பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் நான் நேரில் கண்ட நற்பண்புகளில் ஒன்று - தன்னினும் மூத்த கட்சித் தலைவர்களை, தோழர்களை மிகுந்த மரியாதையுடன் எதிர்கொள்வது; நடத்துவது. ஒரு வடிவமைப்பாளனாக சங்கொலி இதழில் 1998 ஆம் ஆண்டில் பகுதி நேர ஊழியனாகப் பணியாடத் தொடங்கிய நான், மெய்ப்புத் திருத்துநராகவும், கார்டூனிஸ்ட்டாகவும் பணியாற்றத் தொடங்கினேன். 'வளவன்' என்ற புனைப்பெயரில் 'சங்கே முழங்கு' என்ற கட்டுரையை எழுதியிருந்தேன். 'என் இதயத்துடிப்போடும் ரத்த சுழற்சியோடும் கலந்துவிட்ட கண்ணின் மணிகளே...' என்று விளித்து வாரம் தவறாமல் கழகத் தோழர்களுக்கு பொதுச் செயலாளர் தீட்டிய நூற்றுக்கணக்கான 'வைகோ கடிதங்களை' வடிவமைக்கவும், பிழை திருத்தவும், வாசிக்கவும் வாய்த்த நாள்கள் இப்போதும் நெஞ்சில் இருக்கின்றன. க.திருநாவுக்கரசு, சோதிப்பிரகாசம், பொன்னேரி இராமு, நெடுமாறன், புலவர் வெற்றியழகன், பாவலர் பல்லவன், வி.கே. பாலகிருஷ்ணன், கவிஞர் குடியரசு, தண்ணன் மூஸா, மா.பா. பாண்டியன், மதுரா, செ.திவான், மணிவேந்தன், ஈட்டிமுனை இளமாறன் போன்றோரின் பங்களிப்புகள் சங்கொலியை உயர்த்தின. அலுவலக மேலாளர் தோழர் ருத்ரன் தலைமையில், மோகன்தாஸ், யுவராஜ், சேர்மத்துரை, பாலு, கணபதி, பாடாலிங்கம், சரவணன், அமுதன், மாணிக்கம், இளங்கோவன், பைண்டர் கிருஷ்ணன், வில்லியம்ஸ் ஆகியோரின் உழைப்பு மறக்க முடியாதது. சங்கொலி 31 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது.

அண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்
திருவனந்தபுரம் டாக்டர் அப்துல்கலாம் கல்வி மையத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான அப்துல்கலாம் தேசிய விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை இராயபுரம் ரம்ஜான் மஹாலில் 29.07.2026 அன்று நடைபெற்றது.
மேலும் படிக்க »





