைப் பார்க்கிறீர்கள்? ஏன் அறிக்கை கொடுக்கிறீர்கள்? நான் கட்சிகளின் பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை. நாள்தோறும் ஒரு விமர்சனம். நம் தயவில்தானே விஜய் ஆட்சி நடத்த வேண்டும்? எந்த நேரமும் கவிழ்க்கலாம் அல்லவா? என்று ஆறு மாதத்திற்குள் தேர்தல் வரும். இது நான் இருந்த கூட்டணிக்குத் தலைமை தாங்கிய தலைவர் கூறுவது.

என்ன திட்டம்? என்ன ரகசிய உறவு? ஒரு காலத்தில் வாழ்ந்தாய் என்னை வளர்ப்பு மகன் என்றார். ஆனால் அந்த பா.ஜ.க. நச்சுக் கரங்களோடு இங்கே நுழைய திராவிட இயக்கத்தின் வார்ப்பாக வைகோ விடமாட்டான். இந்துத்துவாய நாசகார பாசிச சக்தி களை, பா.ஜ.க சக்திகளை இந்தத் திராவிட பூமியின் உள்ளே விடமாட்டோம் என்று முடிவெடுத்து திமுகவுடன் கூட்டணி வைத்தேன்.

நாங்கள் நிந்திக்கப்பட்டோம். அவமதிக்கப்பட்டோம். நான்கு சீட்டுக்கு மேல் கேட்டு இங்கே வராதீர்கள் என்று பேச்சுவார்த்தைக்குச் சென்ற நம் அவைத் தலைவரிடம் சொன்னார்கள். அதுவும் எங்கள் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என்றார்கள். ஒரு தொகுதியிலாவது தனிச் சின்னத்தில் நிற்க லாமே என்று இருந்தோம். ஏழு அமைச்சர்கள் என் வீட்டுக்குப்படையெடுத்துவந்தது.அந்தஒருதொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பேசிக் கொண்டிருந்தார்கள். நான் மிகவும்மனது உழைந்து போனைவைகா, உங்கரிய விருப்பப்படியே செய்யுங்கள். அவர் உதயசூரியனிலேயே நிற்கட்டும் என்று கூறிவிட்டேன். இப்படி மனக் காயங்களோடு வந்தோம்.

வாழ்க்கையில் இரண்டு தவறுகளைச் செய்தேன் என்று அறிக்கை கொடுத்தேன் அதை இன்றைக்கு எல்லா பத்திரிக்கைகளும் வெளியிட்டிருக்கிறது. அண்ணா திராவிடத்தோடு கூட்டு சேர எனக்கு துளியும் விருப்பம் கிடையாது. திருச்சி தி.மு.க மாநாட்டுக்குச் செல்ல உரையையும், ஆடை களையும் எடுத்து வைத்துவிட்டேன். ஆனால் கட்சியின் அவைத்தலைவர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் எல்லோரும் என்னைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு, என்னைச் சாப்பிடவிடவில்லை. 40 தொகுதிகள் நமக்குக் கொடுப்பார்கள். 25 இடங்களில் நாம் வெற்றி பெறலாம். தி.மு.க.வில் ஒரு தொகுதிகூட வெற்றி பெற முடியாது. இப்படி ஒரு சந்தர்ப்பம் திரும்ப கதவைத் தட்டாது. 25 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றால் கட்சிக்கு உயிர் வந்துவிடும். நீங்கள் உங்கள் பிடிவாதத்தை மாற்றுங்கள் என்றார்கள்.

நான் ஒரு தலைவனுக்குரிய தகுதியைப் பெற்றவன் அல்ல. தலைவன் என்றால் நிர்பந்தங்களுக்கு இணங்கிவிடக் கூடாது. நாம் எடுக்கின்ற முடிவுதான் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்தான் தலைவர். எனக்கு அந்தத் தலைவர் தகுதி இல்லை. எல்லோரும் சுற்றி வளைத்து கண்டிப்பாக அண்ணா திமுகவுடன் போக வேண்டும் என்று கூறியபோது, சரி உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என்றேன். என்ன ஆயிற்று? என் நம்பகத்தன்மை தூள் தூளானது. என்னுடைய நம்பகத்தன்மை தூசி புழுதியாற்ற போன்று ஆகிவிட்டது.

அதன் பிறகு ஆயிரம் கோடி வாங்கிவிட்டான். 1500 கோடி வாங்கிவிட்டான் என்று கூச்சல் சொன் னார்கள். சங்கீக் காசை இந்தக் கையில் தொட்டது கிடையாது.

பேசவே முடியாது. தொண்டடையில் பேச்சே வராது. இரண்டு நிமிடத்தில் நன்றி வணக்கத்தோடு அமர்ந்துவிட வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நான் நேற்றைக்கு முந்தைய நாள் இரவெல்லாம் தூங்கவில்லை. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த முரசொலியில் 1993 இல் நடைபெற்ற ஒரு சம்பவத்தைச் சொல்லி, 16 வருடத்திற்குப் பின்பு கற்பனையாக கதை கட்டுவதில் அவருக்கு நிகர் எவரும் கிடையாது. 16 வருடம் கழித்து நாகர்கோவிலில் இப்படி நடைபெற்றது. ஆற்காடு வீராசாமியும், துரைமுருகனும் கூட்டம் முடிந்து என் பெயரைச் சொல்லி அவரைப் பார்க்கச் சென்று என்னய்யா பிரச்சினை என்று கேட்டார்கள். நான் கட்சிக்குத் தலைவராகவரணும்ய்யா, கலைஞருக்கு பிறகு நீதானய்யா. அந்தாளு பெரியார் மாதிரி, ராஜாஜி மாதிரி நூறு வருடம் இருப்பார். அதுவரைக்கும் நான் காத்துக்கிட்டு இருக்கணுமா? என்று எனக்கு அடைமொழி கொடுத்து இப்படிக் கேட்டிருக்கிறார் அந்த நபர் என்று எழுதினார்.

சில பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர்கள் என்னிடம் சொன்னார்கள் என்று எழுதினார். இல்லை என்றால், 16 வருடம் கழித்து எழுதுவதால், 16 வருடம் எப்படி சும்மா இருந்தீர்கள் என்று கேட்பார்கள் அல்லவா? ஜோடிப்பதில் அவருக்கு நிகர் எவரும் கிடையாது. சில பல ஆண்டுகளுக்குப் பின்பு அந்த இருவரும் வந்து இப்படி அந்த இரவில் வைகோ கேட்டான் என்று எழுதியிருக்கிறார்.

முரசொலியில் இது வெளியிடப்பட்டுள்ளது.

என் தாய் அறியச் சொல்கிறேன். அப்படி ஒரு வார்த்தை என் வாயிலிருந்து வந்ததே கிடையாது.

மறுநாள் தூத்துக்குடியில் கூட்டம். மனம் திறந்து பேசினேன். அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி என்ற பாடலை முழுவதும் கூறி அந்த வாயு மைந்தன் அனுமன் என் மார்பைப் பிளந்து பாருங்கள் அங்கே ராமன் இருக்கிறான் என்று சொன்னான். கழகத் தோழர்களே, என் மார்பைப் பிளந்து பாருங்கள் - என் நெஞ்சைப் பிளந்து பாருங்கள் அங்கே என் தலைவர் கலைஞர்தான் இருக்கிறார் என்று பேசினேன்.

அடுத்து பேச வந்த தலைவர், வை.கோபால்சாமி இங்கே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார், இதைக் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பே பேசியிருக்கலாமே என்று கேலியும், கிண்டலுமாக பேசினார்.

மூன்று மாதத்திற்கு முன்பு அருப்புக்கோட்டையில் அதே பேச்சை தான் பேசியிருக்கிறேன்.

இந்தச் சூழ்நிலையில்தான் வேறு வழியில்லாமல் நாங்கள் கட்சியைத் தொடங்க வேண்டி வந்தது. எவ்வளவு பழிச் சொற்கள்? கொலைகாரன் என்று ஒரு பழி, கோடிகளைக் குவித்துவிட்டான் என்று ஒரு பழி. நீங்கள் அண்ணாவைப் போல் நேர்மையாக ஆட்சி நடத்தினீர்களா? காமராஜரைப் போல் நேர்மையாக ஆட்சி நடத்தினீர்களா? நீங்கள் நாளை முதல் என் மீது கடும் கணைகளைத் தொடுப்பீர்கள். நான் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். பதிலுக்கு ஒன்றுக்கு பத்துக் கணைகளைத் தொடுக்க என்னிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. என் அம்பரா அம்பாறாத்தூணியிலே அம்புகள் இருக்கின்றன. தொடுப்பேன்.

இப்போது சகோதரர் விஜயோடு உடன்பாடு வைத்திருக்கிறோம். அவர் அற்புதமான கடிதத்தை என் வீட்டிற்கு அனுப்பினார். முதல் அர்ஜுனாவும், புஸ்லி ஆனந்தும் வீட்டிற்கு வந்தார்கள். விஜய் கையெழுத்துப் போட்ட ஒரு பக்கக் கடிதத்தை என்னிடம் கொடுத்தார்கள். அதில், கூட்டணிக் கட்சியாகிய உங்களை என்று அவரே எனக்கு அடைமொழி கொடுத்து, இந்தக் கூட்டத்தில் நீங்கள் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கூட்டத்திற்குத் தர்மத்தின்வாழ்வுதனைசூழும். நானும் சென்றிருந்தேன். அவர்களோடு நாங்கள் கரம் கோர்ப்பது என்று முடிவாகிவிட்டது. இதில்மற்றவர்களைவிட்டுவிட்டார்கள். என்மீதுதான் பாணங்களைத் தொடுக்கிறார்கள். தொலைக்காட்சி காட்சி விவாதங்களில் ஆற்றல் நிறைந்த பேச்சாளர்கள் வாதங்களில் ஈடு இணையற்ற மேதாவிகள் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் வாதம் நடத்துகிறார்கள். இந்த மூன்று வருட காலத்தில் என்றைக்காவது ஒரு நாள் தமிழ்நாட்டில் இத்தனை சாதனைகளுக்கும் பாடுபட்டு பெற்றுக் கொடுத்தார் என்று ஒரு வார்த்தை யாராவது ஒருவர் பேசியது உண்டா? ஆனால் கேலி, கிண்டல், ஏளனம், பரிகாசம் செய்கிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.

என்னைப் பற்றி தாக்குவது அவர்களுக்கு மிகவும் சுலபம். அதனால் முந்தைய நாள் இரவு முரசொலியில் வந்ததற்கு இரவு இரண்டு மணி வரை நான் பதில் எழுதினேன். இன்றைய சங்கொலியில் அது முழுமையாக வந்திருக்கிறது. இத்தனை வருடம் கழித்து அவர் கூறிய குற்றச்சாட்டை ஐந்து நாட்களுக்கு முன்பு முரசொலியில் திரும்ப எடுத்துப் போட்டு, அந்த நினைவு என்று தலைப்பில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதற்கு நான் கொடுத்த பதில் இன்றைய சங்கொலியில் வந்திருக்கிறது. அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் கொடுத்திருக்கிறேன். இதற்கு பதில் சொல்லுங்கள்.

எங்கே இருந்தாலும் அங்கே விசுவாசமாக இருப்பவன் நான், கூட்டணி என்றால் அந்தக் கூட்டணிக்கு விசுவாசமாக இருப்பவன் நான். என் தோழர்களும் அப்படித்தான். இப்பொழுது நாங்கள் தீர்க்கமான முடிவெடுத்து தமிழக வெற்றிக் கழகத்தோடு கரம் கோர்த்திருக்கிறோம்.

ஆட்சியைக் கவிழ்த்துவிடுவோம் என்று சும்மா லேசாக மிரட்டிப் பார்க்காதீர்கள். பா.ஜ.க.வோடு உறவு வைக்கப் போகிறீர்களா? செய்து பாருங்கள். நான் சவால் விடுகிறேன், தேர்தல் வரட்டும் 180 இடங்கள் விஜய் அணி வெற்றி பெறும். ஆட்சி ஆறு மாதம் நீடிக்காது, ஐந்து மாதம் நீடிக்காது என்கிறார்கள். ஏன், கரப்ஷனை விஜய் வேரோடு கிள்ளி எறிந்து விட்டாரே! இதைவிட என்ன சாதிக்க வேண்டும்? சாலை அமைக்க வேண்டுமா? அணை கட்ட வேண்டுமா? பாலம் அமைக்க வேண்டுமா? என்ன சாதிக்க வேண்டும்? புரையோடி புற்றுநோய் ஆகிவிட்ட ஊழலை அடிமட்ட வேரிலிருந்து தூக்கி எறிய அவர் இன்று முயல்கிறார்.

ஊழலற்ற அரசு நடத்துவது மிகவும் கடினம். மூத்த தலைவர் வைத்திருக்கிறார் என்றார்.

வயதான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். மாதம் மாதம் கமிஷனாக நமக்கு இலட்சக்கணக்கில் வந்து கொண்டிருந்தது. தற்போது அது மொத்தமாக நின்றுவிட்டதே! ஒன்றும் வரவில்லையே? அப்புறம் எதற்கு இந்த அரசாங்கத்திற்கு கோப்புகளை நகர்த்த வேண்டும்? ஒரு கோப்புகூட நகர்வது கிடையாது. அதிகாரிகள் அனைவரும் நமக்கு இலட்ச இலட்சமாக வந்தது. தற்போது விஜய் ஆட்சியில் நிறுத்தப்பட்டுவிட்டது என்று பதறுகிறார்கள். ஒரு அனுமதி பெறுவதற்கு முன்பு 15 இலட்சம் கொடுத்தோம், தற்போது பத்துப் பைசாகூட கேட்பது இல்லை என்று கூறுகிறார்கள். ஆயா வேலைக்கு இத்தனை இலட்சம், செவிலியர் பணி மாறுதலுக்கு இத்தனை இலட்சம் என்று இமாலய ஊழல் செய்தீர்களே?

அதிகாரிகள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பது இல்லை. கோப்புகள் மீது அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பது இல்லை. எனக்குத் தெரியும். எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். இந்த அரசை செயல்படுத்த விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். மின்வெட்டால் பெரும் பாதிப்பு வரப்போகிறது. அதில் இந்த ஆட்சி அப்படியே ஆடிப்போய்விடும். உங்கள் கட்சியில் அதிகமானோர் மின்சாரத் துறையில் இருக்கிறார்கள் அல்லவா? நீங்கள் பிரச்சினைகளை உருவாக்குவீர்கள். கிளர்ச்சிகள், போராட்டங்கள் நடத்துவீர்கள். கேள்விகளைத் தொடுப்பீர்கள். சி.பி.ஐ. விசாரணை கேட்பீர்கள். இதெல்லாம் செய்து நேர்மையை நிலைநாட்ட முயல்கின்ற ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.

நேர்மைக்காக அரசியல் நடத்துகின்ற நானும், எங்கள் இயக்கமும் அப்படி ஒரு ஆபத்து சூழுமானால் அதைத் தடுப்பதற்கு நாங்கள் முதல் ஆளாக வந்து நிற்போம். தெருவுக்குத் தெரு வைகோ வருவான். ஊருக்கு ஊர் வைகோ வருவான். அவன் குரல் கேட்கும். சகோதரர் விஜய் நேர்மையான ஆட்சி நடத்த விரும்புகிறார். அந்த ஆட்சியை அலங்கோலப்படுத்தி வீழ்த்த முயற்சி செய்கிறார்கள்.

நான் பிறந்த பொன்னாடு தமிழ்நாடு. இந்தத் தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு. நான் அரசியலுக்கு வந்து 62 வருடம் ஆயிற்று. ஐந்தரை வருடம் நான் சிறையில் இருந்திருக்கிறேன். தமிழ்நாட்டின் நலனுக்காக 6500 கிலோ மீட்டர் நான் நடைபயணம் சென்றிருக்கிறேன். இப்பொழுது எங்கள் கடமை என்ன? எங்களை மதித்து, எங்களுக்கு மரியாதை கொடுத்து ஆட்சி பீடத்தில் இருப்பவரும், அவரது சகாக்களும் மறுமலர்ச்சி தி.மு.க.வை மதிக்கிறார்கள். நேயத்தோடும், மரியாதையோடும் நடத்துகிறார்கள். யுத்த களத்திற்கு இராணுவம் செல்கிறபோது, முன்னால் சென்று பாதையைச் செம்மைப்படுத்துபவர்கள்தான் சேப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ். மதிமுகவும் அதுபோலத்தான் சேப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ்.

என் கையில் இருப்பது 1957 ஜனவரி 25 இல் வெளியான சங்கொலி. இது யாருடைய ஏடு? திராவிடர் கழக ஏடு. திராவிடர் கழக கொள்கை ஏடு! தி.மு.க. ஏடு அல்ல. திராவிடர் கழக ஏடு. இதன் ஆசிரியர் மயிலை சீனிவாசன். இதை நெடுமாறன் தான் என்னிடம் வந்து கொடுத்தார். சங்கொலி என்ற பெயரில் இரண்டு வருடம் திராவிடர் கழக ஏடு வந்திருக்கிறது.

அப்பொழுது நாங்கள் சங்கொலி ஏடு தொடங்கியவுடன், என்ன சொன்னார்கள் தெரியுமா? மயானத்தில் ஊதுவதுதான் சங்கு, பொருத்தமான பெயரை இந்தப் பத்திரிக்கைக்கு வைத்திருக்கிறீர்கள். உங்கள் கட்சிக் காரர்கள் எல்லாம் மயானத்திற்குத்தானே போய்க் கொண்டு இருக்கிறார்கள்? நல்ல பெயர் என்றார்கள். அப்படி என்றால், பெரியாரை ஆதரித்த இந்தப் பத்திரிக்கைக்குப் பெயர் சங்கொலிதானே?

என் மீது பற்றுக் கொண்டிருந்த விடுதலைப் புலி அன்பு, அண்ணே, தலைவருடைய பாதாள அறையில் போட்டோவே கிடையாது அண்ணே. இப்போது உங்களுடைய ஒரே ஒரு படம்தான் வைத்திருக்கிறார் என்றார்.

நான் பிரபாகரனிடம் ஒன்றும் கேட்கவில்லை. தனி ஈழம் அமைந்த பிறகு, ஐ.நா. சபைக்கு ஈழத்தின் தூதுவராக என்னை அனுப்புங்கள். அங்கு சென்று தமிழனுக்காக நான் பேச வேண்டும் என்றேன். ஏன் அண்ணா, இதுகூட நாங்கள் செய்ய மாட்டோமா? தமிழீழம் அமைந்தால் உங்களை நாங்கள் தூக்கி வைத்துக்கொண்டாட மாட்டோமா? என்றார்.

அந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அனைத்துலக மனித உரிமைச் சங்கம் என்ற பெயரில் பிரான்சிலிருந்து இன்று காலை சங்கொலிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். அதை நான் வாசிக்கிறேன்.

சங்கொலியின் 30 ஆண்டு நிறைவில் அதன் அளப்பரிய வரலாற்றுப் பணிக்கு ஈழத்தமிழர் நன்றியும் - வாழ்த்துகளும்,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு இயக்கமாகவும், அரசியல் கட்சியாகவும் கருக்கொண்ட காலத்திலிருந்து தமிழ்நாட்டு அரசியலில் தனது காத்திரமான முத்திரையைப் பதித்து வந்துள்ளது மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆழமான புரிதலோடும், தன்னலமற்ற அளப்பரிய அர்ப்பணிப்போடும் மறுமலர்ச்சி திமுக ஆதரித்து செயல்பட்டு வந்திருக்கிறது. அத்தகைய மதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ கொள்கை ஏடான சங்கொலியின் தொடர்ச்சியான பணி 30 ஆண்டுகளாக ஒரு தனி வரலாறு. தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கும் பெரு நட்புக்குரியவரான பேராற்றல் நிறைந்த மதிமுக தலைவர் வைகோ அவர்கள் மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரும், மதிமுக தோழர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றியுள்ள அளப்பரிய வாழ்நாள் வரலாற்றுப் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் தன்னிகரற்றவை. வார்த்தைகளால் இலகுவில் விவரித்துவிட முடியாத அளவுக்கு அளப்பரியவை உன்னதமானவை. அந்த பங்களிப்பின் சாட்சியமாக சங்கொலி விளங்குகிறது.

அவ்வாறான ஒரு ஏட்டின் 30ஆம் ஆண்டு நிறைவில் அதன் பணி தொடர்ந்தும் வெற்றிகரமாக நீண்டு சிறக்கவும் ஈழத்தமிழர்கள் சார்பாக, விடுதலைப் புலிகள் சார்பாக எமது அமைப்பு சங்கொலியை மனமாற வாழ்த்துகிறது.

ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலைகளையும், தொடர்ந்து அங்கு நடைபெற்ற பண்பாட்டு இன அழிப்பையும் சர்வதேச நீதியை வலியுறுத்தவும் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு என்ற நிலைப்பாட்டை தமிழ்நாட்டின் உறுதியாகத் தொடர்ந்து முன்னெடுக்கவும் தொடர்ந்து சங்கொலி தனது கருத்தியல் பணியை சிறப்பாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.

திக்கெட்டும் எதிரொலிக்கட்டும் சங்கொலி! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு! வெல்க தமிழீழம்!

வணக்கம்.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.

திக்கெட்டும் எதிரொலிக்கட்டும் சங்கொலி முழக்கம்! - சங்கொலி 30 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் வைகோ உரை | சங்கொலி