வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

மனதில் முகிழ்த்திடும் முப்பது ஆண்டுகள்

மனதில் முகிழ்த்திடும் முப்பது ஆண்டுகள்

வைகோ எழுதிய இந்தக் கட்டுரை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வார இதழான **'சங்கொலி'** 31ஆம் ஆண்டு பயணத்தை முன்னிட்டு எழுதப்பட்டுள்ளது. பத்திரிகைகளின் வரலாறு, உலகிலும் தமிழிலும் இதழியலின் வளர்ச்சி, திராவிட இயக்க இதழ்களின் பங்களிப்பு ஆகியவற்றை விரிவாக எடுத்துரைக்கும் அவர், 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சங்கொலி கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழர் உரிமை, சமூக நீதி மற்றும் இயக்கக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருவதை பெருமையுடன் நினைவுகூர்கிறார். தொடர்ந்து மக்கள் குரலாக முழங்கி, மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்தி கட்டுரையை நிறைவு செய்கிறார்.

இமைப்பொழுதும் நீங்காது என் இதயத் துடிப்போடும் இரத்தச் சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின் மணிகளே!

"காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான், இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணிற் வாய்ந்திடும் எழுச்சி நீதான்! ஊரினை நாட்டை இந்த உலகத்தினை ஒன்று சேர்க்கப் பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த பத்திரிகைப் பெண்ணே!"

  • புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

அன்னைத் தமிழின் சங்க இலக்கியத்தில் அவர் பரவுதல் செய்திப் பரவல்தான்.

மனிதன் தவி அழைத்தான்;

சீழ்க்கை ஒவியாற்றின்றான்

மணியடித்தான்

வானத்தில் தீ அம்புகளை விட்டான்

துவக்கத்தில் இப்படித்தான் செய்திகள் பரிமாறப்பட்டன.

நாட்டு மக்களிடையே நாள்தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகளை நானிலத்தை ஆள்பவர்கள் அறிந்துகொள்வதும், நாளும் நடைபெறும் செயல்.

எத்திக்கும் புகழ்மணக்கும் தித்திக்கும் திருக்குறளில் திருவள்ளுவப் பெருமான் சொல்கிறார்,

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்

  • திருக்குறள் 582

தன் நாட்டிலும், அயல் நாடுகளிலும் எல்லோரிடத்திலும் நடக்கிற எல்லா நிகழ்ச்சிகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டியது அரசனின் கடமை. (வல்லறிதல் - விரைவாக அறிதல்)

நீதிகேட்டு 1993 இல் நாம் இயக்கம் தொடங்கினோம்.

கண்ணின் மணிகள் நமது கழகத்தின் செய்திகளை அறிந்து கொள்ள ஏடு தேவைப்பட்டது; அவசியமானது. ஒளிரும் ஆண்டில் 02.02.1996 இல் திருவள்ளுவர் ஆண்டு 2027 தை 19 ஆம் நாள் 3 ரூபாய் 50 பைசா விலையில் அடியேனை ஆசிரியராகக் கொண்டு சங்கொலி வெளிவரத் துவங்கியது. (பொறுப்பாசிரியர் க.திருநாவுக்கரசு, துணை ஆசிரியர் அ.சௌரிராசன்)

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால்,

சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

என்ற துவக்க வரிகளுடன் 'தமிழ்க் குலத்தின் முத்திரைச் சங்கொலி' எனும் அடியேனின் கட்டுரை மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் அதிகார பூர்வ வார ஏடு சங்கொலியில் வந்தது.

வைகோ கடிதம்

சிலப்பதிகாரத்தில் அத்திமாலை சிறப்புச் செய்த காதையில் 78 ஆவது வரியில்,

"முள்ளெயிற் சங்கம முறை முறையூதப்"

முள் போன்ற கூரிய வாயையுடைய சங்கு தத்தம் முறைக்கேற்ப அடுத்தடுத்து ஒலிக்கும் என்பார் இளங்கோவடிகள்.

அரண்மனைகளில், ஆலயங்களில் பழந்தமிழ் நாட்டில் திருச் சங்குகள் ஒலித்தன.

"வலம்புரிச் சங்கம் விறலெடுத்து ஆர்ப்ப

புலம்பரிச் சங்கம் பொருளோடு முழங்க"

மணிமேகலை சங்கொலித்தது.

மகாகவி பாரதி,

"சங்கு கொண்டே வெற்றி ஊதுவோம்

தரணிக்கு எல்லாம் எடுத்து ஓதுவோம்"

என்று சங்கொலிக்கிறேன் என்றார்.

முதல் இதழின் சங்கொலி தலையங்கத்தில், "மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப் பூர்வ வார ஏடான சங்கொலி முழங்கத் தொடங்கி விட்டது.

ஒளியின் விரைவால் வைகறையின் இருள் மெல்லப் பிரிந்து உலகம் மனைத்தும் விளக்கு முற்றுப் பளிச்சென தெரிவதைப் போல சங்கொலி பணியாற்ற களத்தில் இறங்கி விட்டது. இது 1996!

இப்போது 30 ஆண்டுகள் கடந்துவிட்டன.

தமிழர்தம் இல்லம் எல்லாம், தமிழர் நம் இதயம் எல்லாம் சங்கொலி கேட்கத் துவங்கி முப்பது ஆண்டுகள் நிறைவுற்றுவிட்டது. மனதில் மகிழ்ச்சி.

தங்கு தடையின்றித் தொடர்ந்து வார இதழை, அதுவும் ஒரு இயக்கத்தின் சார்பில் வரும் இதழை நடத்துவதில் எத்தனை சிரமங்கள். அத்தனையும் தாண்டி இத்தாலையில் சங்கொலித்துக் கொண்டிருக்கிறது தொடர்ந்து.

"நண்பர் கோபால்சாமி (வைகோ) இத்துறையில் வேக்கன்காட்டி நிற்பதைக் காண பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு ஆசி கூறி ஊக்குவிக்க இராஜாஜி போன்றவர்கள் பெருந்தலைவர் காமராஜ் போன்றவர்கள் இல்லையே! என்பதுதான் என் குறை. மக்கள் இக் குறையைத் தீர்த்து வைப்பார்கள் என்ற உறுதி எனக்கு உண்டு"

இது அண்ணன் எஸ்.எஸ்.மாரிச்சாமி அப்போது தந்த வாழ்த்து இது.

'சங்கொலியே போர் முழக்கம்' என்று சந்தக் கவிதை பாடினார் தத்துவக் கவிஞர் அண்ணன் குடியரசு.

"காட்சிகள் மாறுபட்டாலும் கருத்துகள் மாறுபட்டாலும் தத்தம் எண்ணங்களை தெளிவாக மக்கள் முன் வைக்க வேண்டியது ஜனநாயக அரசியலில் ஓர் அடிப்படைத் தேவை. இந்த வகையில் தாங்கள் மேற்கொள்ளும் பணி பலன் தருவதாக!"

என்று அண்ணன் இர.செழியன் வாழ்த்துச் செய்தி அப்போது தந்தார்.

"மங்காத தமிழின மாண்புகள் சிறக்கவே

சங்கொலி! சங்கொலி! சங்கொலி

இங்குள்ள தமிழர்கள் இன்னல்கள்

தொலையவே

சங்கொலி! சங்கொலி! சங்கொலி

இன்பமூக செழிப்பறை கிழியவே

முனைப்புடன்

சங்கொலி! சங்கொலி! சங்கொலி

ஈழத் தமிழர்கள் வென்று முடிக்கவே

சங்கொலி! சங்கொலி! சங்கொலி!"

என்று கலைமாமணி கவிஞர் ந.மா.முத்துக்குமரன் அப்போது எழுதிய கவிதை வரிகளும் நினைவுக்கு வருகிறது.

பிரண்ட்லைன் ஆசிரியர் இந்து என்.ராம் சங்கொலி இதழை வெளியிட, அண்ணன் கலைப்புலி எஸ்.தாணு பெற்றுக் கொண்டார்.

சி.பி.ஐ.(எம்) என்.சங்கரய்யா, என்.வரதராசன், எஸ்.எஸ்.மாரிச்சாமி, கதேசிமித்திரன் நாகராஜன், நடிகர்கள் சத்யராஜ், எஸ்.எஸ்.சந்திரன், இயக்கு நர்கள் பாக்கியராஜ், மணிவண்ணன், ஆர்.சுந்தர் ராஜன் இன்ன பிறர் பேசிய பிறகு அடியேன் பேச, துணை ஆசிரியர் அ.சௌரிராசன் நன்றி கூறினார்.

தியாக நெருப்பிலே பிறந்த இந்த இயக்கத்தை அழிப்பதற்கு வடநாட்டிலேயே கிடையாது. காலாக் கிலியை கிடையாது. எதுவுமே கிடையாது; இது அறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கத்தின் தொடர்ச்சி. இது அடுத்த கட்டம் நாட்டுக்குத் தேவையான புதிய பரிமாணம்

என்று சங்கொலி வெளியீட்டு விழாவில் முதல் நாளன்று அடியேன் ஆற்றிய உரை இன்றும் அகம் மகிழ செய்கிறது. ஆண்டுகள் முப்பது கடந்தோடி விட்டன. மெல்ல மெல்ல பயணத்தைத் தொடர்கிறோம்.

உலகத்திலே முதன் முதலில் வெளிவந்த தினசரி பத்திரிகை சீனா பீகிங்கில் வெளியான டி சிங் பவோ (T Sing pco) எனும் அரசாங்கச் செய்தித்தாள்.

எழுத்துக்கள் செதுக்கப்பட்ட பிளாக்குகள் தயாரித்து வெளியிடப்பட்டது.

இன்றோ கம்ப்யூட்டர் (கணிணி) அச்சுத் துறை எவ்வளவு முன்னேற்றம் அகிலத்தில்.

இயேசு கிறிஸ்துவின் காலத்திற்கு முந்தைய ரோமாபுரியில் அரசாங்கம் அன்றாடம் கை பிரதி அறிக்கைகளை காரியாலயங்களில் ஒட்டி வைப்பர் Forum.

இவைகளுக்குப் பிரதிகள் எடுக்கப்பட்டு, ஊர் ஊராக அனுப்பப்படும். ஊழியர்கள் எடுத்துச் செல்வர். ஊதியமும் பெறுவர்.

இம்முறை செய்திக் கடிதங்கள். (News Letters) 18 ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நகரங்களில் நடைமுறையில் இருந்தது.

கூட்டன்பர்க் (Guten Berg) (கி.பி. 1398 - 1468) அச்சடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். செய்தித் துண்டுப் பிரசுரங்கள் (News Papers) வெளிவரத் தொடங்கின.

ஜெர்மனி தேசம் இதில் சிறப்பிடம் பெற்றது. கி.பி. 1609 இல் தொடங்கிய உறவு (Relation) மிகவும் பழைய பத்திரிகையாகும்.

ஜெர்மனி ஸ்ட்ராஸ்புர்க்கில் (Stras burg) இது தொடங்கப்பட்டது.

ஒழுங்காக செம்மையாக வெளியிடப்பட்ட பத்திரிகை 7 ஆம் நூற்றாண்டில் தோன்றியது.

கி.பி. 1621 இல் முதல் அச்சுப் பத்திரிகை ஆங்கிலத்தில் வந்தது- ஆங்கிலத்தில் Courant or Weekly News வாரச் செய்திகள் வெளிவந்தது.

கி.பி. 1655 இல் அரசவை நிகழ்ச்சிகள் அடங்கிய ஆகஸ்போர்ட் கெஜட் வெளிவந்தது.

எலிசபெத் மாலெட் (Elizabeth Mallett) என்ற அம்மையார் கி.பி. 1702 இல் (Daily Courant) தினசரி என்ற தினசரிப் பத்திரிகையை இங்கிலாந்தில் தொடங்கினார்.

கி.பி. 1785 இல் வால்டர் என்பவரால் உலக ரெஜிஸ்தர் (Daily Universal Register) பத்திரிகைத் தொடங்கப் பெற்றது.

லண்டனில் இருந்து வெளிவந்த லண்டன் டைம்ஸ், டெய்லி லண்டரஸ், டெய்லி மெயில்.

நம் நாட்டிலும் பின்னர் ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், மெயில் என்று வந்தது.

அமெரிக்காவில் முதன் முதலாக தோன்றிய பத்திரிகை Public Occurrences கி.பி. 1690 இல் போஸ்ட்டன் நகரில் பெஞ்சமின் ஹாரிஸ் (Benjamin Harris) என்பவரால் தொடங்கப்பட்டு, முதல் இதழ் வந்ததுமே அரசு அதனைத் தடை செய்தது.

டைம்ஸ் (Times) பத்திரிகை இன்று உலக அளவில் செல்வாக்குப் பெற்றுள்ளது.

ரஷ்யாவில் இஸ்வெஸ்டியா (Izvestia) பிரவ்தா (Pravda) சிறப்புப் பெற்றது.

போர்த்துக்கீசியர்கள் இந்தியா வந்தபோது அச்சு இயந்திரம் வந்தது. அதிலிருந்து கிறித்தவ மத சம்பந்தமான அறிக்கைகள் துண்டுப் பிரசுரங்கள் வெளி வந்தது.

கொல்கத்தாவில் 1780 ஜனவரி 29 இல் நமது வங்காளி துவக்கிய ஒரே மாதம் ஜேம்ஜ் அகஸ்துஸ் ஹீக்கி, வங்காள கெஜட் என்னும் இதழை வெளியிட்டார்.

கி.பி. 1785 அக்டோபர் 12 இல் சென்னையில் Madras Courier ரிச்சர்டு ஜான்ஸ்ட்ர்டர் கம்பெனி யாரால் வெளியிடப்பட்டது.

மும்பையில் கி.பி. 1789 இல் பம்பாய் ஹெரால்டு (Bombay Herald) வெளிவந்தது.

சென்னையில் இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் ஆங்கிலப் பத்திரிகை ஜி.சுப்பிரமணிய அய்யரால் கி.பி. 1878 இல் தொடங்கப்பட்ட The Hindu (தி இந்து). சென்னையில் தோன்றிய முதல் தமிழ்ப் பத்திரிகை கிறித்துவ மத சங்கத்தால் தொடங்கிய Tamil Magazine (தமிழிதழ்) ஆகும். சங்கொலி ஓர் அரிமா நோக்கு!

அமைச்சகம் முதல் தமிழ் வார இதழ்; இது வெளிவந்தது கி.பி. 1856.

முதல் தமிழ் மாத இதழ் ஜுனவி ஜோதினி வெளி வந்த ஆண்டு 1870.

முதல் தினசரி பத்திரிகை சுதேசமித்திரன். ஜி.சுப்பிரமணிய அய்யர் தொடங்கியது கி.பி.1882.

தமிழ் இதழ்கள் தோற்றம், வளர்ச்சி 19 ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள் நூற்றாண்டுகள் கண்ட தமிழ் இதழ்கள், தமிழ் கிருத்துவ இதழ்கள், இந்து சமய இதழ்கள், இஸ்லாமிய தமிழ் இதழ்கள் அ.மா.சாமி தந்துள்ள இதழ்களின் பட்டியல் வியப்பூட்டுபவையே.

இ.சுந்தரமூர்த்தி ம.ரா.அரசு தந்த இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள் நான்கு தொகுதிகளாகும்.

பொதுவுடைமை இயக்க இதழ்கள், மகளிர் இதழ்கள் தலா ஒரு தொகுதி ஆகும்.

மா.சு.சம்பந்தன் தந்த தமிழ் இதழியல் வரலாறு, நாள், கிழமை, திங்கள் இதழ் விளக்க வரிசை இன்னும் சில நூல்கள் கல்யாணசுந்தரனின் சில சுடர் இதழ்கள் சோமலேவின் தமிழ் இதழ்கள், பெ.சு.மணியார் பழந்தமிழ் இதழ்கள், ரா.அ.பத்மநாபனின் தமிழ் இதழ்கள், சு.பட்டாபிராமன், தி.மா.சரவணன் புலனாய்வு இதழ்கள் எல்லாம் தனித்தனியாக நூல் வடிவில் வந்துள்ளன.

1998 இல் திராவிட இயக்க இதழ்கள் க.திருநாவுக்கரசு (89 பக்கம்)

2002 இல் திராவிட இயக்க இதழ்கள் 216 பக்கம். - அ.மா.சாமி,

2005 இல் இ.சுந்தரமூர்த்தி, மா.ரா.அரசு இருவரும் தந்த திராவிட இயக்க இதழ்கள் 203 பக்கங்கள் முதல் தொகுதி, 195 பக்கங்கள் இரண்டாம் தொகுதி.

திராவிட இயக்க இதழ்களின் வரலாற்றை நமக்கு அறிவிக்கிறது.

திராவிட சீர்மை (1847)

திராவிட கோலப் (1895) வரை

14 இதழ்கள் திராவிட இயக்க இதழ்களுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றன.

சென்னையை அண்ணா அறிவாலய நூல் நிலைய நூல்கள் டி.கே.சுந்தரராஜன், 324 தமிழ் இதழ்களையும், 19 ஆங்கில நூல்களையும் பட்டியலிட்டு உள்ளார்கள்.

மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட திராவிட இதழ்கள் பட்டியலில் 84 இதழ்கள் வெளிவந்தது. திருநாவுக்கரசு வெளியிட்ட பட்டியலில் 257 இதழ்களைக் குறித்துள்ளார். அ.மா.சாமி 1250 இதழ்களை அகர வரிசையில் தொகுத்துத் தந்துள்ளார்.

அறிஞர் அண்ணா, திராவிட நாடு வார இதழ் துவக்கிய 1942 முதல் 1962 வரை திராவிட இதழ்களின் பொற்காலம் ஆகும்.

அனைத்தையும் குறிப்பிட்டால் அதுவே தனி நூலாகும்.

பெரியார் ஈ.வெ.ரா - குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, விடுதலை

அறிஞர் அண்ணா - திராவிட நாடு, காஞ்சி

கலைஞர் மு.கருணாநிதி - முரசொலி, முத்தாரம்

பேராசிரியர் க.அன்பழகன் - புதுவாழ்வு

நாவலர் இர.நெடுஞ்செழியன் - மன்றம்

கவிஞர் பாரதிதாசன் - குயில்

கவிஞர் கண்ணதாசன் - தென்றல்

திருமதி சத்தியவாணி முத்து - அன்னை

சிந்தனை சிற்பி சி.பி. சிற்றரசு - தீப்பொறி, தீச்சுடர்

கே.ஏ. மதியழகன் - தென்னகம்

இனம் பெரியார் ஏ.வி.பி.ஆசைத்தம்பி - தனியரசு

இரா.ம.அரங்கண்ணல் - அறப்போராட்டம்

ஏ.பி.ஜனார்த்தனம் - தோழன்

காஞ்சி மணிமொழியாரி, மா.இளஞ்செழியன் - நாயகம், போர்வாள்

ம.கோபால் - புதுமை முரசு

திராவிட இயக்க இதழ்கள் வரலாற்றில் தோன்றிய முதல் தமிழ் நாளேடு திராவிடன். வெளிவந்தது 01.06.1917.

1996 இல் நமது சங்கொலி தொடங்கப்பட்டு, 31 ஆண்டுகள் ஆகிவிட்டன.

"எதிர்ப்பு உணர்வு கொண்ட நான்கு செய்தித் தாள்கள் ஆயிரம் குத்து வாள்களைவிட அச்சத் தக்கவை என்பான் மாவீரன் நெப்போலியன்"

பத்திரிகையும், பள்ளிப் படிப்பும் அறிவு மரத்தின் இரண்டு வேறு கிளைகளாகும் என்பார் ஜேம்ஸ் பக்கலிங்கம்.

அறிஞர் தம் இதய ஓடை

ஆறுபோல் தன்னை மொண்டு

செறிதரும் மக்கள் எண்ணம்

செலுத்திட ஊன்றி ஊன்றிக்

குறுகிய செயல்கள் தீர்த்துக்

கூரியம் சிங்கச் செய்வாய்

நறுமண இதழ்ப் பெண்ணே உன்

நலம் காணார், ஞாலம் காணார்

  • புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

415 பருவ இதழ்களில் பாடல்கள் தந்திட்ட புரட்சிக் கவிஞரின் பொன் வரிகளால் நிறைவு செய்கிறேன்.

முப்பது ஆண்டுகள் கடந்து 31 ஆம் ஆண்டு காணும் சங்கொலி வாழ்க! வளர்க சங்கொலி முழக்கம்!

எழுச்சி சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!

பாசமுடன்

வைகோ