வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

நூற்றாண்டு காணட்டும் 'சங்கொலி'

நூற்றாண்டு காணட்டும் 'சங்கொலி'

திராவிட இயக்கக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இதழ்களின் பங்கு முக்கியமானது என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. நீதிக்கட்சியின் திராவிடன் இதழின் தொடர்ச்சியாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வார இதழான சங்கொலி கடந்த 30 ஆண்டுகளாக இயக்கத்தின் குரலாகச் செயல்பட்டு வருகிறது. அரசு நூலகங்களில் சங்கொலி இடம்பெற தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு தற்போது அனைத்து நூலகங்களிலும் இதழை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்று, சங்கொலி நூற்றாண்டு காண வாழ்த்துகிறது.

பத்திரிகைகள் என்பது செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு மட்டுமல்ல; கொள்கைகளைப் பரப்புவதற்கும் பயன்பட்டு வருகிறது.

அந்த வகையில், திராவிடர் இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் ஏடாக நீதிக்கட்சியின் ‘திராவிடன்’ முதலில் பவனி வந்தது.

Justice என்ற ஆங்கில ஏட்டின் தமிழ்ப்பெயரால்தான், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நம் தாய் அமைப்பு நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்டது.

நீதிக்கட்சியின் நீட்சியான நம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அதிகாரப்பூர்வ வார ஏடாக ‘சங்கொலி’ இதழ் 30 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கிடையில் வீறுநடை போட்டு பயணம் தொடர்கிறது.

நெடுங்காலமாக அரசு நூலகங்களில் நம் ‘சங்கொலி’ இடம்பெறுவதில்லை என்ற குறையை நிவர்த்தி செய்யுமாறு வேண்டிய நம் இயக்கத் தலைவர் வைகோ அவர்களின் கடிதத்தை கடந்த ஆட்சியின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் மூன்று முறை நேரில் சந்தித்து அளித்து வற்புறுத்தினேன். இதன் விளைவாக ஒருசில நூலகங்களில் மட்டும் ‘சங்கொலி’ இடம்பெற வாய்ப்பளித்தனர்.

தற்போது நடைபெறும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில், அனைத்து நூலகங்களிலும் ‘சங்கொலி’ இடம்பெறச் செய்வோம் என்று அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அறிவித்திருப்பது நமக்கு தேனினும் இனிக்கிறது.

‘சங்கொலி’யின் 30ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படும் வேளையில் மேற்கொண்ட இந்த அறிவிப்புக்காக, தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி!

நூற்றாண்டு காணட்டும் ‘சங்கொலி’!

நூற்றாண்டு காணட்டும் 'சங்கொலி' | சங்கொலி