வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டப்பணிகளுக்கான கோரிக்கை தொடர்பாக துரை வைகோ எம்.பி., கள ஆய்வு

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டப்பணிகளுக்கான கோரிக்கை தொடர்பாக துரை வைகோ எம்.பி., கள ஆய்வு

2026–2027ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (MPLADS) திட்டப் பணிகள் தொடர்பாக திருச்சி எம்பி துரை வைகோ 30.06.2026 அன்று திருவெறும்பூர் மற்றும் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் (2026-2027) ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (MPLADS) திட்டப் பணிகளுக்கான கோரிக்கைகள் தொடர்பாக 30.06.2026 அன்று காலை பல்வேறு இடங்களில் கள ஆய்வு துரை வைகோ எம்.பி., மேற்கொண்டார்.

முதலில், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோழமாதேவியில் பழுதடைந்த 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை நேரில் ஆய்வு செய்தார். அப்போது அங்கே இருந்த தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணிக்கு தேவையாக ஒரு தள்ளு வண்டியும், ஒரு மின் குப்பை வாகனமும் தேவைப்படுவதாக கூறினர். அதற்கு உரிய பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். தொடர்ந்து, நாவல்பட்டு ஊராட்சி அண்ணாநகரில் பழுதடைந்த 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும் பார்வையிட்டு, புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்கான தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அங்கே இருந்த தூய்மைப் பணியாளர்கள் தங்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் இதனை உரிய முறையில் பரிசீலனை செய்ய அதிகாரிகளை கேட்டு கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, குண்டூர் பகுதியில் உள்ள MIET கல்லூரி அருகே மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் நீண்டநாள் கோரிக்கையான பேருந்து நிழற்குடை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அப்போது அங்கே உள்ள உயர்மின் கோபுர விளக்கு எரியாமல் உள்ளதை எனது கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு வந்ததையடுத்து உடனடியாக அதை சரி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நங்கவரம் பேரூராட்சி தீரன் நகரில் பழுதடைந்த 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும், அல்லித்துறை ஊராட்சியில் பழுதடைந்த 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும் நேரில் பார்வையிட்டு, அவற்றிற்கு மாற்றாக புதிய தொட்டிகள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கே கழிவு நீர் வடிகால் அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு உரிய நிதி அடையாளம் காணப்பட்டு மூன்று மாதங்களில் நடைமுறை படுத்த வேண்டும் என்ற உறுதியை அதிகாரிகளிடம் பெற்றார்.

தொடர்ந்து, சிறுகமணி பேரூராட்சி பெட்டவாய்த்தலை பகுதியில் பொதுமக்கள் கோரிக்கையின் அடிப்படையில் இரண்டு புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பதற்கான இடங்களை ஆய்வு செய்தார். மேலும், அப்பகுதி மயானத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது தொடர்பான கோரிக்கையையும் நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, சிறுகமணி பேரூர் செயலாளர் மெடிக்கல் பெரியசாமி அவர்களின் தாயார் அண்மையில் மறைவுற்றதையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, தேவையான வளர்ச்சித் திட்டங்களை விரைவாக செயல்படுத்த தொடர்ந்து களத்தில் செயல்படுவேன் என்று துரை வைகோ எம்.பி., கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டப்பணிகளுக்கான கோரிக்கை தொடர்பாக துரை வைகோ எம்.பி., கள ஆய்வு | சங்கொலி