வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

திருச்சி - கீரனூர் இரயில் நிலையத்தில் துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு

திருச்சி - கீரனூர் இரயில் நிலையத்தில் துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு

கீரனூர் இரயில் நிலையத்தில் மழைநீர் தேக்கம், பழுதான கழிப்பறைகள், இருக்கை வசதி உள்ளிட்ட குறைபாடுகளை 29.06.2026 அன்று நேரில் ஆய்வு செய்து, உடனடி சீரமைப்பு நடவடிக்கைகளை ரயில்வே அதிகாரிகளுக்கு துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீரனூர் ரயில் நிலையத்தில் 29.06.2026 அன்று துரை வைகோ எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, ரயில் நிலைய நுழைவாயில் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பது கண்டறியப்பட்டது. இதனை உடனடியாக மண் நிரப்பி சீரமைக்குமாறும், எதிர்காலத்தில் மழைநீர் தேங்காத வகையில் தரை மட்டத்தை உயர்த்தி, சரியான சாய்வுடன் நிரந்தர தீர்வு ஏற்படுத்துமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, பயணிகள் பயன்படுத்தும் கழிப்பறைகளை ஆய்வு செய்தார். கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததுடன், சுத்தமும் பராமரிப்பும் இல்லாதது கண்டறியப்பட்டது. அவற்றை உடனடியாக சுத்தம் செய்து, தொடர்ந்து பராமரிப்பதை உறுதி செய்யுமாறும், குவளை மற்றும் வாளிகளை உடனடியாக வழங்குமாறும் ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பயணிகள் காத்திருப்பு அறையில் பழுதான மற்றும் சுத்தமற்ற இருக்கைகள் இருப்பதை கண்டறிந்தார். அவற்றை அகற்றி புதிய இருக்கைகள் அமைக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். மேலும், நடைமேடை முழுவதும் பயணிகள் வசதிக்காக மேற்கூரை அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அதேபோல, ரயில் நிலைய நடைமேடையில் மழைநீர் தேங்காத வண்ணம் சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் பதிலளிக்கையில், வரவிருக்கும் ரயில் நிலைய மறுசீரமைப்புத் திட்டத்தில் இதனை இணைத்து செயல்படுத்துவதாக தெரிவித்தனர்.

ஆய்வின்போது, ரயில் நிலையம் மற்றும் வாகன நிறுத்துமிடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். சிசிடிவி அமைக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினார். மேலும், ரயில் நிலையத்தின் முன்புறத்தில் மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை விரைவாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் நிறைவில், ரயில் நிலையத்தை பயன்படுத்தி வந்த பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பொதுமக்களின் தேவைகளை விரைந்து நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று துரை வைகோ எம்.பி. கூறினார்.

திருச்சி - கீரனூர் இரயில் நிலையத்தில் துரை வைகோ எம்.பி. நேரில் ஆய்வு | சங்கொலி