வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

நல்லாட்சி என்பது மக்களின் உயிரையும் உரிமைகளையும் காக்கும் அறநெறி ஆட்சியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. தசரதன், பாண்டியன் நெடுஞ்செழியன், மனுநீதிச் சோழன் போன்ற மன்னர்கள் தங்களது சொந்த நலனை விட நீதிக்கும் மக்களின் நலனுக்கும் முன்னுரிமை அளித்ததை எடுத்துக்காட்டுகிறது. அதேவேளையில், துரியோதனனின் அநீதி ஆட்சி இறுதியில் அழிவைச் சந்தித்ததை நினைவுபடுத்துகிறது. இறுதியாக, வள்ளலார் விரும்பிய கருணை, சமத்துவம் மற்றும் அறநெறி நிறைந்த ஆட்சியே மக்கள் வளமாகவும் ஒற்றுமையாகவும் வாழ வழிவகுக்கும் என வலியுறுத்துகிறது.

மக்களின் உயிரை உணவும், பருகும் நீரும் மட்டும் காப்பதில்லை. இந்த உலகத்தின் உயிராக இருந்து செங்கோல் ஆட்சி புரியும் மன்னனும்தான் காக்கின்றான் என்கிறார்.

கீழ்கண்ட வரிகளில் புறநானூற்றுப் புலவர் மோசிகீரனார், அறநெறி தவறாமலும் குற்றமேதும் இழைக்காமலும் வீரத்துடனும் மானத்துடனும் ஆட்சி புரியும் மன்னர்களைவே

‘முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்’

என்று கடவுள் நிலைக்கு உயர்த்துகிறார் வான்புகழ் கொண்ட வள்ளுவன்.

முடியாட்சியிலும் மக்கள் நலனை முன்னிறுத்தித் தன் நலனைப் பின்னுறுத்தி மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள் என்பதை நம் இலக்கியங்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றன. அவற்றுள் சில: இராமன் கதையில் தசரதன்

வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்

உயிரெலாம் தம் உயிர் ஒப்ப ஓம்பலால்,

செவியிலா உலகினில் சென்று நின்று வாழ்

உயிரெலாம் உறைவதோர் உடம்புமாயினான்

செல்கின்ற உயிர்களுக்கு மட்டுமல்ல; ஒரே இடத்தில் நிற்கின்ற தாவரங்களுக்கும் உயிராகவும் உடம்பாகவும் இருந்தான் என்கிறான் கவிச்சக்கர வர்த்தி கம்பன். அது மட்டுமல்ல சிறிய நிலம் வைத்திருக்க பவன் எப்படி கண்ணும் கருத்துமாய் பாதுகாப்பானோ அப்படி மக்களைப் பாதுகாத்தான் என்பதை,

"வரிஞன் ஓம்பும் ஓர் செய் என மாநிலம் முழுதும் இனிது அரசு செய்தான்" என்கிறார். சிலம்பில் பாண்டியன் நெடுஞ்செழியன்

தேரா மன்னனாக ஆராயாது அவசரத்தில் கோவ லனைக் கொன்றது தவறு என்றுணர்ந்த மாத்திரத் திலேயே ‘பொன்செய் கணிச்சி மணிமுடி தாழ வீழ்ந்தனன்’

‘மண்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது யானோ அரசன் - யானே கள்வன் - கெடுக என் ஆயுள்’ என்று செல்கின்ற தன்னுயிர் கொண்டு வளைந்திருந்த செங்கோலை நேர் செய்தான் பாண்டியன் நெடுஞ்செழியன் என்கிறார் தமிழ்க்காப்பியம் சிலம்பை நமக்குளித்த இளங்கோ அடிகள். சேக்கிழாரின் மனு நீதிச் சோழன்

மனுநீதிச் சோழனின் அரசை கூடியிருக்கிறது. ஆராய்ச்சி மணி ஒலிக்கிறது. செய்தி தெரிந்து வந்தவர்கள்,

‘வளவ! நின்புதல்வன் ஆங்கோர் மணி நெடுந்தேர்மேல் ஏறி அளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போகுங்கால் இளைய ஆன் கன்று தேர் இடைப்புகுந்து இறந்ததாகத் தளர்வுறும் இத்தாய் விழைத்தது இத்தன்மை’ என்று கூறுகிறார்கள்.

இளைய அரசிளங்குமரன் வீதி விடங்கனைக் காப்பாற்ற நரேசப் பிரயத்தனம்; முயற்சிக்கிறார்கள் மந்திரிகள். என்ன அருமையான வாதங்கள்!

நின் புதல்வன் என்று சொன்னால் ஒரு சமயம் பாசத்தில் இரக்கம் பிறக்க வாய்ப்புண்டு அல்லவா? அவன் ஏறிச் சென்றது சாதாரண தேர் அல்ல. ஏராளமான மணிகள் பூட்டிய தேர்கள். அவை எழுப்புகின்ற மணி ஓசைதூரத்தில் இருப்பவர்களையே விலகிச் செல்லச் சொல்லும். ஒரு தேர் மட்டும் செல்ல வில்லை. அளவில் அதிகமான (ESCORT) துணைத் தேர்களும் சென்று இருந்தன. அவன் சென்ற தெரு மற்றவர்களின் பயன்பாட்டுக்குள் ள தெரு அன்று. அரசுக்கு சம்பந்தப்பட்ட வர்கள் மட்டுமே உபயோகப் படுத்துகின்ற தெரு. விபத்தில் சிக்கியது துள்ளு துள்ளு என்று எப்பொழுதும் துள்ளிக் குதித் தோடிக் கொண்டே இருக்கின்ற பசுவின் கன்று. அதுவும் முதல் தெருவுக்கு முன்னால் ஓடி வந்து புகுந்திருந்தால் தேர்களை நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அது புகுந்ததவோ இடையில். வந்த தேர்களின் நடுவில் புகுந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

வெற்றிகரமான வாதங்கள் வைக்கப்பட்டன. பிராயச் சித்தமும் சொல்லப்பட்டது. 'Operation Success But Patient Died' என்பது போல நீதி வழுவா நெறிமுறை கொண்ட மன்னன் பகிர்கிறான்.

‘மாநிலங்காவலனாவான் மண்ணுயிர் காக்குங்காலை தானாதுங்கிடை யூறு தன்னால் தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் உயிர் தம்மால் கல்வரால் ஆன பயம் ஐந்தும் காத்து அறங்காப்பானல்லனோ’

இது மட்டுமல்ல. மீண்டும் சொல்கிறான்.

‘மற்றவர்களுக்கு என்ன நீதியோ அந்த நீதிதான் அரசாள்பவர்களுக்கும் உங்கள் பரிகாரத்தைக் கேட்டு நடந்தால் தருமத்திற்கு சலிப்பேற்பட்டு சீ சீ சிறியர் செய்கை செய்தான் என்றிருக்கும் என்னை’

‘வழக்கென்று நீர் மொழிந்தால் மற்றதுதான் வலிப்பட்டுச்’

குழக்கன்றை இழந்தவரும் கோவுறு நோயும் மருந்தாமோ

இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லாரும் சொல்லிய இச்

சழக்கின்று நான் இசைந்தால் தருமந்தான் சலியாதோ!"

நீங்கள் சொல்கின்ற பரிகாரமெல்லாம் தன் கன்றை இழந்து வாழும் பசுவின் துன்ப நோய்க்கு மருந்தாகாது; அந்தத் தாய்தான் மகவை இழந்து ஆட்டுட்டுள்ள கடுந்துன்பத்திற்கு என் மகனை இழந்து நான் ஆளாவதுதான் சரியான தீர்வாக அமையும் என்று தன் மகனைத் தன் தேர்ச் சக்கரத்தை ஏற்றித்தானே கொன்று நீதியை நிலைநாட்டினான் என்றால் சேக்கிழார் கூறுவது போல அனுழந்த அரசாட்சி எளிதோ? மற்று அரிதோ?

நேர்மையான ஆட்சி கொடுத்தவர் களுக்கிடையில் கெடுமதி படைத்த, மற்றவர்களின் உரிமையைத் தட்டிப் பறித்து இறுதியில் தட்டழிந்து போனவர்களும் உண்டு என்பதை பாரதம் நமக்குக் காட்டுகிறது. வில்லியாத்துாராரின் துரியோதனன்

சூதாட்டத்தில் நாட்டை இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசமும், ஓராண்டு மறைவு வாழ்க்கையும் வாழ்ந்து முடித்த பின் தங்களுக்கு உரிமையான பங்கைக் கேட்க கிருஷ்ணனைத் தூது அனுப்பும்போது தருமன் சொல்கிறான்.

‘வெம்பனிக் கொடியோன் முதூரில் நடந்து புனல் நாட்டின் திறம் வேண்டு - நாடு ஒன்று நல்கானாயின் ஐந்து ஊர் வேண்டு அவை இல் எனில் ஐந்து இல்லம் வேண்டு - அவையும் மறுத்தால் அடுபோர் வேண்டு’

ஆனால் ஊசிமுனை அளவு நிலமும் கொடுக்க மறுத்தான் சூதுடன் துரியோதனன். இறுதியில் என்ன ஆனான்?

தொடை முறிக்கப்பட்டு உயிரிழந்தான்; தம்பியர்கள் அனைவரையும் இழந்தான்; நாட்டையும் இழந்தான். வள்ளலார் வேண்டும் ஆட்சி

புனைந்துரையாது பொய்கூறாது சத்தியம் சொல்கின்றார் வடலூர் வள்ளலார்.

‘ஒத்தாரும், உயர்ந்தோரும், தாழ்ந்தாரும் எவரும்

ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்’

என்கிறார் அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங் கருணை காட்டிய வள்ளல் பெருமான்

‘அருள் நயந்த நன் மார்க்கர் ஆள வேண்டும்

தெருள் நயந்த நல்லோர் நிலைத்த நலம்பெற வேண்டும்

நன்று நினைத்து எல்லோரும் இசைந்து வாழ வேண்டும்’

என்பது மட்டுமல்ல கருணையில்லா ஆட்சி கடூரி ஓடிய வேண்டும் என்றும் சபமிடுகிறார். நாம் விரும்புவது

இன்றைமை வருத்தும் இன்னல்கள் மாய வேண்டும்.

நன்மை வந்தெய்த வேண்டும் - தீதெலாம் நலிய வேண்டும்.

வாழ்க வையகம்!

வாழ்க வளமுடன்!